( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கிருஷ்ணரின் கோகுல லீலை சரியா...?இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..

  கடவுள் என்று வணங்கப்படும் கிருஷ்ணர் கோகுலத்தில் பெண்களோடு லீலைகளில்  ஈடுபட்டது சரியான நிகழ்வுதானா...?

      என்ற கேள்விக்கு நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தந்தவர் திரு ராம் குமார் அவரை குருஜியின் சார்பில் பாராட்டுகிறோம் அவருக்கான பரிசினை நேரில்வந்து குருஜியின் கைகளால் பெற்றுகொள்ளலாம் அல்லது அவரது வங்கி முகவையை அனுப்பினாலும் நாங்கள் அதில் செலுத்தி விடுகிறோம்.

ராம் குமாரின் பதில் இதோ 

   

   ண்ணன் கோபிகை பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்டது சரியான நிகழ்வே.இதில் தவறு ஒன்று மில்லை.இந்த நிகழ்வின் மூலம் நாம் அறியப்படும் உண்மை எதுவென்றால் இறைவனை அடைய இதுவும் ஒரு வழி.உதாரணத்திற்கு நாம் ஸ்ரீ ராமகிருஷ்ணரை எடுத்து அவர் நமக்கு போதித்து விட்டு சென்ற வழியில் இதுவும் ஒன்று.தாசனாக,நண்பனாக,காதலனாக,சேவகனாக,கணவனாக இன்னும் பல விதமான வழிமுறைகளில் நாம் இறைவனை நினைத்து பக்தி செய்யலாம்.

இதில் கோபிகைகள் கண்ணனை லீலைகள் மூலம் தொழுதனர்.மனம் என்பது நமது ஆத்மாவின் படர்க்கை.அதைதான் மனம் என்று அழைக்கிறோம்.கோபிகைகள் எனும் ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை லீலைகள் மூலமாக சேவித்தனர்.அதனால் அவர்களுக்கு மோட்சம் உண்டாயிற்று.பக்தியால் மட்டும்தான் இறைவனை அடைய முடியும் என்றில்லை.காமம்,கோபம்.மோகம் போன்ற சக்திகளை இறைவனிடம் நோக்கி செலுத்தும் பொது,அது அவனுக்கு பக்தி செய்வது போன்றுதான்.நாம் இறைவனிடம் எதை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறோமோ,அவன் நம்மை நோக்கி 10 அடி எடுத்து வைத்து முன் வருகிறான்.அதனால் கோபிகைகள் மோகம் மூலம் கிருஷ்ணனை பக்தி செய்து சேவித்தனர்.அவர் அந்த மோகத்தை பக்தியாக எடுத்து கொண்டு லீலைகள் மூலம் அவர்களுக்கு இறைவன் எனும் ஆனந்தத்தை கொடுத்து முடிவில் பரமபதம் பேரானந்தத்தை கொடுத்தான்.இதை உணர்த்த நாராயணன் நமக்கு கொடுத்த திருவிளையாடல்..
இப்படிக்கு 
ராம் குமார்


+ comments + 8 comments

Dear friends,
God does not need any other individual or thing to be happy. All are stated to be within himself/herself.
In the absence of consistent scientific proofs, all the narrations by our sages (and viyasa) must be considered to be stories similar to panchadantra.
Nobody knows GOD fully. There are some truth in the of every holy (and common) man. But none of the version is complete.
It is something like the description of an elephant by blind people.
So we need not have to indulge seriously in such debates (whether his courtship with gopikas was right or wrong).
With due respect and best wishes
Yours sincerely
Dr.C.Mohanraj

கிருஷ்ணர் என்ற கடவுள் நம்பிக்கையே கற்பனை

கிருஷ்ணன் கோகுலத்தில் செய்தவைகள் அனைத்தும் விளையாட்டு தான். கடவுளுக்கு ஆண், பெண், மரம், பூ, செடி அனைத்தும் ஒன்று தான். கோகுலத்தில் பெண்கள் இருந்தார்கள் அவர்களுடன் விளையாடினார். இன்றும் கிராமபுரத்தில் மச்சினர்களும், மச்சிநிச்சிகளும் மனதில் சிறிதும் விகல்பமில்லாமல் கேலியும் கிண்டலும் செய்து விளையாடி கொண்டு தான் உள்ளனர். அது எல்லாம் தவறு அல்லவே. ஆகவே கிருஷ்ணன் கோகுலத்தில் பெண்களிடம் லீலைகள் செய்தார் என்பது சரி அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.
இப்படிக்கு
சேவியர், சென்னை

