( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஜாதிகளால் ஏற்படும் நன்மைகள் என்ன...?இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..


ஜாதிகளால் ஏற்படும் நன்மைகள் என்ன...?


      என்ற கேள்விக்கு நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தந்தவர் திரு ராம் குமார் அவரை குருஜியின் சார்பில் பாராட்டுகிறோம் அவருக்கான பரிசினை நேரில்வந்து குருஜியின் கைகளால் பெற்றுகொள்ளலாம் அல்லது அவரது வங்கி முகவையை அனுப்பினாலும் நாங்கள் அதில் செலுத்தி விடுகிறோம்.

ஜான்சன் செல்லத்துரையின் பதில் இதோ 

   

    ஜாதியின் கொடுமைகளை பற்றி விளக்கம் கொடுக்கவும் விமர்சனம் செய்யவும் நமது மக்கள் நன்றாக பழகியிருக்கிறார்கள் ஜாதி கொடுமைகளை பற்றி எந்த அளவு அறிந்திருகிறார்களோ அந்தளவு அனைவருக்கும் ஜாதி பற்று இருக்கிறது ஜாதி கிராமங்களில் தான் வாழ்கிறது நகரங்களில் செத்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் உண்மைக்கு எதிரான கருத்தாகும் கல்வி சாலை துவங்கி கல்லறை தோட்டம் வரையிலும் ஜாதி இங்கே உறுதியாக நம்பப்படுகிறது பின்பற்றபடுகிறது அதே அளவு ஜாதியிய எதிர்ப்பு வாதங்கள் பேசவும் படுகிறது. இது தான் நமது தேசத்தின் நிஜமான அரசியல்

ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று வாய்கிழிய பேசுகிற அரசியல்வாதிகளும் சரி கைதட்டி வரவேற்கின்ற தொண்டர்களும் சரி திரைமறைவுக்கு பின்னால் ஜாதியை வளர்ப்பதற்கு எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பது யாரும் அறியாத இரகசியமில்லை மனிதன் நிஜமாகவே இன்னொரு மனிதனை ஆளுமை செய்ய நினைக்கிறான் ஆட்சி செய்ய ஆசைபடுகிறான் அதனால் ஏற்பட்டது தான் ஜாதி கொடுமைகள் ஆனால் நிஜமாகவே ஜாதிகள் கொடுமை செய்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல

ஐரோப்பிய மக்கள் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்த காலத்திலேயே அரசியல் சித்தாந்த நெறியை வளர்த்தவர்கள் ஆசிய மேதைகள் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இந்திய சமூக அமைப்பு பண்பட்ட நெறிப்பட்ட சமூக அமைப்பாக வேருன்றி நின்ற சரித்திர காலத்தில் கூட வெள்ளையர்கள் வேட்டைக்காரர்களாக தான் இருந்தார்கள் அறிவு முதிர்ச்சி மிக்க இந்தியர்களின் கண்டுபிடிப்பே ஜாதி என்ற சமூக அமைப்பு

மனிதன் கூட்டமாக வாழுகின்ற இயல்பு படைத்த சமூக விலங்கு மனித சமூகம் நீடித்து வாழவேண்டும் என்றால் ஒற்றுமை மட்டுமிருந்தால் போதாது வேற்றுமையில் ஒற்றுமை இருந்தால் மட்டுமே சமூகத்தின் ஆயுள் தன்மையும் ஆரோக்கிய தன்மையும் நீடித்ததாக இருக்கும். எனவே தான் ஒவ்வொரு சமூக குழுவும் ஒவ்வொரு ஜாதியாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்ட ஜாதிகள் சிறு சிறு விரகுகட்டுகள் பெரிய விறகு கட்டை உதிர்ந்து போகாமல் காப்பது போல் காத்தது என்றால் அது மிகையில்லை.

உண்மை கசக்கும் ஆனால் அதை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது என்று இந்தியாவிலிருந்து முற்றிலுமாக ஜாதிகள் அழிக்கப்படுகிறதோ அன்று இந்தியாவின் ஆத்மாவான பண்பாடு முற்றிலும் மரணமடைந்து விடும் நம் தேசம் தேசமாக இருக்காது. ஜாதியில் ஒழிக்கப்பட வேண்டியது ஏற்ற தாழ்வுகளே தவிர வேறொன்றும் இல்லை. இந்த ஏற்ற தாழ்வுகள் பொருளாதார சிந்தனையின் அடிப்படையில் நிலவுடமை தத்துவத்தின் அடிப்படையில் உருவானதே தவிர இயற்கையானது அல்ல. எனவே இதை ஒழிப்பதில் இட ஒதிக்கீடு தனி சலுகைகள் சரியான பங்காற்றி நிறைவேற்றி விடும்.

ஆயினும் ஜாதிகளை ஒழிக்க முயற்சி செய்வது வீண் என்பதே என் கருத்து...

