Store
  Store
  Store
  Store
  Store
  Store

வா கண்ணா வா


லங்கை கட்டி ஆடி ஓடி வா வா !!!
உன் தாமரை பாதம் வீட்டில் பதிய வா வா !!!
உன் பிஞ்சு பாதம் தேடி தேடி வளர்ந்தேன் 
உன் திவ்விய நாமம் சொல்லி சொல்லி வாழ்ந்தேன் 

ஆயர் குலத்தினை காக்க 
மலையை குடையாய் பிடித்த 

கேசவா ஹரே மாதவா !!!

வேங்குழல் இசைத்து உயிர்களை 
இருளில் இருந்து மீட்க

கோபால பாலனே வா வா !!!
கோவிந்த நாதனே வா வா !!!

பாண்டவர் தூதனே 
பார்த்தனின் நேசனே

கேசவா ஹரே மாதவா !!!

பாவ விநாசனே 
பரம்பொருள் ஈசனே 

கோகுல பாலனே  வா வா !!!
கோவிந்த நாதனே வா வா !!!

கீதையை தந்தவனே 
இதயங்களில் நின்றவனே 

கேசவா ஹரே மாதவா !!!

வெண்ணையை உண்டவனே 
என்னை அணைத்திட 

கோகுல பாலனே வா வா !!!
கோவிந்த நாதனே வா வா !!!

பவளத் திருவாய்க்குள்ளே 
பாருலகம் முழுமையும் காட்டினாய் 

கேசவா ஹரே மாதவா !!!

உருளியில் கட்டுண்டு கிடப்பினும் 
உலகத்தவர் சாபம் போக்குவாய் 

கோகுல பாலனே வா வா !!!
கோவிந்த நாதனே வா வா !!!

யமுனை நதி ஓரத்தில் 
இளம் காற்றின் ஈரத்தில்

கேசவா ஹரே மாதவா !!! 

ராதா உன்னை தொடுவது போல 
நானும் தொடவே விரைந்து இங்கே 

கோகுல பாலனே வா வா !!!
கோவிந்த நாதனே வா வா !!!






Contact Form

Name

Email *

Message *