( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பிரச்சனைகளை தீர்க்கும் மஹாயாகம் !
  டிமாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோவில்களில் எல்லாம் அபிஷேகமும், ஆராதனையும், கூழ்வார்த்தலும், ஆரவாரத்தோடு எல்லா வருடங்களும் போல இப்போதும் நடக்கப் போகிறது. ஆடிமாதத்திற்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. காவேரியில் பெருகிவரும் நீர் வருடம் தோறும் வரக்கூடிய செழுமையை மக்களுக்கு அறிவிக்கும். இந்த வருடமும் அதே போல அமையும் என்றாலும், ஆடிப் பெருக்கு என்பது நதியை வரவேற்கும் சடங்கு மட்டுமல்ல. நமது முன்னோர்களின் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் கூட அதில் கவித்துவமாக அடங்கி இருக்கிறது. இதை நமது பழந் தமிழ் இலக்கியங்கள் மிக அழகாக கூறுகின்றன.

ஆடி அமாவாசையில் புனித நீராடுவதும், பாவங்களை போக்க புனித ஷேத்திரங்களுக்கு பயணம் செல்லுவதும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், தொன்றுதொட்டு நடக்கும் நிகழ்ச்சியாகும். ஆடி அமாவாசையிலும், தை அமாவாசையிலும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது ஏன் மிகச் சிறந்த நிகழ்வாக கருதப்படுகிறது என்று பலரும் யோசிப்பார்கள். அந்த நாட்களுக்கு அப்படி ஒரு சிறப்பு இருப்பதற்கு மிக அழகான காரணம் ஒன்று இருக்கிறது.

மகாபாரதத்தில் மாவீரன் கர்ணன் எல்லாவிதமான தர்மங்களையும், தானங்களையும், மரணமடையும் நேரம் வரையிலும் செய்து கொண்டே இருந்தான். நிலம் கேட்டவர்களுக்கு நிலம் கொடுத்தான். பசு கூட்டங்களை வேண்டியவர்களுக்கு கொடுத்தான். தானியங்களை தானமாக வழங்கினான். பொற்காசுகள், வைர குவியல்கள், நவரத்தின ஆபரணங்கள் என்று ஏராளமான பொருட்களை தானமாக வாரி இறைத்தான். ஆனால், அவன் வாழ்நாளில் ஒருமுறை கூட அன்னதானம் செய்யவில்லையாம். அதனால் அவன் வீரசொர்க்கம் சென்றவுடன் சகல சுகமிருந்தும் தீராத பசியால்  அவதிப்பட்டானாம்.

அதை அறிந்த எமதர்மராஜன், உனது இடதுகை ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள். பசி இருக்காது என்றாராம். கர்ணனும் அப்படி செய்தான் பசியும் பறந்து விட்டது. கர்ணனுக்கு ஒரே ஆச்சர்யம் அறுசுவை உணவும், பால் பழமும், பசியை போக்கும் இது இயற்கை. ஒரு விரலை வாயில் வைத்தவுடன் பசியில்லாமல் போய்விட்டதே இது என்ன விந்தை என்று ஆச்சரியப்பட்டு எமதர்மனிடம் அதற்கான காரணத்தை கேட்டானாம். அதற்கு எமன், நீ உயிரோடு வாழ்ந்த போது பசியால் வருந்திய ஒருவனுக்கு அன்னசத்திரம் செல்வதற்கு உன் இடதுகை ஆள்காட்டி விரலால் வழிகாட்டினாய். அதனால் உனக்கு அன்னதானத்தின் சிறிய பயன் விரலில் ஒட்டிக் கொண்டது அதன் விளைவே இது என்று விளக்கம் கூறினானாம்.

