( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பிராமணர்கள் தான் பூஜை செய்ய வேண்டுமா...?
ன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். தற்போது நீதி மன்றத்தில் ஆகம விதியில் அரசு விதிகள் தலையிடக்கூடாது என்ற தீர்ப்பு வந்திருக்கிறது. அதாவது பிராமணர்கள் மட்டுமே பூஜை செய்யும் ஆலயங்களில், மற்ற ஜாதியால் உரிமை கேட்கக் கூடாது என்பது இதன் பொருள் என பலர் கூறுகிறார்கள். இறைவனுக்கு அனைத்து மனிதர்களும் சமம் தானே பிராமணன் மட்டும் பூஜை செய்யலாம் என்றால் அவன் என்ன உயர்ந்தவனா? வழிபாட்டு முறையில் ஜாதி முறையை கடைபிடிப்பது சரிதானா? ஆகமம் வேதங்கள் இப்படிப்பட்ட உத்தரவுகளை பிறப்பித்து இருந்தாலும் கூட, மனித நேயம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் அதை கடைபிடித்து தான் ஆகவேண்டுமா?  எந்த மறைபொருளும் இல்லாமல் உங்கள் மனதில் பட்டதை தெளிவாக கூறுங்கள். எங்களுக்கு சரியான பதிலும், மன ஆறுதலும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இப்படிக்கு,
வண்ணநிலவன்,
தர்மபுரி.

ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதி பாடினான். அவனே குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லுதல் பாவம் என்றும் சொல்லுகிறான். நமது நாடு முழுவதும் மேடைகளில் மிக அதிகமாக பேசப்படுவது ஜாதிகளை ஒழிக்க வேண்டும். ஜாதிகள் இல்லாத சம தர்ம, சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் என்பது தான். சுதந்திரம் பெற்று, இத்தனை வருஷத்தில் ஜாதிகளை ஒழிக்க இந்த மேடை பேச்சுக்களை தவிர வேறு என்ன நாம் உருப்படியாக செய்திருக்கிறோம்? என்று யோசிக்க வேண்டும்.

ஜாதிகள் இல்லை என்றால், ஜாதிகளை நம்பவில்லை என்றால், ஜாதிகளை வளர்க்க விரும்பவில்லை என்றால் முதலில் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் இடத்தில் என்ன ஜாதி என்று கேட்பதை நிறுத்தவேண்டும். அதன் பிறகு சாதி வாரியாக இட ஒதுக்கீடு சலுகைகள் என்று இருப்பதை உடனடியாக மாற்ற வேண்டும். இப்படி மாற்றி விட்டு, சமூகத்தில் ஜாதிகள் இல்லை இல்லாத ஜாதியை ஆலய கருவறையில் மட்டும் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று அரசாங்கமோ, அறிவாளிகளோ கேள்விகள் கேட்டால் அதற்கு பதிலை சொல்லலாம். அதுவரையில் இவர்களுக்கு என்ன கூறுவது?

கல்வியில் ஜாதி வேண்டும். பதவியில் ஜாதி வேண்டும். சலுகையில் ஜாதி வேண்டும். ஆனால், கோவில் கருவறையில் மட்டும் ஜாதி வேண்டாம் என்று சொல்வது ஜாதியின் மேல் உள்ள வெறுப்பா? அல்லது ஆலயத்தின் சொத்துக்களின் மீதுள்ள விருப்பமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கடவுள் படைப்பில் எவனும் உயர்ந்தவனும் அல்ல. தாழ்ந்தவனும் அல்ல. ஆனால், சில குல வழக்கங்களில் சிலருக்கு சில தெரியும். வேறு சிலருக்கு அவைகள் தெரியாது. என் தகப்பனார் சவரம் செய்யும் தொழிலை செய்பவராக இருந்தால் அவர் எனக்கு அதை கற்று தருகின்ற வித்தை வேறாக இருக்கும். என் பாட்டனார் - தகப்பனார் பிறகு நான் என்று வருகின்ற போது அந்த தொழில் நுணுக்கம் நுண்ணியதாகவும் தேர்ச்சி பெற்று சிறப்புடையதாகவும் இருக்கும்.

அதை விட்டு விட்டு ஆறு மாதம் சலூனில் வேலை செய்து, அனுபவம் இருக்கிறது என்ற வகையில் ஒருவன் தொழிலை ஆரம்பித்தால் அது சரியாக இருக்கலாமே தவிர நுணுக்கம் பெற்று முழுமையாக இராது. புரோகித தொழிலும், பூசாரி தொழிலும் ஏறக்குறைய அப்படிதான். சில தொழில்களை கல்லூரி படிப்பின் மூலம் பெற்று விட இயலாது. அது மரபில் ஊற வேண்டும். அப்போது மட்டும் தான் அந்த தொழில் தொழிலாக இருக்கும். நமது தற்கால நாகரீக அறிவு வளர்ச்சியை வைத்துக் கொண்டு சில விஷயங்களை மாற்றுவதற்கு முயற்சி செய்தால் அதில் விபரீதம் தான் ஏற்படும்.

