Store
  Store
  Store
  Store
  Store
  Store

பிரசாதம் என்பது என்ன...?



குருஜி அவர்களுக்கு, வணக்கம். பொதுவாக சுவாமிக்கு படைக்கும் பொங்கலை, அரிசியில் செய்வது சரியா? கோதுமையிலும் செய்து படைக்கலாமா?

இப்படிக்கு,
சங்கீதா,
விழுப்புரம்.



சுவாமிக்கு படைக்கும் சாதத்திற்கும், நாம் உண்ணுகிற சாதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. நீங்களும் நானும் சாப்பிட்டால் அதன் பெயர் சாதம். சுவாமிக்கு படையல் செய்தால் அதன் பெயர் பிரசாதம்.

பிரசாதம் என்ற இந்த வார்த்தையிலேயே நல்ல பதில் அடங்கி இருக்கிறது. அரிசியில் வடிப்பதை மட்டும் தான் சாதம் என்று சொல்வோமே தவிர, கோதுமையில் செய்வதற்கெல்லாம் வேறு பெயர்கள் இருக்கின்றன.

இறைவனான பரமசிவனுக்கு பிச்சை போட்ட அன்னை பராசக்தியின் பெயர் அன்னபூரணி. சாதம் எப்படி அரிசியை மட்டும் குறிக்குமோ அதே போலதான் அன்னம் என்பதும் அரிசியை மட்டுமே குறிக்கும் பெயராகும்.

அன்னையின் பெயரிலும் அன்னம் இருக்கிறது. ஆண்டவனுக்கு படைக்கும் பொருளின் பெயரிலும் சாதம் இருக்கிறது. எனவே, அரிசியில் சமைத்தால் மட்டும்தான் பொங்கல் இறைவனுக்கு நைவேத்தியம் அதுமட்டுமே ஆகும்.

மற்ற பொருட்கள் எல்லாம் நமது விருப்பத்தின் அடிப்படையில் படைக்கபடுவதாகும். அரிசி சாதம் மட்டுமே சாஸ்திரப்படி பிரசாதமாக கருதவேண்டும்.





Contact Form

Name

Email *

Message *