பசியாறுவதற்கு வழிகாட்டியதற்கே இத்தகைய பயன் என்றால் பசியாற உணவு வழங்கினால் எத்தகைய பலன் கிடைக்குமென்று நினைத்து பார்த்த கர்ணன் எமனிடம் ஒரு வரம் கேட்டான். சொர்கத்திலிருக்கும் எனக்கே அன்னதானம் செய்யாததன் பாவக் கறை படிந்திருக்கிறது என்றால் நரகத்திலிருக்கும் ஆத்மாக்களை பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களும் பசியால் துடிப்பார்கள். எனக்கு வழிகாட்டியதை போல, சகல ஆத்மாக்களுக்கும் நீ வழிகாட்ட வேண்டுமென்று எமனிடம் கேட்க, எமன் கர்ணனின் தியாக எண்ணத்தை மெச்சி தை, புரட்டாசி, ஆடி போன்ற அமாவாசை காலங்களில் உன்னை தலைமையாக கொண்டு பிதுர் உலகத்து எல்லா ஆத்மாக்களுக்கும் பூமிக்கு சென்று அவரவர் சந்ததியினர் கொடுக்கின்ற தர்ப்பண பிண்டங்களை ஏற்றுக்கொண்டு பசியில்லாமல் வாழுங்கள் என்று வழிகாட்டினாராம்.

அதாவது இந்த மாதத்தில் வரும் அமாவசை அனைத்து மாதத்தில் வரும் அமாவாசையை போன்று சாதாரணமானது அல்ல. நமது முன்னோர்கள் பூமிக்கு வருகின்ற புனிதமான அமாவாசை. இத்தகைய ஆடி அமாவாசையில் அவர்களுக்காக நாம் செய்கின்ற சடங்குகள், நிச்சயம் அவர்களை நற்கதி அடைய வைக்கும். நற்கதி அடையும் அவர்கள் நம்மை ஆசிர்வாதம் செய்வார்கள். அதனால், நமக்கு இந்த பிறவியில் செய்துவருகின்ற பாவத்தின் சம்பளமும் குறையும். சென்ற பிறவியில் நாம் செய்து முடித்த பாவங்களின் சுமையும் கரையும். எனவே ஆடி அமாவாசை சகல பாவத்தை நீக்கும் அமாவாசை எனலாம்.

நமது முன்னோர்கள் பிறவி எடுக்காமல், பிதுர் உலகில் இருந்தால் தர்ப்பணம் கொடுப்பதில் அர்த்தம் இருக்கிறது. அவர்கள் மீண்டும் பிறந்துவிட்டால் தர்ப்பணத்திற்கு என்ன தாத்பரிய பலன் இருக்கிறது என்று சிலர் நினைக்க கூடும். அந்த நினைப்பு நியாயமானதே. ஆனால், நமது முன்னோர்கள் பிறந்த இடத்தில் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இடர்களை எதிர்கொண்டு ஏங்கி கிடக்கலாம். அவர்களுக்காக இங்கு நாம் செய்யும் புண்ணிய காரியம் இன்று அவர்கள் உயிரோடு வாழ்ந்தாலும், அவர்களுக்கு போய் சேரும். அவர்களின் துயரமும் குறையும். அதனாலும் நமக்கு இரட்டிப்பு புண்ணியம் கிடைக்கும். எனவே எந்தவகையில் பார்த்தாலும், முன்னோர்களுக்கான கர்மகாரியம் செய்வது பலவிதத்திலும் நமக்கு நன்மையே.

இத்தகைய நற்கர்மாவை செய்யமுடியாத பலர் இருக்கலாம். அதற்கான வாய்ப்பு வசதிகள் கிடைக்காமல் பலர் இருக்கலாம். சாஸ்திரப்படி செய்யமுடியவில்லையே என்று வருந்துபவர்களும் இருக்கலாம். எப்படி செய்வது அதற்க்கான வழிமுறைகள் தெரியவில்லையே என்று குழப்பமாகவும் இருக்கலாம். அவர்கள் அனைவருக்காகவும் பித்ரு தோஷம், பூர்வ புண்ணிய தோஷம், சென்ற ஜென்மத்து கர்ம தோஷம் அனைத்தும் விலகுவதற்காகவும் வருகிற ஆடி அமாவாசை அன்று, அதாவது 14/08/2015   வெள்ளிக்கிழமை, பித்ரு சாந்தி மஹாஹோமம் நமது குருஜியால் நடத்தப்பட இருக்கிறது. அதில் நமது உஜிலாதேவி வாசகர்கள் தங்களது முன்னோர்களுக்காக சங்கல்பம் செய்து, பித்ரு தோஷ நிவர்த்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஆடி அமாவாசை சிறப்பு பித்ரு பூஜையில், முன்னோர்களுக்கு சாந்தி செய்ய நினைப்பவர்கள், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இன்று எதிர்கொண்டிருக்கின்ற பிரச்சனைகள், சிக்கல்கள், சவால்கள், சோதனைகள் என்று எதுவாக இருந்தாலும் அவற்றை மிக சுருக்கமாக குறிப்பிட்டு அனுப்புங்கள். உங்களது வேண்டுதல்களை, உங்கள் முன்னோர்களிடமோ ஹோமத்திற்கான அதி தேவதையிடமோ பிரார்த்தனைகளாக வைத்து சிறப்பு மந்திர வழிபாடு நடத்தி உங்கள் துன்பங்கள் மாற வழி ஏற்படுத்துவோம்.