இப்படிக்கு 
ஜான்சன் செல்லத்துரை 
அமெரிக்கா


+ comments + 17 comments

Anonymous
10:41

ஜாதிகாளால் தீமைகள் தான் ஏற்படுமென்று வாதிடுபவர்கள் மத்தியில் ஜாதிகளாலும் நன்மைகள் உண்டா? என்று சிந்திக்க தூண்டிய உங்கள் கேள்விக்கு முதல் நன்றி உண்மைகளை உண்மையாக பேச வேண்டுமென்றால் ஜாதிகளால் இதுவரை இந்திய சமூகம் நன்மைகளையே அனுபவித்திருக்கிறது. அலெக்ஸ்சாண்டர் துவங்கி மவுன் பேட்டன் வரையில் அந்நிய ஆதிக்கம் இந்தியாவை அடிமைபடுத்திய போதும் இந்திய சமூக கட்டமைப்பு தனது சுய முகத்தை சுய இயல்பை இழக்காமல் இருப்பதற்கு ஜாதியே முக்கிய காரணம். இந்தியர்கள் மதத்தை மாற்றினாலும் மாற்றுவார்களே தவிர ஜாதிகளை மாற்ற மாட்டார்கள் அதனால் தான் இந்தியாவில் மதமாற்றம் என்ற கொடிய நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது.

ரமேஷ்பாபு
வேலூர்

கிராமங்களில் நடக்கும் வாய்க்கால் வரப்பு சண்டைகள் சிறிய அடிதடிகள் கிராமத்து எல்லைகுள்ளையே முடிவடைந்து நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு ஜாதிகள் முக்கிய காரணம்.

ஒவ்வொரு ஜாதிக்கும் தனிதனி பண்பாடுகள் உண்டு பண்பாடுகளின் மாறுபட்ட கலவைதான் சமூக அழகை பேணி காக்கிறது. ஜாதிகள் இல்லை என்றால் இந்த குழு பண்பாடுகள் மறைந்துவிடும். ஒழிக்க வேண்டியது ஜாதி வேற்றுமைகளையே தவிர ஜாதிகளை அல்ல.


உமாமகேஸ்வரி
காரைக்கால்

ஜாதி என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் பகுத்தறிவும் இருக்காது.... ஒழுக்கமும் இருக்காது விலங்குகளை போல யாரும் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் அண்ணன், தம்பி, மாமன் மச்சான், அக்கா, தங்கை என்ற உறவு முறைகள் இல்லாம் போய்விடும்.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றி இந்த பூமியில்.... தாய் தந்தை ஒன்றே......
மனித இனம் சிந்திக்க தொடங்கியபோது.... நாகரீகம் தோன்றியது.......
யார் யார் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வரைமுறை உண்டானது......

அதில்தான் ஜாதி உண்டானது.........
ஜாதியில் பல ஆயிரம் உட்பிரிவு உண்டானது....

காலப்போக்கில்...... பரந்து விரிந்து வாழ தொடங்கினார்கள்........

மீண்டும் காலபோக்கில் அவர்கள் இடையே... திருமண உறவுகள் ஏற்பட முனையும்போது......

அந்த ஜாதி உட்பிரிவுகள் அவர்களுக்கு நீ மாமன் முறை,...... நீ மச்சான் முறை..... நீ அண்ண தம்பி பங்காளி முறை.... என்று மிக தெளிவாக எடுத்து காட்டியது...... காட்டி வருகின்றது.

ஜாதி என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் இன்னும் சில நூறு ஆண்டில் நாம் அண்ணன், தங்கைக்கு, தம்பிக்கும் தங்கைக்கு திருமணம் செய்து வைக்கும் கேவளமான கலச்சாரம் ஏற்பட்டு விடும்.

எனவே ஜாதி தேவை.............. உட்பிரிவுகள் தேவை........ மதம் தேவை..... அப்போதுதான் தூய்மையான சமூகம் அமையும்........

மற்றபடி எவன் ஒருவன் நான் உயர்ந்த ஜாதி......... என்றும், இல்லை நான் தாழ்ந்த ஜாதி என்று ஆதாயம் தேடுகிறானோ.... அவன் தான் உண்மையான ஜாதி வெறி பிடித்தவன்........

எம்.வடிவேல் கிருஷ்ணகிரி....

இங்கு எழுதுவதற்க்கு காரணம்: இது அதிக மக்களுக்கு சென்றடையும் என்பதர்க்காகவும், உங்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என்பதர்க்காக மட்டுமே

