( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இயேசுவின் பலவீனமா...?


இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..

     சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கூறுவது அவரது பலவீனத்தையா காட்டுகிறது...?

      என்ற கேள்விக்கு நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தந்தவர் திரு சேவியர் அவரை குருஜியின் சார்பில் பாராட்டுகிறோம் அவருக்கான பரிசினை நேரில்வந்து குருஜியின் கைகளால் பெற்றுகொள்ளலாம் அல்லது அவரது வங்கி முகவையை அனுப்பினாலும் நாங்கள் அதில் செலுத்தி விடுகிறோம்.

சேவியரின் பதில் இதோ 

   

   சு தெய்வ தன்மை நிறைவாக இருந்த மனித அவதாரம். அவர் மனித உருவில் இருந்ததால் அவரிடம் மனிதனின் குணங்கள் வெளிப்பட்டது.

அவருக்கு பசி எடுத்து சாப்பிட எதாவது உணவு உள்ளதா என கேட்டார். கோவிலில் வியாபாரம் நடப்பதை பார்த்த நேரத்திலும், அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிய நேரத்திலும் கோபம் கொண்டார்.

அவர் தாம் சிலுவையில் அறையப்பட போவதை நன்றாக அறிந்து இருந்ததாலும் மேலும் மனித அவதாரத்தில் இருந்ததாலும் தான் இறைவனிடம், இந்த துன்பம் என்னை விட்டு அகலட்டும் என வேண்டினர். ஆனாலும் அந்த சிலுவையை முழு மனதுடன் அவர் ஏற்று கொண்டார், சிலுவையில் இருந்த நேரத்தில், துன்பம் மிகுதியாக இருந்ததால் தேவனே ஏன் என்னை கை விட்டீர் என கேட்டார். இதை ஒரு பிள்ளை தந்தையிடம் கேட்ட மாதிரி எடுத்து கொள்ளலாம். இதில் பலமும் இல்லை பலவீனமும் இல்லை.

ஏசு சிலுவையில் இருந்த நேரத்தில் தெய்வ தன்மையையும், மனித தன்மையையும் சேர்த்தே வெளி டுத்தினார். தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காக தந்தையே இவர்களே மன்னியும் என்றார். அந்த நேரத்திலும் தன்னை ஈட்டியால் குத்தியவனே குணப்படுத்தினார்.

ஆகவே 'தேவனே ஏன் என்னை கை விட்டீர்' என சொன்னது அவர் இருந்த அந்த அவதாரத்தின் தன்மையே ஆகும்.


இப்படிக்கு 
சேவியர் , சென்னை


+ comments + 26 comments

ஏசு என்பவர் நித்தியமானவர் அவருக்கு மரணம் இல்லை சாவை கண்டு அவர் அஞ்சவும் இல்லை மனுஷ குமாரனாய் உடல் தரித்து மக்கள் தொண்டாற்ற முடியவில்லையே என்று வருத்தபட்டாரே தவிர மரணத்தை கண்டு பெலவீன படவில்லை.சாமுவேல் ராஜதுரை
தூத்துக்குடி

Anonymous
12:08

சாக்ரடிஸ் போன்று மரணத்தை எதிர்கொள்ளும் தைரியம் ஏசுவுக்கு இல்லை அதனால் தான் தேவ குமாரன் என்று அழைக்கப்பட்ட ஜீசஸ் சாதாரண மனிதர்கள் போல மரணத்தை பார்த்து கதறினார்.

கல்யாண ராமன்
சென்னை

இல்லை. எதிர்பார்ப்பை காட்டுகின்றது. விடப்பட்ட பணிகளை செய்யவேண்டிஅழைக்கின்ற வேண்டுகோளே தவிரவெறுஇல்லை.