கண்ணன் கோபிகை பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்டது சரியான நிகழ்வே.இதில் தவறு ஒன்று மில்லை.இந்த நிகழ்வின் மூலம் நாம் அறியப்படும் உண்மை எதுவென்றால் இறைவனை அடைய இதுவும் ஒரு வழி.உதாரணத்திற்கு நாம் ஸ்ரீ ராமகிருஷ்ணரை எடுத்து அவர் நமக்கு போதித்து விட்டு சென்ற வழியில் இதுவும் ஒன்று.தாசனாக,நண்பனாக,காதலனாக,சேவகனாக,கணவனாக இன்னும் பல விதமான வழிமுறைகளில் நாம் இறைவனை நினைத்து பக்தி செய்யலாம்.இதில் கோபிகைகள் கண்ணனை லீலைகள் மூலம் தொழுதனர்.மனம் என்பது நமது ஆத்மாவின் படர்க்கை.அதைதான் மனம் என்று அழைக்கிறோம்.கோபிகைகள் எனும் ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை லீலைகள் மூலமாக சேவித்தனர்.அதனால் அவர்களுக்கு மோட்சம் உண்டாயிற்று.பக்தியால் மட்டும்தான் இறைவனை அடைய முடியும் என்றில்லை.காமம்,கோபம்.மோகம் போன்ற சக்திகளை இறைவனிடம் நோக்கி செலுத்தும் பொது,அது அவனுக்கு பக்தி செய்வது போன்றுதான்.நாம் இறைவனிடம் எதை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறோமோ,அவன் நம்மை நோக்கி 10 அடி எடுத்து வைத்து முன் வருகிறான்.அதனால் கோபிகைகள் மோகம் மூலம் கிருஷ்ணனை பக்தி செய்து சேவித்தனர்.அவர் அந்த மோகத்தை பக்தியாக எடுத்து கொண்டு லீலைகள் மூலம் அவர்களுக்கு இறைவன் எனும் ஆனந்தத்தை கொடுத்து முடிவில் பரமபதம் பேரானந்தத்தை கொடுத்தான்.இதை உணர்த்த நாராயணன் நமக்கு கொடுத்த திருவிளையாடல்.

