Store
  Store
  Store
  Store
  Store
  Store

பூஜையறையில் பூனை வரலாமா...?
   குருஜி அவர்களுக்கு, வணக்கம். பூஜை அறையில் பூனை, நாய் போன்ற செல்லப் பிராணிகளை சிலர் அனுமதிக்கிறார்கள். இது சரியா? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

இப்படிக்கு,
இந்துமதி ,
டெல்லி .
றைவன் படைப்பில் பூனை, நாய், மனிதன் என்று எல்லோருமே சமம் தான். பூனையின் உயிர் அரைகிலோ எடை. மனிதனின் உயிர் இரண்டு கிலோ எடை என்ற பாகுபாடு கிடையாது.

ஆனாலும், பூனை நாயின் உடல் அமைப்பு வேறு. மனிதனின் உடல் அமைப்பு வேறு. உயிரில் சமம் வைத்த இறைவன் உடம்பில் வைக்கவில்லை. எனவே அவைகள் இடத்தில் நாம் செல்வதோ, நம் இடத்தில் அவைகள் வருவதோ அவ்வளவு சரியல்ல.

பூஜையறை என்பது புனிதமான சிந்தனைகளை தருகின்ற இடமாக இருக்கவேண்டும். அங்கு பூனை அண்ணாச்சி வந்துபோனால் அவர் எலியை பிடித்துக்கொண்டு உள்ளே வருவார். ஏதாவது இடுக்கில் செத்த எலியை போட்டுவிட்டு போய்விடுவார். புனித எண்ணம் வருவதற்கு பதிலாக துர்நாற்றம் வரும். இது தேவையா? என்பதை சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.
Contact Form

Name

Email *

Message *