Store
  Store
  Store
  Store
  Store
  Store

சனியை வணங்கலாமா...?குருஜி அவர்களுக்கு, வணக்கம். எனது பூஜையறையில் சனி பகவானின் படத்தை வைத்து வழிபாடு செய்கிறேன். அப்படி செய்வது தவறு என்று பலரும் கூறுகிறார்கள். என் வாழ்க்கையிலும் பல இடர்பாடுகள் வருகின்றது. ஒரு வேளை சனி பகவானை பூஜையறையில் வைத்திருப்பது தான் காரணமோ என்று அச்சப்படுகிறேன். எனவே குருஜி அவர்கள் என் சந்தேகத்தை தீர்த்துவைக்கும்படி அன்போடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சதாசிவம்,
மதுரை.கொலை செய்தவனை விட, அவனை தூண்டிவிட்டவனை தான் முதல் குற்றவாளி என்று இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது. இதைத் தான் எய்தவனை விட்டு விட்டு அம்பை குறை கூறி என்ன பயன் என்று பழமொழி கேட்கிறது. நமக்கு வருகிற துன்பங்கள் அனைத்துமே, இன்பங்கள் அனைத்துமே நமது செயலால், அதாவது கர்மாவால் வருகிறது. இன்னாருடைய கர்மம் இப்படியாக இருக்கிறது. எனவே அவர்களுக்கான பலாபலன்களை கொடுங்கள் என்று நவக்கிரகங்களுக்கு இறைவன் கட்டளை போடுகிறான். அதைத்தான் கிரகங்கள் நிறைவேற்றுகின்றன.

கடவுளின் சேவர்களான, நவக்கிரகங்களை போற்றுவதும், தூற்றுவதும் அவைகளுக்கு போய் சேராது. கட்டளையின் கர்த்தாவான கடவுளை போய்தான் சேரும். காரண கர்த்தாவை பூஜையறையில் வைத்து, பெருமாளாக சிவனாக வழிபட்டால் யாரும் குறை கூறுவது கிடையாது. பாவம் சனி பகவான் அவரை பார்த்து மட்டும் எல்லோரும் புழுதி வாரி தூற்றுகிறார்கள். சனியினால் ஏற்படுகிற பாதிப்புகள் என்று பார்க்கும் போது கூட அவைகள் பாதிப்புகளாக தெரிவது இல்லை. படிப்பினையாகத்தான் தெரியும். நல்லது கெட்டதை சொல்லித்தருவதில், அடையாளம் காட்டுவதில் சனியைவிட சிறந்தவர் யாரும் கிடையாது. பொற்கொல்லன் தங்கத்தை அடிக்கிறான் என்பதற்காக அவனை தங்கத்திற்கு விரோதி என்று கூறமுடியுமா? ஆபரணமாக உருமாற்ற வேண்டுமென்றால் அடிக்கத்தான் வேண்டும். சனி பொற்கொல்லன் போல தான் நம்மை, அலங்காரப்படுத்தவே துயரத்தை தருகிறது. எனவே அவரது திருவுருவப்படத்தை வீட்டில் வைத்து வணங்குவது ஒன்றும் தவறல்ல. மனத் தூய்மையோடு அவரிடம் பிரார்த்தனையை வையுங்கள். கடவுளின் கிருபையால் உங்கள் துயரங்களை அவர் போக்குவார்.Contact Form

Name

Email *

Message *