http://magneticcaste.blogspot.in/

பல நூரு வருடங்கலுக்கு முன்னால்... மன்னர் ஆட்சி, ஜமிந்தார், நிலக்கிழார்கல் என பன்முக ஆட்சி நடந்த காலம். மக்கள் மன்னனையும், மன்னன் மக்களையும் நம்பியே வாழ்ந்திருந்த காலம்.. தற்பொழுது இருக்கும் முப்படை, காவல் துறை, ஏவல் துறை, மந்திரிகள் சபை.. என அப்பொழுதும் இருந்தது.. ஆனால் வேருவிதமாக.. ஆண்டி ஆண்டியாகவும்.. அடிமை அடிமையாகவும் வாழ நேரிட்டது.. அதுமட்டும் இல்லாது.. தகப்பன் தொழிலை அவன் வாரிசே செய்ய வேண்டும் என்ரொரு பழ்க்கமும் கடைப்பிடிக்கப்பட்டது... இது என்னவே எதார்த்தமாக தான் இருந்தது. மக்களும் 'செய்யும் தொழிலே தெய்வம்' என் எண்ணி சீரும் சிறப்புமாக செய்தான் தத் தம் கடமையை, கொள்கைப்படி அப்பனுக்குப்பின் பிள்ளைக்கு என வழ்ங்கப்பட்டது. ஆரம்பம்மானது 'சதி'.. ஆம்! எப்படி உயரிய இடத்தில் இருந்தவன் அதாவது அரசவையில் பணி புரிபவன் நான் தான் சிறந்தவன் என... சிலகாகிதம் அடைந்தான்.. உயர்ந்த சாதி எனவும் அடையாளப் படுத்தியும் கொண்டான் மக்களுக்கு சேவை செய்பவர்கள்.. குறைத்தும் 'கீழ் சாதி' என் முத்திரையும் குத்தப்பட்டது. 'இது எங்க கம்பெனி முத்திரை' என்பது போல் மனதில் வடு உருவாகிற்று.. [இன்னும் இந்திய அரசியலில் அரசர் ஆட்சி [குடும்ப அரசியல்] அரங்கேரிக் கொண்டுதான் உள்ளது. பல பல, புது புது.. சட்டம்.. என்ன பலன்... சா(ச‌)தி மட்டும் மானிடர்கலுக்கு பேரிடராய்த்தான் உள்ளது... அன்ரு விதை விதைக்கப்பட்டது... இன்றோ.. விசாலமாய்.. பல கிளைகல் விட்து.. பல விழுதுகலையும் விட்டு இன்ரும் செழிப்பாகத்தான் உள்ளது... மனிதனே... மானிடனே... நீ என்ன மிருகமா.. சிந்தி..

1. சாதி பற்றில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்குள் விட்டு கொடுத்து வாழ்கின்றார்கள்
2. சாதி சங்கம் அமைத்து அவர்கலுக்கு தேவையானவற்றை அவர்களே பூர்த்தி செய்து கொள்ளுகின்றார்கள். உதரணமாக: பள்ளி, கல்வி மண்டபம், தாங்கும் விடுதி மற்றும் இன்னும் பல.
3. சாதியினால் அவர் அவருக்கு உள்ள கோட்பாட்டின் படி கட்டுபடோடோடு வாழ்கின்றார்கள்.
4. ஒரு சில சாதியினர், தங்களில் பிந்தன்கியவர்கலுக்கு பணம் மற்றும் பொருள் உதவி செய்து வருகின்றனர்.
5. சாதியினால் சமுதாயத்தில் அன்றாட நடக்கும் காரியங்களுக்கான வழிமுறை சொல்லப்பட்டுள்ளது. இது வரை சதியை ஒலிக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள் ஒரு பொதுவான சம்பிரதாய நடைமுறையை சொல்லவில்லை.

ஆலமரத்தில் கூருவி கூடுகட்டி குடும்பம் நடத்தியது. வாழ்க்கைத் தேவையோ வேரு.. குடும்ப அமைப்போ ஒன்ருதான். கணவன் (ஆண்) ‍,‍ மனைவி (பெண்) மற்றும் குழ்ந்தை மற்றும் சுற்றம். கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த ஏவுகனை போல் மாற்றான் சாதியி திருமணம். சொல்லவா வேண்டும் அந்த கொடுமையை..? பட்ட வழிகலும் வேதனைகலும் சொல்லி மாலாது. எது எப்படியோ கலப்புத் திருமணம் 'கைகலப்பில்; தான் முடிந்தது. வாழ்வே மாயம், வனங்காடானது. தாய்யும், தந்தையும் தண்ணீர் தொழித்து விட்டுவிட்டனர். சமுகம் அதான் சா(ச‌)திக்கார சங்கம்மும் தடைவுத்தரவும் இட்டுவிட்டது. அவர்களின் வாழ்வு தித்திக்க வேண்டிய குடும்ப வாழ்வு திசையை மாற்றிவிட்டது.. கைவசம் 'கைப்புள்ள கவர்ன்மெண்ட்' மட்டுமே. சாதியின் மீதும் மனிதர்களின் மீதும் கோவக்கனல் வீசியது அந்த காதல் ஜோடிக்கு. அரசாங்க சட்ட திட்டமோ சாட்டையடி கொடுத்தது. அது என்ன..? மணைவி கீழ்சாதியாக இருந்தால் சலுகை உண்டு என பதில் வந்தது. அவன் மனதில் ஒரு கோவம் எந்த சாதியாக இருந்தால் என்ன‌..? நாங்கள் இப்போ காதல் சாதி என் சத்தமிடடான். அரசு அதிகாரியோ சலுகைக்கான காரண காரியம் என்ன என்னு விளக்கினார். தாழ்ந்தவனை கைதூக்கி விடுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.. என்ரு பதில் சொன்ன அரசு அதிகாரியிடம்.. எப்படி இது சாத்தியம் என வினாவினான் காதல் சாதியின் முதல் முழக்கமாக. அரசு அதிகாரி கூரிய பதில்.. தம்பி, 'பொன் சாதி'யோட சாதி செல்லாது.. ஒங்க குழ்ந்தைக்கு இனிமே உங்க சாதிதான் போட முடியும் என அதிர்சியூட்டினார். பாவம் இந்த காதல் சாதிக்காரன்.. காற்றடைத்த பலுனாக வாய் மூடி நின்றான். கெட்ட குடியே கெடும், பட்ட காலிலே படும் என பல‌ டயலாட் அவன் மனதை பண்ஜ் பன்னியது. அவன் அந்த அதிகாரியை நோக்கி கேட்டான். என் சாதிக்காரனே ஒதுக்கி வைத்து விட்டான்.. பின்பு எப்படி என்னால் அதே சாதியை மன்னித்துக் கொள்ளுங்கள் சாக்கடையில் வசிக்க முடியும் என கோள்வி கேட்க்க அந்த அரசு உழியனின் கண்ணில் நீர் வந்தது.. ஆயினும் அவனும் சாதாரன மனிதன் தானே, அவன் மட்டும், என்ன‌ செய்ய‌ இயலும் இதை சரிசெய்ய‌ தனி மரம் தோப்பாகது அல்லவே. உங்களிடம் விடையிருந்தால் சொல்லுங்கலேன் அல்லது நீங்களாவது அவன் துயர் நீக்குங்கலேன்.