ஐயா வணக்கம்.! சன் மார்க கோட்பாடாகிய இந்து மதத்தில் ஏசு பிரான் போன்று எத்தனையோ அவதார புருஷர்கள் தோன்றி மனிதனாக சகமனிதனுடன் வாழ்ந்து மனித தத்துவத்தை மனிதனுக்கு போதித்து இறுதியாக இறைவனிடத்தில் பிறவா நிலை அடையவேண்டும் என்று உபதேசித்து வாழ்ந்து இன்றும் அ(ரு)பமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு நாராயணனின் தச அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீஇராமபிரான் அவதாரமும் ஒன்று ஆகும். குறிப்பாக தாங்கள் கேட்ட கேள்விக்குண்டான பதில் ஸ்ரீ கிருஷ்ணவதாரத்தில் தாய் யசோதா வீட்டில் நவ முனிகளில் ஒருவரான தேவ முனி நாரதர் ஒரு முறை
கிருஷ்ணனிடத்தில் ஸ்ரீ இராம கதையை சொல்லும் போது தன் நிலை மறந்து இராவணனனை கொள்வேன் என்று உனர்ச்சி வசப்பட்டு எழுந்தார் பிறகு சமாதணம் செய்வித்னர். மகாபாரதப் போரில் அர்ஐீணனிடத்திலும் துரியனிடத்திலும் போரில் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று வாக்கு
அளித்து விட்டு பீஷ்மரை நோக்கி தன் சக்ராயுதத்தை செலுத்த முற்பட்டர். ஆகவே இறைவணாகவே இருந்தாலும் மனிதனாக பிறந்து தான் செய்ய வந்த செயலை செய்ய முடியவில்லையே என்று என்னும் போது உணர்ச்சியின் காரணமாக இஏசுபிரான் இவ்வாறு கூறியிருக்கலாம் இது அவரது பலவீனம் அல்ல என்று என் சிற்றரிவுக்கு எட்டுகிறது. ருத்ரன் சதாசிவன் விஷ்ணு போன்று இஏசு முகமதுநபி இவர்களும் பர பிரம்மணால் வருவிக்கப்பட்டவர்களே.

அவரின் பலவினம் அல்ல இத்தனை வருடமாக இந்த மக்கழுக்காக இவ்வளவு உபதேசம் செய்தும் மக்கள் அறியாமை காரணமாக பாவம் செய்கின்றனர் இன்னும் உபதேசம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் கை விட்டிரே தேவன் என இயேசு பிராண் வருந்துகிறார் :

வணக்கம் குருஜி

இயேசு தான் கடவுள் இல்லை என்பதை உணர்த்தவே அவர் அப்படி கூறியுள்ளார். தான் ஒரு இறைதூதன் என்பதை அவர் பைபிளில் அடிக்கடி சொல்லும் வார்த்தையாகும். தனக்கு மேலும் ஒரு சூனிய நிலையைத்தான் அப்படி கூறியிருக்கிறார். நிறைய சித்துக்கள் செய்த இயேசு நாதர் அந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இயலும் ஆனாலும் இறைநிலை தனக்கு கொடுக்கும் நிலையை தானே அனுபவிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார்.

by,

UR. Sankaranarayanan

வணக்கம் குருஜி!

என் பெயர் திருமதி. ரேணுகாபு~;பராஜ். நான் இந்து மதத்தை சேர்ந்தவள். கிருத்துவ மதத்ததை

பற்றி முழுமையாக தெரியாது. ஆனால் இந்த கேள்விக்கான பதில் எனக்கு புரிந்த அளவில்

சொல்கிறேன். குருஜி அவர்களே சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் நிச்சயமாக பலவீனமானவராக

இருக்கமுடியாது. ஏனெனில் தன்னுடைய உடலில் உள்ள உறுப்புகளில் ஆணிகளை வைத்து

அடிக்கும்போதும், தலையைச்சுற்றி முள்ஆணியை இரத்தம் சொட்டச்சொட்ட

பொறுத்தும்போதும் கூட இறைவன் தம்மை கைவிடமாட்டார் என்ற முழு நம்பிக்கையில் இருந்த இயேசு,

அனைத்தும் முடியும் தருவாய் வரை காத்திருந்த இயேசு, கடைசி வரை இறைவன் தம்மை காக்க வரவில்லையே என்ற

ஏக்கத்தில், அதாவது நாம் ஒருவரை முழுமையாக நம்பி தன்னுடைய உடல்,பொருள், ஆவி அனைத்தும்

நீதான் என்று நம்பிம்போது அது நடைபெறாவிட்டால் நிச்சயமாக சோர்ந்துதான்

போகிறான். இது அவருடைய பலவீனத்தை நிச்சயமாக குறிக்காது. பல நோயாளிகளை கண் எதிரில்

உடனுக்குடன் பூர்ண குணமாக்கியவர், மற்றவர்களின் துன்பம் அறிந்து உடனே உதவி செய்தவர் தன்னை