இதற்கான எனது பதில் :
கிருஷ்ணனாகிய கண்ணன் பூரணமானவன்.. தன் பிறப்பு முதல் இறப்பு வரையில் தான் ஏற்றுக்கொண்ட அத்தனை பாத்திரங்களிலும் தனித்தன்மையானவனாகவும் அனைவரும் ரசிக்கத் தக்கவனாகவும், தனிப்பெருமை மிக்கவனாகவும் காட்சியளித்தான்.
இடையிடையே தன் அவதார நோக்கத்தினையும் வல்லமைகளையும் தேவையானபோதெல்லாம் வெளிப்படுத்தினான்.
தன் அவதார வல்லமையை வெளிப்படுத்திய தருணங்கள் நீங்கலாக மற்றைய போதிலெல்லாம் நம்மில் ஒருவனாகவும் தாம் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களில் சிறப்புடையவனாகவும் ரசிக்கத்தக்கவனாகவும் குறையொன்றும் இல்லாதவனாகவும் மட்டுமே ஜொளித்து நமக்கு வாழ்ந்து காட்டினான்.
குழந்தைகளின் சுட்டித்தனம் நம் அனைவரின் மனதையும் மயக்கி கட்டிப்போடக்கூடியது. குழந்தையின் சுட்டித்தனத்தை, பொய்க்கோபம் காட்டினாலும்கூட நாம் மீண்டும் மீண்டும் விரும்பி ரசிப்போம். நமக்குக் கோபமே வராது.
குழந்தைப்பருவத்தில் தம் பொல்லாத சுட்டித்தனத்தினால் அனைவரையும் மயக்கினான். கண்ணனின் தாயாரிடம் புகார் கூறினாலும் கூட, கண்ணன் நம் வீட்டிற்கு வெண்ணை திருட வரமாட்டானா என அவன் சுட்டித்தனத்தினை அனைவரும் ரசித்துவிரும்பும் வண்ணம் பொல்லாத சேட்டைகள் பல செய்தான்.
வளரும் பருவத்தில் தன் தனித்துவமான, நிபுணத்துவம் மிக்க இனிய புல்லாங்குழல் இசையால் ஆயர்பாடி பசுக்களையும் மற்ற கால்நடைகளையும் விலங்கினங்களையும் மனிதர்களையும் மட்டுமல்லாது சகல ஜீவராசிகளையும் மயக்கி கட்டுண்டு கிடக்க வைத்தான்.
காளிங்க நர்த்தனம் போல் எண்ணற்ற லீலைகள் பல செய்தான்..
இளம்பருவத்தில் கண்ணனின் கடைக்கண் பார்வைக்காக கோபியர்கள் ஏங்கும் வண்ணம் சிறப்புடையவனாகத் திகழ்ந்து லீலைகள் பல செய்தான். ஆனால் அவற்றில் நெறிபிறழ்ந்த வழி எதையும் அவன் நமக்கு போதிக்கவில்லை.
மண வாழ்க்கையில் அவன் வாழ்ந்த காலத்திற்கேற்ற நெறியான மண வாழ்க்கையையே வாழ்ந்தான்.
அர்ச்சுணனுக்கும் மற்றும் பாண்டவர்கள் அனைவருக்கும் நல் உறவினனாக கடைசிவரையில் தோள் கொடுத்து, “இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் உடனிருந்து, துயர்துடைக்க உரியன செய்வது உறவினர் கடமை” என்பதை நமக்கு உணர்த்தி, ஒரு நல்ல உறவினனுக்கு சிறந்த உதாரணமாக விளங்கினான். அவர்களின் துன்பங்களில் எல்லாம் ஆறுதல் அளிக்கும் அருமருந்தாக அவர்களின் அருகிலேயே இருந்தான்.
தூதுவனாகச் சென்ற போது ஒரு நல்ல தூதுவனுக்கு உரிய சாமர்த்தியங்களைக் கொண்டவனாகவும், தன்னை தூது அனுப்பியவர்களின் நோக்கத்தினை நிறைவேற்றிடும் கடமையை திறம்பட செய்திடும் வண்ணம் வார்த்தை ஜாலம் கொண்டவனாகவும், பக்குவம் கொண்ட வார்த்தையினை உதிர்த்து தன் சார்பிலானவர்களின் நியாயத்தினை எடுத்துரைப்பவனாகவும், ஒரு திறமையான நல்ல தூதுவனுக்கு இலக்கணமாகவும் திகழ்ந்தான்.
வளம் மிக்க துவாரகையின் சிறந்த அரசனாகத் திகழ்ந்து மக்களெல்லாம் செல்வவளம் மிக்கவர்களாகவும் மகிழ்ச்சியானவர்களாகவும் வாழும் வண்ணம் சிறந்த ஓர் ஆட்சி பரிபாலனத்தினைக் காண்பித்தான்.
தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு திறமையான சாரதியாகத் திகழ்ந்தான். மகாபாரதப் போர்க்களத்தில் அர்ச்சுணனுக்கு கிருஷ்ணன்தான் சாரதி என்ற தகவலை கேள்விப்பட்டவுடனேயே எதிர் முனையில் கிலி கொண்டவர்கள் அனேகம்.
சிறந்த ராஜதந்திரி.. போர்க்கலையில் சிறந்தவன்.. போர் வியூகங்கள் வகுப்பதில் மதிநுட்பம் நிறைந்தவன்...
மேலும், இதுவரையில் நமக்குக் கிடைத்துள்ள உபதேசங்களில் எல்லாம் தலை சிறந்த மேன்மையான உபதேசமான கீதையை நமக்குத் தந்தருளியவன்..