இப்படி நல்லது நலமுடன் நடக்க, ஒவ்வொரு சா(ச‌)தியும் ஆலமரம் போல் வளர்ந்தது.. மெள்ள மெள்ள சில, பல கிளைகலும் சில்லு விட்டது விழுது என்ரே கூரலாம். அவையாவும் ஒரு மரத்து கிளைதான், ஒரு தாய் பிள்ளைதான் என்ன காரனமோ ஆழமரம் தாங்கி நிற்பதற்க்கு எங்கள் கிளைதான் என ஒவ்வொன்ரும் என்னி சண்டையிடடன. கால், கை, கண், காது இவை அனைத்தும் இரண்டுதானே இதில் போட்டி வந்தால் எப்படி.. ஒன்ரு கெட்டால்.. ஊனம் தானே அதுதான் அங்கும் நடந்தது. சாதிக்குல் சண்டை, நிர்வாகத்தில் சண்டை. சாதி ஒற்றுமை என்ரு ஒன்ரிருந்தால், எப்படி பதவிக்காக கொலை நடக்கும், பின்பு எப்படி ஒரே சாதிகலில் உள்ளவர்கள் வெவ்வேரு கட்சியில் சேர்வார்கல்.? எத்தனை பேர் சாதிக்காரனுக்கு உதவி செய்கிரான், வேலை வாய்ப்பு..? கல்வி உதவி..? ஏழ்மை என்ன ஒரு சாதிக்கு மட்டும் என் குத்தகை விடப்பட்டுள்ளதா..? இல்லையே.. இங்கும், அங்கும் எனாதபடி எங்கும் நிரைந்துதான் உள்ளது. மறுக்கத்தான் முடியுமா அல்லது மரைக்கத்தான் முடியுமா..? முடிவு உங்களிடமே விடடு விடுகிறேன்..

அண்ணன் எப்பச் சாவான் திண்ணையெப்பக் காலியாகும்...

சாதி அரசியல்..? சட்டத்தை நடைமுறைப்படுத்திய‌ ‌ஈவேரா பெரியார், இந்த சட்டம் சாதிக ரீதியில் வகுப்பட்டவை. எப்பொழுது நடைமுறைக்கு ஒத்துவராது என என்ணூகிரிர்கலோ உடனே மாற்றிக்கொள்ளுங்கள் என சொல்லியும் வைத்தார். "அண்ணன் எப்பச் சாவான் திண்ணையெப்பக் காலியாகும்..." என காத்திருந்திருப்பர் போலும், பல அரசியல்வாதிகள் சுய நலத்திற்க்காக, இனிபொழுதும் அதையே துதி பாடிக்கொண்டுதான் உள்ளனர். 'கெட்டதிலும் நல்லது என்பர்' அது இங்கும் அரங்கேரியது. அதுதான் ஒற்றுமை. என் சாதிக்காரன்..! :) என்ற தோனியில். ஸ்டாட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா முடிவுதான் தெரியாது என்கின்ர பானியில். அந்த ஒற்றுமை சுயநலமற்றதாகவும், தன் ச‌(ந்த)தியினரை முன்னேற்ருவதாகவும் தான் இருந்தது. அதன் வொளிப்பாடாக, அவரவர் தகுதிக்கு ஏற்ப நிலம், பணம், பொருள், உடல் உழைப்பு, மற்றும் பல‌ முதலீடு செய்தனர், அவரவர் தேவைக்கு ஏற்ப‌ மண்டபம், கல்வி சாலை, வழிபாட்டுத்தளம், பண்பாடு, ஒற்றுமை, மற்றும் கலாச்சாரம் என் தத்தம் பங்கிர்க்கு விட்டுச் சென்ரனர்.


