( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தடைபட்ட திருமணம் நடக்க !
குருஜி ஐயா அவர்களுக்கு, வணக்கம். என் மகளுக்கு இருபத்தி எட்டு வயது ஆகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. வருகிற வரன் எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தினால் நின்றுவிடுகிறது. என் மகளின் திருமணத் தடை நீங்கி, நல்லபடியாக அவள் வாழ்க்கை அமைவதற்கு என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.

இப்படிக்கு,
கோதாவரி,
வத்தலகுண்டு.த்தம பிராமணன் என்று சிலரை அழைப்பார்கள். பிராமணனின் வயிற்றில் பிறந்திருந்தாலும், பிராமணனுக்குரிய, சடங்கு சம்பிரதயாங்களை அவன் செய்து வந்தாலும், அவனை உத்தம பிராமணன் என்று சொல்ல இயலாது. காரணம், எவன் சதா சர்வ காலமும், பகவானை நினைத்துக் கொண்டும் வேத சம்ரஷ்னம் செய்து கொண்டும், ஒழுக்கத்தோடு தர்ம நியதிப்படி வாழுகிறானோ அவனே உத்தம பிராமணன்.

அப்படி என்றால் இன்றைய காலத்தில், அப்படி ஒருவனை தேடி பிடிப்பது மஹா கஷ்டம் என்று யாரும் ஒதுங்கி விட வேண்டாம். நான் கூறுகிற லட்சணப்படி பிராமணர்கள் இல்லாமல் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றும் சில அப்ரானிகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒருவரை நவராத்திரி நேரத்தில், வீட்டுக்கு அழைத்து வந்து, அவர் கையால் அம்பாளுக்கு தீபம் ஏற்றி, பூஜைகளை செய்யச் சொல்லி திருமணம் தள்ளிப்போகும் பெண்ணோ, பிள்ளையோ நமஸ்காரம் செய்து, ஆசிர்வாதம் பெற்ற பிறகு, அவரால் திருஷ்டி சுற்றுவது போல் தேங்காயை தலையை சுற்றி வாங்கிக் கொண்டு அந்த தேங்காயை பத்திரமாக பூஜை அறையில் வைக்க வேண்டும். வைக்கப்பட்ட தேங்காய், ஒரு மாதத்தில் அழுகிவிட்டால் அதை நீர் நிலையில் போட்டுவிட வேண்டும். அழுகாமல் நல்ல நிலையில் இருந்தால், மூன்றாவது மாதத்தில் நீர் நிலையில் போட்டுவிட வேண்டும். அப்படி செய்த நாளிலிருந்து ஐந்து மாதத்திற்குள் கண்டிப்பாக தடைபட்ட திருமணம் நல்லபடியாக நடக்கும். நல்ல வாழ்க்கை அமையும்.

Next Post Next Post Home
 
Back to Top