மட்டும் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டார். அவர் நினைத்திருந்தால் நிச்சயம் அந்த கடைசி இக்கட்டான

சூழ்நிலையில் இருந்து தப்பித்திருக்கலாம். ஆனால் இறைவன் மட்டுமே அவர் நம்பிக்கை. எனவே தன்னை

ஆட்கொண்டவர்கள், நாம் நம்பிக்கை வைத்தவர்கள் தன்னை கைவிடக்கூடாது, தன்னைவிட்டு விலகவும்

கூடாது என்று ஒவ்வொரு மனிதனும், மனித உருவில் உள்ள கடவுளும் நினைக்கிறான் குருஜி.

நன்றி

இப்படிக்கு

எஸ். ரேணுகா.
காட்பாடி,
வேலூர் மாவட்டம்.

சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கை விட்டீர்” எனக் கூறுவது நிச்சயம் அது அவரது பலவீனத்தை காட்டுவதாக இல்லை. மாறாக, அது அவர் யார் என்ற தன்மையை உலகுக்கு அறிவிப்பதாகவே உள்ளது. ஏசு ஒருவரே கடவுள் அவரைத்தவிர வேறு யாரும் கடவுள் இல்லை என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு நான் கடவுள் இல்லை. கடவுளிடம் கையேந்துபவர்களில் நானும் ஒருவன் என அவரது தன்மையை உலகத்துக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
இறையை உணர்ந்த ஞானிகள் இறைவனிடம் அடைக்கலம் ஆக தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் அதை ஆவலுடன் எதிர் நோக்கி இறையை அடைந்துவிட காத்திருப்பர். அது வேதனை தரக்கூடிய எந்த வகையாக இருந்தாலும் ஞானிகளுக்கு இறையை அடைவதே சுகம். இந்த மனித உடலும் மனித வாழ்க்கையும் பெரும் சுமையே.
அதனால் தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தும் கூட, தன்னால் தனது தெய்வ அருளினைப் பயன்படுத்தி தன் வியாதியை குணப்படுத்திக்கொள்ளக் கூடிய வல்லமையை பெற்றிருந்தும் கூட, தனக்கு வந்த துன்பத்தை துன்பமாகக் கருதாமல், அவரது ஞானத்தை வெளிப்படுத்த இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட துன்பத்தையே, ரசித்து அனுபவிப்பவராகவும் முக்தி அடைவது ஒன்று மட்டுமே மனிதப்பிறவியின் நோக்கம் என்பதை உணர்த்துபவராகவும் முக்தி அடைவதற்கு நமக்கு வழிகாட்டுபவராகவும் விளங்கினார்.
மனிதப்பிறவியெடுத்து மனிதர்களை பண்படுத்துவது என்பது ஒரு பிறவியில் இயலாது. ஞானிகள் தமது மனிதப்பிறவியின் மூலம் காலம் காலமாக நிலைத்து நிற்கக்கூடிய உபதேசங்களை நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததிகளுக்கு வழங்குவதன்மூலம் மட்டுமே தமது பிறப்பின் நோக்கம் பூர்த்தியடைந்ததாய் கருதுகின்றனர். அதற்கு இந்த பூமியில் நீண்ட காலம் வாழ்ந்தால் தான் சேவையாற்ற முடியும் என்றில்லை. சுவாமி விவேகானந்தர் போல குறுகிய காலத்திலும் தமது முத்திரையைப் பதிக்கலாம். இப்பிறவியிலான அவர்களது சேவை போதும் என இறைவன் கருதினால் திரும்ப அழைத்துக் கொள்கிறான். பூலோக நலனுக்காக தேவையான காலகட்டங்களில் ஞானிகளை இறைவன் பூமிக்கு அனுப்பிக்கொண்டுதான் உள்ளான். ஞானிகள் அதனை உணர்ந்து இறைவனால் தமக்கு விதிக்கப்பட்ட கடமை முடிந்ததென மகிழ்வுடன் இறைவனை சரணடைகின்றனர்.