--
Anbudan,

A.Sankareeswaran M.C.A,
http://sankareeswaran.blogspot.com

பூமியின் சுழற்சியால் பகல் உருவாகிறது.
அதே சுழற்சிதான் இரவையும் உருவாக்குகிறது. சாதி ஏதாவது நன்மையை அளித்தால் அதுவே தீமையையும் அளிக்கும். தீயதிலாத நன்றுடையது கடவுள மட்டுமே. சாதி நிகரமாக நன்மை அளிக்கிறதா தீமை அளிக்கிறதா? ஒரு ஏக்கர் நிலத்தில் கீரை பயிரிட்டால் ஒரு ஏக்கர் முழுவதும் ஒரே பாத்தியாக இருந்தால் நீர் இறைப்பது கடினமாகும். அதனால் பாத்திகளாகப்பிரிக்கிறோம். இவ்வாறு மனிதனைப் பிரிக்க வேண்டிய அவசியம உள்ளதா?
சாதி மதம் தேசியம் என்ற எந்தவொரு மானிடப் பிரிவும் மக்களுக்கு அளித்தது போர்ப் பூசல்களை மட்டுமே. சாதி ம்தம் தேசியம் இவற்றிற்காகப் பல இலட்சம் உயிர்கள் பலியிடப்படுவது தொடரத்தான் வேண்டுமா?
குலத் தொழில், சடங்குகள் இவற்றின் அடிப்படையில் உருவானவையே சாதிகள். இன்று குலத்தொழில வழக்கு ஒழிது விட்டது. சடங்குகள் தேவையற்றவை. ஆயினும் மனிதன் சாதியை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருப்பது அறியாமை.
ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு தாலி அணியும் வழக்கம் உள்ளது. இதை மாற்றி அணிவதாலோ அணியாமல் இருப்பதாலோ ஒரு பெண்ணின் மண வாழ்க்கைக்கு எந்த தீங்கும் வராது. மரபுகள் சடங்குகள் இவற்றைக் காப்பாற்ற சாதிகள் தேவையா?

சாதிப் பிரிவினால் சில சாதிப் பிரிவுகளில் வரன் கிடைக்காமல் திருமணத்தில் தடை ஏற்படுகிறது.
சாதிகளே இல்லை என்றால் ஒரு சாதியினர் மற்ற சாதியினரைத் தாக்குவது என்பதற்கு இடமில்லை. ஆக சாதியில் பாதுகாப்பு இல்லை. சாதியின்மையில்தான் பாதுகாப்புள்ளது.

மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் .

ஜாதியினால் எந்த நன்மையும் இல்லை தனி நபர் ஒருவரின் ஒழுக்கம் ,நேர்மை ,தொழில் மட்டுமே அவரை இந்த உலகத்தில் அடையாளம் காட்டுகிறது .மக்கள் தங்கள் தொழிலின் அடிப்படையில் தான் ஜாதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி வாழ்ந்தார்கள். மக்கள் ஜாதியின் அடிப்படையில் செயல் படகூடாது . தங்கள் திறமைகளை நாட்டு மக்களுக்கு அர்பணிக்க வேண்டும் என்பதே என் கருத்து.

இப்படிக்கு ,
கே. கணேஷ் .

20:27

Advantage or Merits of Caste System

1. Preservation of Culture:

Caste system helped in preservation of culture and these were passed on from generation to generation.

2. Preservation of Purity:

Caste system, because of its endogenous nature, permitted marriage only within the caste and thus preserved purity of each caste.

3. Division of Labor:

Caste system required each individual to do the work prescribed for his caste, i.e. Brahmins job was to teach, Kshatriyas to fight war, Vaishyas to run trade and Shudras to serve other castes. This division of labor ensured smooth functioning of society.

4. Co-operation within Castes:

Caste system fastened cooperation with each caste. They co-operated with each other to preserve their culture and protect it from degradation by other castes.

5. Absence of Competition:

As social status was hereditary and no amount or personal accomplishments could change it, there was no competition to improve status. People, therefore, utilized their energies for general benefit of society rather than Personal advancement.

6. Panchayat System:

Panchayat system is an outcome of caste system. All disputes within a caste were referred to the caste Panchayat. Panchayats though secular in outlook exist even now in rural India.

7. Increased Professional Proficiency:

Caste system helped in increasing proficiency in each vocation because accumulated experience of and store was handed over by father to son.

8. Healthy Social Life:

Caste system made people disciplined and co-operative. People carried out the duties assigned due to their caste with responsibility. There was social amity between members of same caste.

9. Protected the Society:

Rigidity of our caste system was responsible for protecting our society from cultural invasion by alien societies.

10. Permanency and Continuity:

Each casts had a permanent body of constitutions to guide his social behaviors and action. The customs and beliefs were passed on from generation the generation. Thus caste system had permanency and continuity.

11. Improved Living Standards:

Each caste struggled hard to maintain and improve living standards of its members to retain its superiority over subordinate castes. This resulted in overall progress and prosperity.

12. Social Life Not Dependent on Political Conditions:

Caste system was predominantly influenced by religion. It was totally independent of prevailing political conditions and, therefore provided stability in society.

ஜாதிகாளால் ஏற்படும் நன்மைகள்:
1. ஒரு மனிதனுக்கு பெயர்,ஊர் இன்னாருடைய பிள்ளை என்பது போல ஜாதிஎன்பது ஒரு அடையாலம்.
2.தனிமனித ஒழுக்கம்,சமுதாயஒழுக்கத்தை கற்பிப்பது சாதி
3.குலதெய்வ வழிபாடு, பண்பாடு,கலாச்சாரம்,பழக்கவழக்கம் ,நடைமுறை வாழ்கை முரை ஒரு தலைமுறையில் இரு ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துசெல்ல
4.ஒரு மனிதனுக்கு தைரியத்தை.உண்மையை, நேர்மையை,தன்னம்பிக்கையை, பெருமையை கொடுப்பது அவன் ஜாதி.
5.ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவனுடன் கூடவே வருவது அவன் ஜாதி

இப்படிக்கு,
ராஜம்மாள்.