ஆகம விதி படி உருவான கோவில்கள் அனைத்துமே அந்த கால மன்னர்கள் மக்களின் வரிப்பணத்தில் கட்டியது. எனவே, அது மக்கள் சொத்து. அரசாங்கம் தான் விரும்புகிறபடி நிர்வாகத்தையும், வழிபாட்டு முறையையும் நடத்தலாம் என்று சில புத்திசாலிகள் பேசுவதை கேட்டால் வேதனையாக இருக்கிறது. ஆதி கால மன்னர்களின் மாண்புகளை உணராத இந்த தற்குறிகள் மன்னர்களின் ஆத்மாவை காயப்படுத்துபவர்களாகவே நான் கருதுகிறேன். எந்த மன்னனும் கோவிலை எழுப்பிவிட்டு இது என் சொத்து என்று பிரகடனம் செய்யவில்லை. கோவில் தன்னைத் தானே சுயமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று நிலங்களை மானியமாக எழுதி வைத்து தனி அமைப்புகளாக விட்டு விட்டார்கள். மக்களும், அரசாங்கமும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நிர்வாகம் செய்தார்களே தவிர, யாரும் தனியுரிமை கொண்டாடி இறுமாப்பு கொள்ளவில்லை.

ஜீயர்களின் கட்டுபாட்டிலும், மடாதிபதிகளின் கட்டுபாட்டிலும் உள்ள விஷ்ணு, சிவ ஆலயங்கள் தவிர அரசாங்க நிர்வாகத்தில் உள்ள ஆலயங்கள் அனைத்துமே எப்போதும் அந்தத்த ஊர் மக்களை அறங்காவலர்களாக கொண்டு செயல்பட்டு வந்தது. இடையில் வந்த அரசு கோவில் சொத்தை கபளீகரம் செய்து கொள்ள நிர்வாகத்தை வல்லாட்சி தன்மையுடன் பிடுங்கி கொண்டது. இதனால் கோவில் சொத்துகள் பல தவறான முறையில் குத்தகைக்கு விடப்பட்டு யார் யாரோ அனுபவிக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இதை மாற்றுவதற்கு அரசாங்கமும், அறிவாளிகளும் முயற்சி செய்யாமல் ஊருக்கு இரண்டு பேர் என்று இருக்கும் பூசாரிகளை பிராமணர்கள் என்று பழிவாங்க கிளம்பி இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

வழிபாட்டில் ஜாதி கூடாது என்பவர்கள், முதலில் வழிபாட்டை ஏற்பவர்களாக இருக்க வேண்டும். கடவுளை வணங்குகிறவன், நம்புகிறவன் அனைவரும் முட்டாள் என்று பேசுகிற மனிதர்கள், வழிபாட்டில் ஜாதிகள் இருப்பதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எந்த பொது ஜனமும், இவர்களிடம் சென்று பார்ப்பனர்கள் எங்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துகிறார்கள் அதற்காக நீங்கள் போராடுங்கள் என்று விண்ணப்பம் வைத்தததாக தெரியவில்லை. தங்களது அரசியல் வளர்ச்சிக்காக வீணான பிரச்சனைகளை கிளப்பிவிட்டு குளிர்காய நினைக்கிறார்கள்.

பிராமணர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டுமா? அவர்கள் என்ன தேவலோகத்தில் இருந்து பூமிக்கு நேராக இறங்கி வந்த அவதாரங்களா என்று கேள்வி கேட்பவர்கள் முதலில் ஜாதிகளே இல்லாமல் செய்யட்டும். அதன் பிறகும் பார்ப்பனர்கள் ஜாதியை பிடித்துக் கொண்டு ஆடினால், அவர்கள் குடுமியை உண்டு இல்லை என்று ஆக்கி விடலாம். அதுவரை இப்போது இருப்பதே தொடரலாம்.