சராசரி மனிதர்கள்தான் இந்த இக வாழ்வில் பற்றுக்கொண்டு தம்மை காப்பாற்றுமாறு இறைவனிடம் இறைஞ்சுவர். ஞானிகள் இறைவனிடம் வேண்டுவது முக்தி மட்டுமே.
அதனால் தான் ராமகிருஷ்ண பரமஹம்சரை நாம், மகான் என போற்றி இறை அவதாரமாகக் கருதி வணங்குகிறோம்.
ஆனால் ஏசு இறைவனிடம் இறைஞ்சியதன் மூலம் நானும் உங்களைப்போல ஒரு சராசரி மனிதன் தான் என தனது தன்மையை உலகத்துக்கு எடுத்துரைத்திருக்கிறார்.
எனவே ஏசு இறைவனிடம் இறைஞ்சியதன் மூலம், தான் இறைவனும் அல்ல, இறை அவதாரமும் (தேவகுமாரனும்) அல்ல, ஞானியும் அல்ல, நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான் என, தனது தன்மையை உலகத்துக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
அதனை நாம் தான் பகுத்துணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படியானால் ஏசு ஒரு சராசரி மனிதன் தானா? போற்றுவதற்கோ வணங்குவதற்கோ உரியவர் இல்லையா என்றால், வரலாறு(?) மற்றும் இதிகாசங்களை(??) நோக்கும்போது ஏசு ஒரு சராசரி மனிதர் அல்ல. இந்த மண்ணில் மனிதராக பிறப்பெடுத்து மனிதர்களுக்கு அன்பு, இரக்கம் மற்றும் மனித வாழ்க்கைக்கு தேவையான சில நல்ல வழிகாட்டுதல்களை வழங்கிய, சராசரி மனிதர்களுக்கும் மேற்பட்ட ஒரு பவித்ரமான புனித ஆத்மா அவர். இந்த மண்ணில் பிறப்பெடுத்த எத்தனையோ புனித ஆத்மாக்களைப் போல இப்புனித ஆத்மாவையும் போற்றுவதும் வணங்குவதும் அவரவர் சொந்த விருப்பம்.
சிலுவையில் அறையப்பட்டபின் தெய்வத்திடம் ஏசுநாதரின் இறைஞ்சுதல் மேற்கண்டவாறான அவரின் தன்மையையே உலகத்துக்கு வெளிப்படுத்துகிறது.
-சுந்தரராஜ்,ஈரோடு.

இது அவர் இறைவன் மீது வைத்திருந்த ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது... இதுவே பரிபூரண சரணாகதி...

சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர், "என் தேவனே... என் தேவனே.... ஏன் என்னை கைவிட்டீர்?" என்று கூறுவது அவரது பலவீனத்தையா காட்டுகிறது...?

இது மிகவும் சிந்திக்கத்தக்க கேள்வி ஐயா. எமது சிந்தனையில் தோன்றியதை எழுதுகின்றேன்.

ஏசு பெருமான் தாம் கொண்ட நம்பிக்கையில், அதாவது அவர் தமது தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையில் குறைவேதுமில்லை. மிக அதீத நம்பிக்கை வைத்திருந்தார். அதற்குத் தக்க சில சித்து வேலைகளையும் அவர் செய்யுமளவிற்கு அவருடைய தேவன் அவருக்கு சுதந்தரம் அளித்திருந்தார். ஆனாலும் இறுதியில் அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அந்நிலையில் அவர் தமது தேவனிடம், "ஏன் என்னை கைவிட்டீர்?" என்று தம் தேவனிடம் கேட்பது என்பது அவருடைய பலவீனத்தை காட்டவில்லை, மாறாக அந்த தேவனின் பலவீனமாகவே இதனை நான் கருதுகிறேன். அவருடைய தேவனால்கூட அவரை காப்பாற்ற இயலவில்லை என்பதால் இங்கு தேவன் என்பவர்தான் பலவீனப்பட்டு உள்ளார்.

இதனை இன்னும் விளக்க வேண்டுமானால், நமது தமிழக நாயன்மார்கள் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இது நன்கு புரியும். இங்கே நாயன்மார்களின் தேவன்- சிவபெருமான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக அப்பர் பெருமானை கொல்வதற்கு பல முறைகளில் முயற்சி செய்கிறார்கள். ஆனாலும் "நற்றுனையாவது நமச்சிவாயமே" என்று தமிழ்ப் பாடல் பாடி அவர்களது மரண செயல்களை எல்லாம் கடந்துவிடுகிறார் அப்பர் பெருமான்.

