( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பொருத்தம் இல்லாத திருமணம் நடத்தலாமா...?குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது பத்துவிதமான பொருத்தங்களை பார்கிறார்கள் அவற்றில் முக்கியமான ஏதாவது ஒரு பொருத்தம் இல்லை என்றாலும் இந்த ஜாதகம் வேண்டாம் என்று புறக்கணித்து விடுகிறார்கள் எனது தம்பிக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் ஜாதகத்தை பல ஜோதிடர்களிடம் கொடுத்து பொருத்தம் பார்த்தோம் அனைவருமே இந்த ஜாதகம் பொருந்தாது வெறும் மூன்று பொருத்தங்கள் மட்டுமே இருக்கிறது என்று ஒதுக்கி விட்டார்கள் ஆனால் என் சித்தப்பா அவருக்கு ஜோதிடம் தெரியும் என்பதனால் இந்த  பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் கண்டிப்பாக பொருத்தம் இருக்கிறது இருவரும் நன்றாக வாழ்வார்கள் என்று பிடிவாதமாக கூறி திருமணத்தை நடத்தி வைத்தார் இன்றுவரை தம்பதிகள் எந்த சிக்கலும் இல்லாமல் இறைவனது அருளால் நன்றாக இருக்கிறார்கள் பொருத்தமே இல்லாத ஜாதகத்தை பொருத்தி வைத்து திருமணம் செய்து வைத்த என் சித்தப்பாவின் செயல் ஒருபுறம் ஆச்சரியமாக இருக்கிறது என்றாலும் ஜாதக பொருத்தங்கள் இல்லாத போது எந்த பொருத்தத்தை அடிப்படையாக வைத்து அவர் திருமணத்தை நடத்தினார் என்று அறிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறது. இதை உங்களிடம் கேட்டால் தான் தெளிவு பிறக்கும் என்பதனால் கேட்கிறேன் தயவு செய்து சரியான விளக்கம் தாருங்கள்.

இப்படிக்கு 
சபரிநாதன் 
அமேரிக்கா 
திருமணம் என்பது ஜாதகத்தால் நிச்சவிக்க படுகிறதோ இல்லையோ சொர்க்கத்தில் அதாவது இறைவனிடத்தில் நிச்சவிக்க படுகிறது இருந்தாலும் நமது மன திருப்திக்காக ஜோதிடம் ஜாதகம் என்று பார்துகொண்டிருக்கிறோம் என் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் ஜாதகம் என்பதே கிடையாதாம் பொருத்தம் பார்த்து திருமணம் நடத்த வேண்டும் என்று கூட அன்று யாரும் நினைக்கவில்லையாம் ஆனாலும் இருவருக்கும் திருமணம் நடந்து ஐந்து குழந்தைகள் பெற்று அவர்கள் மூலம் நிறைய பெற குழந்தைகளை பார்த்து கொள்ளுபேரன் பேத்திகள் வரையிலும் நிம்மதியாக சந்தோசமாக எந்த வித சிக்கலுமின்றி கண்ணார கண்டார்கள் 

இதனால் தெரிவது என்னவென்றால் இறைவனால் பார்த்து சேர்க்கப்படும் ஜோடிகள் இயற்கையாக முளைக்கும் மரங்களை போல செழுமையாக வளர்வார்கள் மற்றவர்கள் அனைவருமே பதியம் வைக்கப்பட்ட செடிகள் போலதான் என்பது என் கருத்து இருந்தாலும் ஜாதகத்தை பொருத்தவரையில் பத்து பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்யலாம் இல்லை என்றால் சரிவராது நம்புவது ஒருவகையில் சரியல்ல காரணம் ஜோதிட சாஸ்திரம் தசவிகிகத பொருத்தங்கள் என்பதை பொதுவான கருத்தாக சொல்கிறதே தவிர இறுதியான உறுதியான கருத்தாக எந்த இடத்திலும் கூறவில்லை. 

திருமண பொருத்தம் பார்ப்பதற்கு தசவிகித பொருத்தம் என்பதை தவிர வேறு சில வகைகளும் இருக்கிறது ஆணின் ராசியும் பெண்ணின் ராசியும் சமமான சப்தமாக இருந்தால் வேறு எந்த பொருத்தங்களையும் பார்க்க வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது மேலும் ஆண்  ராசிக்கு பெண் ராசி ஏழாவது ராசியாக இருந்தால் இருவருக்கும் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படும் என்றும் இதனால் இருவரும் மிக நெருக்கமாக வாழ்வார்கள் என்றும் பல  ஜோதிட நூல்கள் கூறுகின்றன கேள்வி கேட்டவருடைய சித்தப்பா அந்த வகையில் பார்த்து திருமணத்தை நிச்சயம் செய்திருக்கலாம் அதனால் மணமக்கள் நல்லபடியாக வாழலாம் எது எப்படி இருந்தால் என்ன? வாழ்பவர்கள் நன்றாக வாழ்ந்தால் அதுவே பெரிய சந்தோசம்.Next Post Next Post Home
 
Back to Top