Store
  Store
  Store
  Store
  Store
  Store

பேய்பிடித்த குழந்தைக்கு பரிகாரம் !




குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இரண்டு வயது வரையிலும் என் மகள் நன்றாக இருந்தாள். அதற்கு மேல் தற்போது ஏழு மாதங்களாக அழுது கொண்டே இருக்கிறாள். இரவில் உறங்கும் போது கூட அவள் சிணுங்குவதை அறிய முடிகிறது. குழந்தைக்கு உடம்பில் ஏதோ தொந்தரவு இருப்பது நன்றாக தெரிகிறது. ஆனால், அது இன்ன தொல்லை என்று அவளால் கூறமுடியவில்லை. எங்களாலும் அறிந்து கொள்ள இயலவில்லை. மருத்துவர்கள் உடம்பில் எந்த குறையும் இல்லை. அவள் மனதளவில் பாதிக்கபட்டிருக்கலாம் என்கிறார்கள். மூன்று வயது குழந்தைக்கு மன பாதிப்பு ஏற்படும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை என்று பெற்ற தாயான எனக்கு நன்றாக தெரிகிறது. இதை மருத்துவர்கள் ஏற்கவில்லை. அதைப்பற்றி நான் கவலையும் அடையவில்லை. இறைவன் என் குழந்தையின் சுககேட்டை நீக்கி அவளுக்கு நல்ல வாழ்க்கையை கூடிய சீக்கிரம் தருவான் என்று நான் நம்புகிறேன் குருஜி. குருஜி அவர்கள் தாயின் மனத்துயரத்தை நிச்சயம் அறிவார். எனக்கு நல்ல வழியை காட்டுவார் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை எழுதி காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
வசுமதி நம்பிராஜன்,
ஜெர்மன்.

ந்திரங்கள் என்பது சமஸ்கிருதத்தில் மட்டும் தான் இருக்கிறதா? மற்ற மொழிகளில் இல்லையா? அப்படியே இருந்தாலும் அந்த மொழி மந்திரங்களுக்கு மகத்துவம் உண்டா? என்று பல கேள்விகள் என்னிடம் கேட்கப்படுவது உண்டு. அவைகளுக்கெல்லாம் நான் சொல்லுகின்ற பதில் மந்திரங்கள் என்பது நீங்கள் நினைப்பது போல, கவிதைகளோ சூக்தகங்களோ கிடையாது. ஒரு கருத்தை சொல்ல பல வார்த்தைகளை இணைத்து வைத்திருக்கின்ற வாக்கியங்களும் கிடையாது. பிறகு அது என்ன? மந்திரம் என்பது ஆகாயத்திலிருந்து வருகிற ஒரு சத்தம். அது ஒரு சத்தமே தவிர அந்த சத்தத்திற்கு பொருளும் கிடையாது. அதற்கென்று தனியாக மொழியும் கிடையாது.

ஆகாயத்திலிருந்து வருகிற சத்தம் என்பதனால் அது எப்படி மனிதர்கள் அறிந்து கொண்டார்கள் என்ற கேள்வியும் கூடவே வருகிறது. மந்திரங்களை நமக்கு தந்தவர்களை “மந்திர திருஷ்டா” என்று அழைப்பார்கள். அதாவது மந்திரங்களை பார்த்தவர்கள் என்று இதன் பொருளாகும். எப்படி பார்க்க முடியும்? என்பது அடுத்த கேள்வி. கல்லை பார்ப்பது போல் மண்ணை பார்ப்பது போல் வெறும் கண்களால் மந்திரங்களை காண இயலாது. பிறகு, எப்படி காணமுடியும்?  ஞானக் கண்களால் மட்டுமே மந்திரங்களை பார்க்கலாம். ஞானக்கண் திறப்பதற்கு ஊனக் கண்ணை மூடவேண்டும். அதாவது நமது மனம், உடம்பு இரண்டும் தனது இருப்பை மறந்து ஆத்மாவோடு ஒருங்கிணையும் போது ஞானக்கண் மந்திரங்கள் காட்சி தருகிறது.

இதற்கு மொழி தேவையில்லை. பொருள் தேவையில்லை. உச்சரிக்கும் நாவும், கேட்பதற்கும் காதும் மட்டுமே தேவை. ஆரம்பத்தில் செவிச் செல்வமாக இருந்த மந்திரங்கள் பிற்காலத்தில் எழுத்து வடிவத்தை பெற்றது. அப்படி எழுதும் போது நிறைய மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் எழுதிவைக்க பட்டிருக்கின்றன. மற்ற மொழிகளில் குறைவாக இருக்கிறது. இது தான் பிரச்சனையே தவிர, மொழி ஒரு பிரச்சனையே அல்ல. மேலும் மந்திரத்தில் ஒரு வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்றால் அது அந்த வார்த்தைக்குரிய பொருளை மட்டுமே சுட்டிக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அங்கு பொருளை விட சத்தமே முக்கியம் வாய்ந்ததாகும். உதாரணத்திற்கு யானை வருகிறது என்ற வார்த்தை மந்திரத்தில் வருகிறது என்று வைத்து கொள்ளுங்கள். அது யானையின் வருகையை குறிக்கும் வார்த்தை என்று நினைக்க கூடாது. அந்த சத்தத்தை வெளிப்படுத்தும் சொற்கட்டு என்று தான் கருதவேண்டும். அதன் அடிப்படையில், தமிழ் மொழியிலும் நிறைய மந்திரங்கள் உண்டு.

திருஞான சம்மந்தரை பற்றி அறியாதவர்கள் தமிழ்நாட்டில் மிக குறைவு. ஒருவர் சம்மந்தரை அறியாமல் இருக்கிறார் என்றால் அவரை தமிழ்நாட்டின் உள் நாட்டு அகதி என்றே அழைத்து மகிழலாம். அப்படிப்பட்ட திருஞான சம்மந்தர்


மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருபரியலூரில்
விரிந்த மலர்சோலை வீரட்டத்தானே


என்ற ஒரு அழகான மந்திரத்தை ( இதை இந்த இடத்தில் மந்திரம் என்று தான் கூறவேண்டுமே தவிர செய்யுள் என்று கூறக்கூடாது)   சொல்லியிருக்கிறார். இந்த மந்திரத்தை பசுஞ்சானத்தில் செய்த விபூதியில் நூற்றியெட்டு முறை உச்சாடனம் செய்து உருவேற்றி, அழுதுகொண்டே இருக்கின்ற குழந்தைக்கு உடல் முழுவதும் பூசிவிடுங்கள். அமாவாசை துவங்கி மூன்று நாட்கள் இப்படிச் செய்தால் சில தீய சக்திகளினால் பாதிப்படைந்திருக்கும் உங்கள் குழந்தை பரிபூரண சுகம் பெறுவாள். அதற்கு வாசுதேவ கிருஷ்ணன் பூரண அருளாசியும் தருவான்.







Contact Form

Name

Email *

Message *