இந்த வரலாற்றை ஏசு பெருமான் வரலாற்றோடு ஒப்பிட்டால், தத்தம் தலைவர்களிடம் ஏசு பெருமான் வைத்திருந்த நம்பிக்கையும் அப்பர் பெருமான் வைத்திருந்த நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று குறையாமல் இருப்பதை அறியலாம். எனினும் இங்கு அப்பர் பெருமான் வெற்றியடைகிறார். காரணம் அவரது தேவனாகிய சிவ பெருமான் வல்லமையுள்ள கடவுளாக இருக்கிறார் என்பதே.

இதே வரலாற்றை கடந்த நூற்றாண்டில் இதே தமிழ் மண்ணில், தமிழால் பாடல் பாடி வெற்றி கொண்ட வள்ளல் பெருமானின் வாழ்க்கையிலும் ஒப்பிடலாம். "கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே" என்று பாடியவர் வள்ளற்பெருமான். (இந்தப் பாடல் ஏசு பெருமானுக்கு உபதேசம் செய்வதைப் போல இருப்பதைப் பார்க்கலாம்.) அந்த அளவிற்கு தம் தேவனாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் நம்பிக்கை வைத்தவர் அவர். அந்த நம்பிக்கை அவரை இறுதியில் இறைவனாக்கியது. காரணம் எல்லாமுடையவராக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்குகிறார்.

எனவே நாம் நம்பிக்கை என்ற நமது பலத்தை, பலவீனமானவர்களிடம் வைக்கும் போது, நாம் இறுதியில் பலவினமடைகிறோம். எனவே நமது பலம் - பலமான ஒன்றையே நாட வேண்டும் என்பதையே ஏசு பெருமானின் வாழ்க்கை நமக்குத் தெரிவிக்கிறது. நன்றி.

தி.ம.இராமலிங்கம்
73-B, சங்கரநாயுடு தெரு,
திருப்பாதிரிப்புலியூர்,
கடலூர் - 607002.

Hello saaamichee,
Jesus was not came here as a God,he born as a human child and he wanted the people to follow the ways of him to reach God.He showed us how to live.At the time of his certification he was in the peak of pain and cruelty.So he taught us to never leave God.So that he prayed like that.And also in the book of psalms,psalm no22:1 is like that what he prayed.And the other side he used a psalm in that situation.....

சிலுவையிலிருந்த யேசு தன் னுடைய பிதாவானவர் காப்பாற்ற வருவார் என சிறிது தடுமாறி பிதாவைக் கூப்பிட்டார். பின் தடுமாற்றத்திலிருந்து அந்த நொடியே வெளியேறி உனது அரசு ஏற்படட்டும் என்று முழுமையாக சரணடைந்து விட்டார் . அப்போது அவரின் ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விட்டிருக்கும் .

Anonymous
04:49

அன்பான குருஜி அவர்களுக்கு,

ிிஇயேசு பரமாத்மா விடம் என்னை கைவிட்டு விட்டீர்களா ?, என்று அன்று.இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்ததை ஞாபகம் படுத்திப் பார்க்கும் எங்கலைப்போன்றவர்களுக்கு மாளிடர்களுக்கு, அதை தெலிவு படுத்தும் ஆற்றல் மிகக் குறைவு. இப்படி ஓரு சம்பவம் நடந்திருக்குமா? என்று எல்லாரும் சிந்திக்கும் காலகட்டத்தில் உங்கள் கேள்விக்கு பதில் ???

முன்று மாதமாக உங்களையே நம்பி ,உங்கள் பதிலை எதிர்பார்தது நிற்கும் இந்த ஏழைத்தாயை கைவிட்டு விட்டீர்களா

அன்புடன்

சுப்பம்மாதேவி

ிிிி

Guruji,

இயேசு தேவ தூதர் தான். அவர் மனிதசக்திக்குட்பட்டு நடந்தார்.
தன்னால் முடிந்த அற்புதங்களை மக்களுக்காக உபயோகித்தார்.
தன் தேவைகளுக்கு உபயோகிக்கவில்லை.
மக்களுக்கும், தமது சீடர்களுக்கும் விளங்கவே அவ்வாறு கூறுகிறார்.
இறைவனிடம் அனைவரும் சமம். வேண்டுதல் பிராத்தனைகள் மூலம் இறைவனிடம் ஆசி பெறலாம் என்பதை உணர்த்துகிறார்.