எனக்கு தெரிந்தவரை ஜாதி ஆனது அவர் செய்கின்ற தொழிலை வைத்து வகுக்கபட்ட ஒன்றாகும்.
1.ஓவ்வொறு தொழிலும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் செய்து வருவதால் தொழில் நலிந்து போகாமல் காக்கபடுகிறது.
2.ஒவ்வொறு ஜாதிக்கும் வொவ்வேறு தொழில்நுட்பம், பண்பாடு ,கலாச்சாரம், உள்ளது .அதை ஜாதிகளால் தொன்று தொட்டு அழியாமல் காக்கபடுகிறது.
3.ஒவ்வொறு ஜாதியினறும் சிறு சிறு கூட்டமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதால் ஒலுக்கத்தையும். மழை வெள்ளபாதிப்பு, சுனாமி,நிலநடுக்கம் ஆகியவற்றால் தங்களை தாங்களே பாதுகாத்து வருகின்றனர்.

4.அன்ணன், தங்கை உறவின் கன்னியத்தையும்,ஒருவனுக்கு ஒருத்தி ,கூட்டுகுடும்ப கோட்பாடுகள், மணிதாபிமானம் அழியாமல் கட்டி காக்கின்றது.
5. மதமாற்றம் செய்பவர்களிடம் தன்னை காக்கவும், சமய அறநெறியை காக்கவும் . ஆண்மிகத்தில் உலகின் குருவாக இந்தியா விளங்க ஜாதிகள் உதவுகின்றன.

தனி, தனி, கூட்டமைப்புகளின் மூலம்,
மக்களை, ஒருங்கிணைப்பதற்காகவே ஜாதிகள் உருவாக்கப்பட்டிருக்களாம்,
அதாவது,
ஜாதிகளின், நன்மை,
மக்களின் ஒருங்கிணைப்புக்காக இருக்களாம்.

ஜாதி என்ற பந்தம் மனித மனங்களிடையே உளவியல் ரீதியாக ஒரு பிணைப்பினை ஏற்படுத்துகிறது. இன்ப துன்பங்களில் மனம் ஒன்றி ஏழை பணக்காரன் என்ற அந்தஸ்து பேதம் பார்க்காமல் சொந்தங்கள் தோள் கொடுக்கின்றன. தனிமனிதனின் சமுதாய வாழ்க்கையில் மனரீதியாக, தான் தனிமரம் அல்ல ஒரு தோப்பின் அங்கம் என்ற ஒரு பாதுகாப்பு உணர்வை அவனுக்கு அளிக்கிறது. தமக்கு ஏதாவது நல்லது கெட்டது என்றால் உடன் வர உறவுகள் உள்ளன என்ற தைரியம் மனதில் குடி கொண்டுள்ளது.
ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஜாதி என்ற ஒரு பிணைப்பு ஒன்றுமில்லாததாகச் செய்துவிடுகிறது. சுக துக்கங்களில் பரம ஏழையும் சம அந்தஸ்தில் நடத்தப்படுகிறான். அவனின் சுய கெளரவம் பாதுகாக்கப்படுகிறது. ஒருவர் என்னதான் மிகப்பெருஞ்செல்வந்தராக இருந்தாலும் கூட, தனது ஜாதிக்குள் ஒரு உறவினர் அவர் ஓலைக் குடிசையில் வசிக்கும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் குறைந்தவராக இருந்தாலும் கூட அந்த ஏழை உறவினரின் சுக துக்க நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக நேரில் வந்து அந்த சுக துக்கங்களில் பங்கேற்பார். தமக்கான சீர் சடங்குகளைச்செய்வார். அந்த செல்வந்தரின் குடும்ப சுக துக்கங்களிலும் அந்த ஏழை உறவினனுக்கு இதே வாய்ப்புகள் சம உரிமையுடன் வழங்கப்படும். தனிமனித சுய கெளரவம் அந்தஸ்து பேதங்களினால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. ஜாதிப் பிணைப்பு இல்லாத உறவுகள் எனில் இது போன்ற சம்பிரதாயங்களை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கக்கூடும்.
ஜாதிகள் என்ற குழு உணர்வு ஒழியும் நிலையில் ஏழை பணக்காரன் என்ற பேதம் சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே பெரிதாக நிலவும். பணம் உள்ளவன் மட்டும் தான் தன் உறவினர்களால் கூட மதிக்கப்படுவான்.
உளவியல் ரீதியாக, மனித கூட்டங்களிடையே ஜாதி அடிப்படையிலான சொந்தங்கள் என்பது உணர்வுபூர்வமானது. ஜாதி அடிப்படையிலான இணைப்பில்லாமல் ஏற்படும் சொந்தங்கள் என்பது தாமரை இலை தண்ணீர் போன்றது. மிகவும் மேலோட்டமானது, அவை உணர்வு பூர்வமாக எக்காலத்திலும் பிணைக்கப்படாது. அதுபோன்ற சொந்தங்களிடையே ஒரு அந்நிய உணர்வே குடிகொண்டிருக்கும்.
ஜாதி அடிப்படையிலான சொந்தங்களின் பிணைப்பு என்பது, உறவுகளோடு ஒன்றிய கிராமத்தின் கூட்டுக்குடும்ப வாழ்க்கை போன்று இனிமையானது..
ஜாதிகள் ஒழிந்த நிலையில் ஏற்படும் சொந்தங்களின் பிணைப்பு என்பது, உறவுகள் இருந்தும் இல்லாதது போன்ற நகரத்தின் தனிக்குடும்ப வாழ்க்கை போன்று தனிமை சூழ்ந்தது..வெறுமையானது..
ஜாதிகளினால் மனிதர்களுக்குள் பேதங்கள் ஏற்படுகிறது என்ற காரணத்திற்காக ஜாதியை ஒழிக்க வேண்டும் என வாதிட்டால், மனிதர்களுக்குள் பேதங்களை ஏற்படுத்தும் அத்தனை விசயங்களையுமே ஒழிக்கத்தான் வேண்டும். அரசியல் கட்சிகளின் காரணமாக மனிதர்களுக்கிடையே பேதமும் தகராறும் ஏற்படுகின்றன. அதனால் அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும், மதங்கள் காரணமாக பேதங்கள் ஏற்படுவதால் மதங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும்.
மாநிலங்களின் பெயரால் பேதங்கள் ஏற்படுவதால் மாநிலங்களையெல்லாம் ஒழிக்க வேண்டும். தேசங்களின் பெயரால் பேதங்கள் ஏற்படுவதால் தேச வேறுபாடுகளை ஒழித்து உலகம் முழுவதும் ஒரே தேசம் எனப் பிரகடனப்படுத்த வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நிறவெறி பேதம்.. வெள்ளையர் கருப்பர் என நிறவெறி பேதம் நிலவும் நிலையில் மனிதன் தன் மன பேதத்தினை ஒழித்துத்தான் அப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடிந்ததே,முடியுமே ஒழிய, நிற பேதத்தினைக் காரணம் காட்டி நிறத்தையே ஒழிக்க வேண்டும் எல்லோரும் ஒரே நிறமாக இருந்தால்தான் நிறவெறி ஒழியும் என முடிவு கட்டினால் அது விபரீதத்தில் தான் முடியும்.
அது போலத்தான் ஜாதிகளால் பேதங்கள் ஏற்படுகிறது என்ற காரணத்திற்காக அதனை ஒழிக்க முற்படுவதைவிட ஜாதிகளின் பொருட்டு மன பேதங்கள் ஏற்படாவண்ணம் மனிதன் பக்குவப்பட்டால் போதும், ஜாதிகளால் பிரச்சினைகள் ஏதும் எழாது.