கண்ணனின் வெளிப்பாடுகளில் எதுதான் சராசரியாக இருந்துள்ளது? எல்லாவற்றிலும் சிறப்புடையவனாகவும் தனிப்பெரும் வல்லமை கொண்டவனாகவுமே திகழ்ந்தவன், தன் நெறி பிறழாத, கோபியர்களுடனான லீலைகளின் மூலம் அந்தப் பருவக்கண்ணனையும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் திகழ்ந்ததில் ஆச்சர்யம் என்ன உள்ளது?
அவனது ஒவ்வொரு அசைவும் லீலைகள் தானே.? கோபியர்களுடனான விளையாட்டுக்கள் மட்டுமேவா அவனின் லீலை? அவன் வாழ்க்கை முழுவதுமே அர்த்தம் பொதிந்த லீலைகள் தானே? இளம் பிராயத்துக்கண்ணன் கம்சனை வதம் செய்தது முதல் அவனது அவதார முடிவு வரையில் அவனின் ஒவ்வொரு அசைவும் லீலைகள்தானே?
தான் ஏற்றுக்கொண்ட அனைத்துப் பாத்திரங்களிலும் தன் சிறப்பினை பூரணமாக வெளிப்படுத்தி ஜொலித்தவன் இதில் மட்டும் குறை வைப்பானா அந்தப் பரிபூரணன்?
குழந்தைப் பருவம் முதல் அவதார முடிவு வரையிலும் அவனின் ஒவ்வொரு அசைவினையும் நாம் ரசிக்கத்தானே கிருஷ்ணாவதாரம் எடுத்தான்..?
எனவே அவனின் வரம்பு மீராத கோகுல லீலைகளையும் ரசிப்போம்.. அவனின் அனைத்து லீலைகளையும் காலமெல்லாம் தொடர்ந்து படித்தும் கேட்டும் லயித்திருப்போம்...
வாழ்வின் ஒவ்வொரு அசைவினையும் அர்த்தம் பொதிந்த லீலையாகக் கொண்ட மாயவனிடம் அவனின், கோபியர்களுடனான இளம்பிராயத்து நட்பு என்ற ஒரு பகுதி லீலையினை மட்டும் குறிப்பாக நோக்கி குற்றம் காண ஏதுமில்லை.
அவனை வணங்குபவர் மனம் விட்டுக் கசிந்துருகி “குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” எனப்பாடுவது போல அவனின் இந்த செயலிலும் நாம் காண குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...
-சுந்தரராஜ்,ஈரோடு.

குருஜி அவர்களின் கேள்விக்கான எனது மற்றொரு(இரண்டாம்) பதில்


கண்ணுக்கு காட்சியளிக்காமல் அருள்பாலிக்கும் இந்த கலியுக காலத்தில் கூட தன்மீது உண்மையான அன்பைப் பொழியும் தன் பக்தர்களைக் கைவிடாத அந்த பரமாத்மா, தன் அவதாரத்தின்போது தன் அவதார பூமியில் தான் வாழும் மண்ணிலே தான் வாழும் காலத்தில் தன்னுடன் உறவினர்களாய், தோழமைகளாய் மற்றும் சக மனிதர்களாய் தன் மீது அன்பு பாராட்டி தன்னை நேசித்து பூரித்த மானிடர்களுக்கு அருள் புரியாமலா போய்விடுவான்.
அவன் வாழ்ந்த காலத்தில் தன்னை நேசித்த பலருக்கும் அருள்புரிந்ததைப் போலவே, தன் குழந்தைப் பருவம் முதல் தன்னுடனேயே விளையாடிக்களித்த கோபியர் தன் மீது பொழிந்த எல்லையற்ற நேசத்தினையும் பகவான் மதித்து ஏற்றுக் கொண்டதாலேயே கோபியர்களுடன் நட்பு பாராட்டி அவர்களின் உண்மையான அன்பிற்கும் மதிப்பளித்தான். எனவே கிருஷ்ணரின் கோபியர்களுடனான லீலையில் நேசத்திற்கு அவன் கொடுத்த மதிப்பினையே காண முடிகிறது. குற்றம் கூற காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
-சுந்தரராஜ்,ஈரோடு.

Anonymous
11:02

திரு.ராம் குமார் அவர்களின் பதில்
"கடவுள் என்று வணங்கப்படும் கிருஷ்ணர் கோகுலத்தில் பெண்களோடு லீலைகளில் ஈடுபட்டது சரியான நிகழ்வு தானா?"
என்ற கேள்விக்கு பொருத்தமானதாகத் தோன்றவில்லையே..
"கடவுள் என்று வணங்கப்படும் கிருஷ்ணரோடு கோகுலத்தில் பெண்கள் லீலைகளில் ஈடுபட்டது சரியான நிகழ்வுதானா?" என கோகுலத்துப் பெண்களைக் குறித்து கேட்பதுபோல கேள்வியை மாற்றிப் போட்டுக்கேட்டால் இந்த பதில் பொருந்துகிறது.
பூபாலன்.தஞ்சாவூர்.


Next Post Next Post Home
 
Back to Top