T.Thirumavalavan

@Sreekantharasah Srahhilraj


@Sreekantharasah Srahhilraj


இந்து மதத்தை கொண்டு மற்ற மதத்தை பார்க்காதீர்கள்.


இல்லை.இவர்கலை மன்னியுங்களென்று தெரிவித்துள்ளார்கள்.

10:35

ஏசு தெய்வ தன்மை நிறைவாக இருந்த மனித அவதாரம். அவர் மனித உருவில் இருந்ததால் அவரிடம் மனிதனின் குணங்கள் வெளிப்பட்டது.

அவருக்கு பசி எடுத்து சாப்பிட எதாவது உணவு உள்ளதா என கேட்டார். கோவிலில் வியாபாரம் நடப்பதை பார்த்த நேரத்திலும், அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிய நேரத்திலும் கோபம் கொண்டார்.

அவர் தாம் சிலுவையில் அறையப்பட போவதை நன்றாக அறிந்து இருந்ததாலும் மேலும் மனித அவதாரத்தில் இருந்ததாலும் தான் இறைவனிடம், இந்த துன்பம் என்னை விட்டு அகலட்டும் என வேண்டினர். ஆனாலும் அந்த சிலுவையை முழு மனதுடன் அவர் ஏற்று கொண்டார், சிலுவையில் இருந்த நேரத்தில், துன்பம் மிகுதியாக
இருந்ததால் தேவனே ஏன் என்னை கை விட்டீர் என கேட்டார். இதை ஒரு பிள்ளை தந்தையிடம் கேட்ட மாதிரி எடுத்து கொள்ளலாம். இதில் பலமும் இல்லை பலவீனமும் இல்லை.
ஏசு சிலுவையில் இருந்த நேரத்தில் தெய்வ தன்மையையும், மனித தன்மையையும் சேர்த்தே வெளி டுத்தினார். தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காக தந்தையே இவர்களே மன்னியும் என்றார். அந்த நேரத்திலும் தன்னை ஈட்டியால் குத்தியவனே குணப்படுத்தினார்.
ஆகவே 'தேவனே ஏன் என்னை கை விட்டீர்' என சொன்னது அவர் இருந்த அந்த அவதாரத்தின் தன்மையே ஆகும்.
சேவியர்

n palani avarghalin sariyagha irukkirathu

இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே பரிமாற்றத்திற்கு உட்பட்டது. சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கூறுவது அவரது பலவீனத்தை காட்டவில்லை , மற்றவர்களிடம் பெற்று தான் சுமக்கும் பாவங்களை இறக்கி வைக்க ஓர் இடம் தேவை. ஆகவே தேவனிடம் வேண்டினார். மகான் சிர்டி சாய் பாபா, மற்றும் நமது குருஞீ ஆகியவர்கள் நமக்காக நம் பாவங்களை சுமக்கும் புண்ணிய ஆத்மாக்கள். - பிரபாகரன், சின்னசேலம். (aprabaharan@gmail.com)

It does not show his weakness.The almighty God provided his only son Jesus to save this world from sin.
The God wished him to born as a poor man and sacrificed him in the cross.Even he had committed a lot of
miracles,the God allowed him to die in the cross like a criminal.By obeying to his father's wish and fulfil the
prophecy only he told like that.Even he was having the power to save him from death, he dedicated him self
to shed blood and die as an ordinary criminal in cross.It has to be considered that the soldiers and people who
crucified him witnessed that Jesus was really the son of God .