நாம் மெத்தப் படித்த ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம். நமது கல்வியறிவைக் கொண்டு, ஜாதிகள் இருந்தாலும் கூட ஜாதி பேதம் பாராட்டாத மனப்பக்குவத்தினைக்கூட நாம் பெற இயலவில்லை எனில் நாம் கற்றறிந்த சமுதாயத்தவராக வாழ்ந்தும் பயன் ஏதும் இல்லை. உலகம் உள்ளவரையில் மனிதன் ஏதேனும் ஒரு விசயத்திற்காவது பேதங்கள் பாராட்டியே தீருவான். அதற்காக பேதங்களை ஏற்படுத்தும் அனைத்தையும் ஒழிக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது. மனதளவில் பேதங்களைக் களைந்தாலே போதும், பிரச்சினைகள் ஏதும் எழாது.
ஆனால் இத்தனை பேதங்களையும் ஒழித்தாலும் கூட உலகம் உள்ள வரையில் ஏழை பணக்காரன் என்ற பேதத்தை கடவுளே வந்தாலும் ஒழிக்க முடியாது. ஜாதிகள் என்னும் உணர்வு பூர்வமான பிணைப்பு சமுதாயத்தில் ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை தூக்கி தூர எறிந்துவிட்டு அந்தஸ்து பார்க்காமல் உண்மையான உணர்வுடன் தன் சக உறவினனுக்கு அவனின் சுக துக்கங்களில் தோள் கொடுக்க தூண்டுகோலாக உள்ளது. ஆனால் ஜாதிப் பிணைப்பு இல்லாமல் ஏற்படும் உறவுகள் வெறும் சம்பிரதாயமான உறவுகளாகவே அமையும். அவைகள் காகிதப்பூக்களாகவே இருக்கமுடியும்.. வெறும் காட்சி மட்டும் தானே ஒழிய மணமும் இயல்பும் அதில் காண முடியாது.
சமுதாயத்தில் வேறு எந்த வகையிலான பிணைப்புகளும் மனிதர்களின் மனங்களுக்கிடையே உளவியல்ரீதியிலாக இத்தனை நெருக்கத்தினை ஏற்படுத்தக் கூடியவையும் பாதுகாப்பு உணர்வினைத் தருபவையும் அல்ல. ஜாதி என்ற பிணைப்பு மட்டுமே அதனைத் தருகிறது.
-சுந்தரராஜ்,ஈரோடு.

