Store
  Store
  Store
  Store
  Store
  Store

திருமணம் நடக்குமா? நடக்காதா?ன்புள்ள குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் என் வயது முப்பத்தாரை தொட போகிறது இன்னும் திருமணம் நடக்கவில்லை ஏதாவது காரணத்தால் தடைபட்டு கொண்டே போகிறது எனக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா என்று தயவு செய்து நீங்கள் கூறவும். 

இப்படிக்கு 
வசந்தகுமார் 
திருப்பதி சில வாழ்க்கையில் சாதாரணமாக நடக்க கூடிய நிகழ்சிகள் கூட சுலபமாக நடப்பதில்லை மிகவும் வலுவான பாறையை சம்மட்டிகொண்டு அடிப்பது போல அடித்தாலும் ஒரு அங்குலம் கூட நகர்வது இல்லை இதற்க்கான காரணம் மனிதர்களாகிய நமக்கு சுலபமாக தெரிவதில்லை 

பொதுவாக ஜாதகத்தில் எட்டு இரண்டு ஆகிய இடங்களில் ராகு கேது சம்மந்தபட்டிருந்தால் திருமணம் சுலபத்தில் கூடிவராது தேவையில்லாத காலதாமதம் ஏற்படும் உங்களது ஜாதகமும் இதை தான் காட்டுகிறதே தவிர நீங்கள் திருமணமே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் இருப்பீர்கள் என்று எந்த கிரகமும் சொல்லவில்லை 

வருகிற புரட்டாசிமாத அமாவாசை தினத்தன்று ராமேஸ்வரம் அல்லது காசிக்கு சென்று உங்கள் முன்னோர்களுக்கு முறைப்படியிலான சாந்திகளை செய்யுங்கள் உங்களை தாக்கிவரும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடலாம் அப்படி விடுபட்டால் தடைபட்டு நிற்கும் திருமணம் உடனடியாக நடக்க வாய்பிருக்கிறது.

Contact Form

Name

Email *

Message *