பதில் ---

இயேசுவின் பலவீனம் இல்லை. எமது ஜீவாத்மா, உடல் என்ற மானிடப்போர்வையால் மறைக்கப்பட்டிருக்கும் போது தான் ஓரு ஆத்மா என்பதையோ, தன்னை காத்து இயங்க வைக்கும் பரமாத்மாவையோ உணர்கின்ற சக்தியை இழந்து விடுகிறது. கடைசியாக தன்னால் இனித் தாங்க முடியாத நிலைய்யில் பரமாத்மாவை உணர்கின்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. அந்தத் தறுவாயில் தான் மனிதன் தன் உடலை மறந்து தன்னை இயக்கும் பரமாத்மாவை நினைக்கின்றான். இது ஓவ்வொரு சாதாரண மனிதரும் அறிந்த ஓன்று. எப்போதும் பரம் பொருளான பரமாத்மா ஓவ்வொரு மனிதனுக்கும் அருகில் இருந்து கொண்டே இருக்கின்றார். எப்போது இதயம் நிறைந்த உண்மை அன்போடு எவர் அழைக்கின்றார்களோ அவர்கள் பிரச்சினை உடனே தீர்க்க படுகிறது. இதை மக்களுக்கு உணர்த்தவே இயேசு தேவன் --- பரமாத்மாவே என்னை கைவிட்டீர்களா ---? என்று எல்லோரும் கேட்கும் படி சொல்கிறார். இதிலிருந்து நாம் அறிவது --- இறைவனே மானிட பிறப்பு எடுத்தாலும் தனது சக்தியை பிரயோகின்ற தன்மையை இழந்து விடுகின்றார். பரமாத்மாவின் உதவியுடன் தான் இயஙக முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்துகின்றார். எங்களுக்கு மேல் ஓரு தெய்வீக சக்தி – பரமாத்மா ஓன்று இருப்பதையும் எங்கள் எல்லா பிரச்சினையும் அவர் ஓருவராலே தான் தீர்க்க முடியும் என்பதை உணர்த்தவே இயேசு இப்படிக்கூறினார் --- பரமாத்மாவின் உதவியுடன் தான் மானிடர்கள் இயங்க முடியும்.

சுப்பம்மாதேவி

Jesus manitha piravi atutharkana arthathai vilakkukirathu.

17:14

வேதங்களாகட்டும், பைபுளாகட்டும் இல்லை குரான் ஆகட்டும் மேலோட்டமாக சாதாரண பொருள் பட இருந்தாலும் அதனுள் மறைபொருளாக இரகசியத்தை புதைத்து வைத்திருக்கின்றது.

அப்படியாக 'என்னை ஏன் கைவிட்டீர்' என்பது மேலோட்டமாக ஏசுபிரானின் பலவீனத்தை காட்டுவதாக தெரிந்தாலும், நிச்சயமாக ஏசுபிரான் பலவீனமானவர் இல்லை.

அறியாமை என்ற இருளை நீக்கி அறிவு என்கிற ஒளியாகிய ஆகிய உன்னை(இறைவனை), இவர்களுக்கு அறிமுகம் செய்யவிக்க என்னை அனுப்பினாய், ஆனால் என்ன தான் முயன்றாலும் இருளில் வாழவே விரும்பும் இவர்களுக்கு நல்வழி காண்பிக்க வாய்ப்பளிக்காமல் இப்படி 'ஏன் என்னை கைவிட்டீர் தேவனே' என்று சிலுவையில் இட்டவர்களின் அறியாமையை நினைத்து இறைவனிடத்தில் வருந்தியிருக்கலாம்.

இவர்களை திருத்த முடியவில்லையே என்று வருந்துவது மேலோட்டமாக பலவினமாக தெரிந்தாலும் இது கருணையின் இன்னொரு முகமே தன்னை வதைக்க நினைப்பவர்களையும் அரவணைக்க நினைக்கும் காருண்யம் தானே?!.

சமாதான தூதுக்கு சென்ற வந்த கண்ணனை பார்த்து விதுரன் கேட்கிறான், 'கண்ணா!, துரியோதனனை எனக்கு நன்றாக தெரியும் யார் சொல்லையும் கேட்க்கும் சுபாவம் கொண்டவன் இல்லை அவன், ஆகவே நீ வந்திருக்க கூடாது, ',

கண்ணன் பதில் அளிக்கிறான், 'அது எனக்கும் தெரியும் விதுரா, கடவுளே வந்தாலும் மனித சுபாவத்தை மாற்றுவது இயலாத காரியம், என்று மக்களளுக்கு உணர்த்தவே வந்தேன்', என்று.