ஜாதியின் கொடுமைகளை பற்றி விளக்கம் கொடுக்கவும் விமர்சனம் செய்யவும் நமது மக்கள் நன்றாக பழகியிருக்கிறார்கள் ஜாதி கொடுமைகளை பற்றி எந்த அளவு அறிந்திருகிறார்களோ அந்தளவு அனைவருக்கும் ஜாதி பற்று இருக்கிறது ஜாதி கிராமங்களில் தான் வாழ்கிறது நகரங்களில் செத்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் உண்மைக்கு எதிரான கருத்தாகும் கல்வி சாலை துவங்கி கல்லறை தோட்டம் வரையிலும் ஜாதி இங்கே உறுதியாக நம்பப்படுகிறது பின்பற்றபடுகிறது அதே அளவு ஜாதியிய எதிர்ப்பு வாதங்கள் பேசவும் படுகிறது. இது தான் நமது தேசத்தின் நிஜமான அரசியல்

ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று வாய்கிழிய பேசுகிற அரசியல்வாதிகளும் சரி கைதட்டி வரவேற்கின்ற தொண்டர்களும் சரி திரைமறைவுக்கு பின்னால் ஜாதியை வளர்ப்பதற்கு எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பது யாரும் அறியாத இரகசியமில்லை மனிதன் நிஜமாகவே இன்னொரு மனிதனை ஆளுமை செய்ய நினைக்கிறான் ஆட்சி செய்ய ஆசைபடுகிறான் அதனால் ஏற்பட்டது தான் ஜாதி கொடுமைகள் ஆனால் நிஜமாகவே ஜாதிகள் கொடுமை செய்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல

ஐரோப்பிய மக்கள் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்த காலத்திலேயே அரசியல் சித்தாந்த நெறியை வளர்த்தவர்கள் ஆசிய மேதைகள் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இந்திய சமூக அமைப்பு பண்பட்ட நெறிப்பட்ட சமூக அமைப்பாக வேருன்றி நின்ற சரித்திர காலத்தில் கூட வெள்ளையர்கள் வேட்டைக்காரர்களாக தான் இருந்தார்கள் அறிவு முதிர்ச்சி மிக்க இந்தியர்களின் கண்டுபிடிப்பே ஜாதி என்ற சமூக அமைப்பு

மனிதன் கூட்டமாக வாழுகின்ற இயல்பு படைத்த சமூக விலங்கு மனித சமூகம் நீடித்து வாழவேண்டும் என்றால் ஒற்றுமை மட்டுமிருந்தால் போதாது வேற்றுமையில் ஒற்றுமை இருந்தால் மட்டுமே சமூகத்தின் ஆயுள் தன்மையும் ஆரோக்கிய தன்மையும் நீடித்ததாக இருக்கும். எனவே தான் ஒவ்வொரு சமூக குழுவும் ஒவ்வொரு ஜாதியாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்ட ஜாதிகள் சிறு சிறு விரகுகட்டுகள் பெரிய விறகு கட்டை உதிர்ந்து போகாமல் காப்பது போல் காத்தது என்றால் அது மிகையில்லை.

உண்மை கசக்கும் ஆனால் அதை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது என்று இந்தியாவிலிருந்து முற்றிலுமாக ஜாதிகள் அழிக்கப்படுகிறதோ அன்று இந்தியாவின் ஆத்மாவான பண்பாடு முற்றிலும் மரணமடைந்து விடும் நம் தேசம் தேசமாக இருக்காது. ஜாதியில் ஒழிக்கப்பட வேண்டியது ஏற்ற தாழ்வுகளே தவிர வேறொன்றும் இல்லை. இந்த ஏற்ற தாழ்வுகள் பொருளாதார சிந்தனையின் அடிப்படையில் நிலவுடமை தத்துவத்தின் அடிப்படையில் உருவானதே தவிர இயற்கையானது அல்ல. எனவே இதை ஒழிப்பதில் இட ஒதிக்கீடு தனி சலுகைகள் சரியான பங்காற்றி நிறைவேற்றி விடும்.

ஆயினும் ஜாதிகளை ஒழிக்க முயற்சி செய்வது வீண் என்பதே என் கருத்து.

ஜான்சன் செல்லத்துரை
அமெரிக்கா

எல்லாம் சாி.அருமையாக கருத்துக்கள் அப்பப்பா ! அற்புதமான கருத்துக்கள். ஒரு சாதிக்கும் பிற சாதிக்கும் மோதல் மனித உாிமைகள் மீறல் வருவதை தவிா்க்க சாியான அமைப்பு மன பக்குவம் இல்லை என்பதும் ஒரு சாதி விட்டு மறுசாதி திருமணங்களை கொடுரமாக எதிா்ப்பதும் மிகப்பொிய குறை.
யாதவன் என்று சொல்லப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா் தனது சகோதாியை அா்ச்சுனனுக்கு விரும்பி திருமணம் செய்து வைத்தாா். துாியோதனனின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தாா். மனுதா்மம் படியே ” கன்னிப் பெண்ணுக்கு சாதி கிடையாது” ஒத்த பக்குவம் உடையவா்கள் சாதி விட்டு சாதி திருமணம் செய்யலாம். இன்றும் பிள்ளைமாா் முதலியாா் செட்டியாா் போன்றவா்கள் திருமணம் செய்து கொள்கிறாா்கள்.அதுபோல் சாதிக்குள் உட்பிாிவுகள் வேகமாக அழிந்து வருகின்றது. எல்லோரும் நினைத்தால் சாதி விட்டு திருணமம் செய்வதையும் அன்புடன் கண்ணியத்துடன் எற்றுக் கொண்டால் -மனுதா்மம் படி நடந்தால் - எங்கும் மங்களமே.


Next Post Next Post Home
 
Back to Top