( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பயம் போக பரிகாரம் !
ன்பான குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். என் மகளுக்கு பதின்மூன்று வயது நடக்கிறது. எதற்கெடுத்தாலும் பயப்படுகிறாள். பள்ளியில் தனது சக வயது குழந்தைகளிடம் கூட பழகுவதற்கும், விளையாடுவதற்கும் அச்சப்படுகிறாள். அவசரத்திற்கு தனியாக கடைக்கு சென்றுவா! என்றாலும் கூட நடுங்குகிறாள். எப்போதும் அவளுக்கு அம்மா, அப்பா, தம்பி என்று யாரவது ஒருவர் துணை வேண்டும். துணை இல்லாமல், அவளால் எதுவும் செய்ய முடிவதில்லை. இதனால், அவளுக்கு படிப்பும் கெடுகிறது. பல வாய்ப்புகளும் கிடைக்காமல் போகிறது. மனோதத்துவ சிகிச்சைகள் கொடுத்துப் பார்த்தும் ஒன்றும் பலனில்லை. கடைசியாக உங்களையும், கடவுளையும் நம்பி இந்த கடிதம் எழுதுகிறேன். நல்ல வழியை காட்டி உதவுமாறு மண்டியிட்டு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
பார்கவி நம்பிராஜன்,
சென்னை.குழந்தையாக இருக்கும் போது சரியாக உண்ணுவதில்லை, அடம்பிடிக்கிறது என்று பல காரணங்களுக்காக குழந்தைகளை மிரட்டி பயமுறுத்தி விடுகிறோம். சில நேரங்களில் நமது பயமுறுத்தல்கள் அதீதமான விளைவுகளை கொடுத்து, குழந்தைகளின் வாழ்க்கை முறைகளையே சின்னா பின்னமாக்கி விடுகிறது.

பயம் என்பது தேவையில்லாத உணர்ச்சி என்று நான் கூறவரவில்லை. நெருப்பை பார்த்தால், தண்ணீரை பார்த்தால் குழந்தைகள் சிறிது பயப்பட வேண்டும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். அதற்காக வருங்காலத்தில் கோவில் திருவிழாவில், தீப்பந்தம் பிடிப்பதை பார்த்தாலே பின்னங்கால் பிடரியில் படுமாறு ஓடும் அளவிற்கு பயம் இருக்கிறது என்றால் அது கவனிக்க வேண்டிய விஷயம்.

உங்கள் குழந்தை அதிர்ஷ்டவசமாக இன்னும் முற்றிய நிலையை அடையவில்லை என்று நினைக்கிறேன். அவளுக்கு இப்போது தேவை மனோ தத்துவ சிகிச்சை அல்ல. உங்களது அன்பும், அரவணைப்பும். பொதுவாக பெண்குழந்தைகளுக்கு தாய் சொல்வது தான் வேதவாக்காக இருக்கும். எனவே, நீங்கள் அவளுக்கு பயத்தினால் ஏற்படும் கேடுகளை மிரட்டாமல் இதமாக, பதமாக சொல்லுங்கள். உடனடியாக இல்லை என்றாலும் சிறிது சிறிதாக அவள் புரிந்து கொள்வாள்.

மேலும் நீங்கள் அருகில் உள்ள லஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று, பானகம் நிவேதனம் படைத்து வழிபடவும். நரசிம்மரின் தீர்த்தத்தை குழந்தையின் முகத்தில் தெளிக்கவும். இல்லையென்றால் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் சன்னதிக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, தயிர் சாத நிவேதனம் படைத்து வழிபடவும். அவளின் பயம் சிறிது சிறிதாக முற்றிலும் விலகிவிடும்.Next Post Next Post Home
 
Back to Top