Store
  Store
  Store
  Store
  Store
  Store

கெட்டவன் கெட்டால் நல்லது நடக்கும்



ன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். என் குழந்தையின் ஜாதகத்தில் நீசபங்க ராஜயோகம் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி என்றால் என்ன? அது நல்லதா கெட்டதா? என்று எனக்கு புரியவில்லை. தயவு செய்து சரியான விளக்கம் கூறி எனது மனக் குழப்பத்தையும், அச்சத்தையும் போக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
கிருஷ்ணகுமாரி,
திருவனந்தபுரம்.



சில ஜாதகங்களில் ஒரு சில கிரகங்கள் நீசம் என்ற அமைப்பை பெற்றிருக்கும். அதாவது பகை என்ற நிலையை விட, நீசம் என்ற நிலை மிகவும் மோசமானது. கெட்ட பலனை பத்து மடங்கு கூட்டி தரவல்லது. அப்படி ஒரு ராசியில் குறிப்பிட்ட அந்த கிரகம் நீசத் தன்மையோடு இருக்கையில் அந்த ராசிக்குரிய கிரகம், வேறொரு ராசியில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நீசம் பெற்றிருக்கின்ற இந்த கிரகம் தனது தன்மையில் பங்கம் ஏற்பட்டு, மிகவும் சுபத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடும். அதை தான் நீசபங்க ராஜயோகம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று ஜோதிட பழமொழி ஒன்று கூறப்பட்டிருப்பதை அறிவீர்கள். உங்கள் மகன் ஜாதகத்தில் இருப்பதும் இதே விஷயம் தான். ஆகவே அச்சப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மிக விரைவில் நல்ல காலம் உங்கள் குழந்தைக்கு வருகிறது. உங்கள் குடும்பம் அதன் மூலம் நல்ல நிலையை அடையும்.








Contact Form

Name

Email *

Message *