இந்த பூஜையில் பங்குபெற நீங்கள் செய்யவேண்டியது இது தான் யாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களது பெயர், அவர் இறந்த திதி, அவருக்கும் உங்களுக்கும் உள்ள உறவு, இதில் எதாவது ஒன்று தெரியவில்லை என்றாலும் பாதகமில்லை. உங்களுக்கும் - அவருக்கும் உள்ள உறவுமுறையை எழுதினால் கூட போதுமானது. இறந்தவர்களின் புகைப்படங்கள் உட்பட பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி இருந்தால் மிகவும் விசேஷம் இல்லையென்றாலும்கூட பாதகமில்லை. இதில் மறக்க கூடாதது சாந்தி செய்ய விரும்பும் உங்கள் பெயர், உங்கள் தகப்பனார் தாயார் பெயரும் பூர்வீக ஊரின் பெயரும் கண்டிப்பாக எழுதவும்

உங்களது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சிறப்பு ஹோமம் செய்து, பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பிரசாதத்தை இந்தியாவில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்க சொன்னாலும் அனுப்பபடும். அல்லது வெளிநாட்டு முகவரிக்கு கூட அனுப்பலாம். வெளிநாட்டு அன்பர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். 


10/08/2015 க்குள் விபரங்களை அனுப்புபவர்களுக்கு மட்டுமே பூஜை செய்யப்படும். பூஜைக்கான காணிக்கை வழக்கப்படி நீங்கள் விரும்பியதை, உங்களால் முடிந்ததை அனுப்பி வையுங்கள்.  


  • மிக முக்கிய குறிப்பு :-


      இந்த பித்ரு பூஜையில் பங்குபெற நினைக்கும் நேயர்கள் 10/08/2015 ஆம் தேதி வரையில் தங்களது முன்னோர்களை பற்றிய விபரங்களை அனுப்பலாம்.

  • காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-
காசோலை அல்லது டிடி Guruji என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும் 

  • வங்கி முகவரி :-

                NAME - Guruji
                A/C NO - 0106301000035874,
                LAKSHMI VILAS BANK,
                IFSC CODE - LAVB0000106,
                ARAKANDANALLUR.


  • தபால் முகவரி :-
                குருஜி,
                4/76 C காமராஜ் சாலை, 
                அரகண்டநல்லூர்   - 605752,
                திருக்கோவிலூர்  (தாலுக்கா),
                விழுப்புரம் மாவட்டம்,
                தமிழ்நாடு.

  • மின்னஞ்சல் முகவரி :-


  • தொலைபேசி எண் :-
+91 - 9442426434


இப்படிக்கு 
சதீஷ் குமார் 
+ comments + 1 comments

Anonymous
06:45

26-09-2015

குருஜி அவர்களுக்கு,

இறந்த போன முன்னோர்களுக்கு மாத்திரம் செய்வது பித்ரு பூஜை என்றால் இளம் வயதில் அகாலமரணம் அடைந்தவர்களுக்கும் இந்த பூஜை செய்யலாமா அல்லது வேறு விதி முறைகள் உண்டா
M..Suvi

ாemail: suntharasai@gmail.com

மறுபடி எப்போது பித்ரு பூஜை செய்வீர்கள இன்று தான் உங்கள் படைப்பை வாசித்தேன்


Next Post Next Post Home
 
Back to Top