திரு குருஜி,

இது என் சிற்றறிவிற்கு எட்டியது, இதில் இருக்கும் சொற்குற்றங்களையும், பொருட்குற்றங்களையும் மன்னித்து அருளவேண்டும். மேலும் சரியான பதிலை உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்த்து கத்துகொண்டிருக்கிறேன்.

வணக்கம்

குருபிரசாத் ரா,
ஓசூர்.

சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கூறுவது அவரது பலவீனத்தைக்காட்டவில்லை.

ஏன் என்னைக் கைவிட் டீர் என்று வினவியும் கடவுள் பதிலளிக்கவில்லை. ஆனால் அந்த கேள்விக்கு பதில் இதுதான் என்று ஏசுவை மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பினார் கடவுள், மேலும் கடவுள் ஏசுவையும் அவரது மகத்துவத்தையும் பெருமை படுத்துகிறார்,

ஏசு மனிதனாக அவதரித்ததவர்; எனவே அவரின் மனிதத் தன்மையை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்கத்திற்காகவே கடவுள் ஏசுவின் மூலமாய் ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற கேள்வியை கேட்க்க வைத்திற்கிறார்.:- கே,தினகரன் காராமணி, வேலூர் - 632004.

பட்டனத்தாரை கழுமரத்தில் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டான் மன்னன். ( கழுமரம் என்பது கூா்மையான நுனி உடைய ஒரு மரம் ஆகும்.அதில் குற்றவாளியின் மலதுவாரத்தில் குத்தி வாய் வழியே எடுத்து குத்தி வைத்து விடுவாா்கள் ) இறைவனை என்செயலாவது ஒன்றும் இல்லை. இறைவனே இதுவும் நீயே வகுத்தது என்றால் இதனையும் நானம் மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன் என்றாா். கழுமரம் தீப்பற்றி எாிந்து சாம்பலானது.
எலியா பிறந்த பின் கிறிஸ்து பிறப்பாா் என்பது யுதா்களின் எதிா்பாா்ப்பு. இயேசு தன்னை கிறிஸ்து என்றாா்.யோவான்தான் எலியா என்றாா். யோவான் எலியா என்பதைசவை ஒப்புக் கொள்ளவில்லை. தன்னை பொய்யாக கிறிஸ்து -இறைவனின் தூதா் என்று அறிவித்த குற்றத்திற்கு சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனை பிறப்பிக்கப்பட்டது. சிலுவையில இறப்பவன் சபிக்கப்பட்டவன் என்கிறது புதிய ஏற்பாடு. இயேசு தான் சிலுவையில் அறையப்படுவதை விரும்பவில்லை.தனக்கு ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று நம்பினாா்.ஆனால் சிலுவையில் அறையப்பட்டாா் .மறுநாள் யுதா்களுக்கு சப்பாத்து பண்டிகை. இரவு சந்திரோதயத்திற்கு முன்னா் சிலுவையில் யாரும் தொங்கக்கூடாது.எனவே இயேசுவோடு அறையப்பட்ட திருடா்களைக் கொன்று காவல்கள் நிலத்தில் புதைத்து அடக்கம் செய்தனா்கள்.அனால் இறந்து போனதாக கருதப்பட்ட இயேசுவை வெள்ளை குந்திாிகம் தடவிய துணியால் சுற்றி ஒரு குகைக்குள் வைத்தனா் ? இயேசு இறக்கவில்லை. காப்பாற்றப்பட்டாா்.இறந்திருந்தால் அவரையும் நிலத்தில் குழி தோண்டி அடக்கம் செய்திருக்க வேண்டும்.செய்திருப்பாா்கள்.
ஆக இயேசு சிலுவையில் சாகவில்லை.
என்தேவனே என் தேவனே என்னைஏன் கைவிட்டீர் என்ற இயேசுவின் கூக்குரல் அவரது சோகத்தின் வெளிப்பாடு. அதைாியத்தின் வெளிப்பாடு.அவநம்பிக்கையின், தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடு.

Anonymous
14:53

பாவம் ஏசு, அந்தளு செத்து பல வருசம் ஆச்சு் அவன் பேரல நிங்க பண்ற அட்டகாசம் தாங்க முடியலை....வுட்டடு தலே


Next Post Next Post Home
 
Back to Top