பிராமணர்கள் மட்டும் தான் பிறப்பால் உயர்ந்தவர்கள், இறைவனுக்கான வழிபாட்டை அவர்கள் தான் நடத்த வேண்டும் என்று இருப்பது இந்து மதத்தின் சாபக்கேடு என்று பலர் பேசுவதை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. பிராமணன் உயர்ந்தவன், அவனே வழிபாடு செய்ய தக்கவன் என்ற விதிமுறை எந்த ஆகமத்திலும் கிடையாது. மேலும் நடைமுறையிலும் அது இல்லை. நான் பிராமணனுக்கு பிறந்தவன். காலை - மாலை இரண்டு வேளையும் காயத்ரி சொல்கிறேன். பூணூல் அணிந்திருக்கிறேன். குடுமி வைத்திருக்கிறேன். அதனால் நான் கருவறையில் நின்று பூஜை செய்வேன் என எல்லா பிராமணனும் கூறி விட முடியாது. அதற்கென்று தனியான தகுதிகள் உண்டு. அது இருப்பவன் மட்டும் தான் கருவறைக்குள் கால் வைக்க முடியும். மற்ற பிராமணர்கள் வெளியே நின்று தான் வழிபாடு நடத்த வேண்டும். நிலைமை இப்படி இருக்க, எரிகிற கொள்ளியில் நெய்யை ஊற்றுகிற வேலையை சிலர் செய்து ஜாதி சண்டைகளை உருவாக்க முனைகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

எல்லாம் இருக்கட்டும் பிராமணர்கள் பூஜை செய்து எங்களுக்கு அலுத்து விட்டது எனவே மாற்று ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று நமது கடவுள்கள் யாராவது இவர்களிடம் மகஜர் கொடுத்தார்களா என்ன? நம் கடவுளுக்காக இவர்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிராமணர்கள் மற்ற இனத்தாரே தாழ்வாக நினைக்கிறார்கள் என்றால், அதை இரண்டு தரப்பினரும் பேசி தீர்த்துக் கொள்ளட்டும். இந்த நரிகளை யாரும் நாட்டான்மைக்கு அழைக்கவில்லை. கோவிலை சுத்தப்படுத்தும் வேலையை விட்டு விட்டு சட்டமன்றங்களை சுத்தப்படுத்துகிற வேலையை இவர்கள் கவனித்தால் நன்றாக இருக்கும்.   + comments + 22 comments

Very Good answer Guruji. Clear and Practically True.Thank you.

தாய்தான் பால் கொடுக்கமுடியும்

பிராமணர்களை ஒழிக்க வேண்டும் ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிடும் இவர்கள் முதலில் இந்து மதத்தையும் அதன் நம்பிக்கைகளையும் தகர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். இவர்களுக்கு இதை சொல்ல உரிமை இல்லை. இந்து மதத்தை மட்டும் குறி வைத்து தாக்கும் இவர்கள் கிறிஸ்தவ, முஸ்லிம் மத நம்பிக்கைகளை தொடவே மாட்டார்கள். அவ்வளவு பயம். ஒட்டு ஆசை. இந்துக்களை, ஜாதியின் பெயரால் பிரித்தாண்டு முஸ்லிம், கிறிஸ்தவ ஓட்டுகளை மொத்தமாக அள்ளி ஆட்சியை பிடித்து கொள்ளை அடிப்பது மட்டுமே இவர்கள் லட்சியம். இவர்களுக்கு ஏழை மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. கவலைப்படுவது போல நடிப்பர்ர்கள். குருஜி சொல்வது போல் ஆகம விதிகளினபடி அமைக்கப்பட்ட பெரிய கோவில்களில் பிராமண ஜாதி மட்டுமே கருவறைக்குள் பூஜை செய்ய தகுதி இல்லை, இதற்கென 12 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதி வைத்தவர்கள். பரம்பரையாக குருகுலம் போல தொடர் பயிற்சி பெர்ற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.எல்லா பிராமணர்களும் கருவறைக்குள் நுழைய முடியாது. இதிலும் சிவாச்சாரியார்கள், குருக்கள், பட்டர்கள், பண்டாரங்கள், நம்பூதிரிகள், என்று பல பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவு மற்றோறொரு பிரிவின் ஆகமங்கள் செய்ய முடியாது. இவர்கள் அனைவரும் பிராமணரும் அல்ல. பல சிறுபான்மையினர் ஆகும். இந்த பணிக்க்காகவே வாழ்பவர்கள். இவர்களுக்கு வேறு தொழில் தெரியாது, இப்படி இருக்கும் போது இவர்களுக்கு பிராமண முத்திரை குத்தி இவர்கள் பிழைப்பை கெடுப்பதுபோல அனைத்து ஜாதிகளும் அர்ச்சகர் ஆகலாம் என்ற புரட்சிகரமான ஆணை கலிஞ்னர் வெளியிட்டதுபோல் கொண்டாடி வருகின்றனர். உண்மையில் இவர்கள் கோவில் சொத்தை கொலை அடிக்கவே திட்டம் போட்டுள்ளனர். அதற்கு சமுக நீதி முகமூடி இட்டு சாயம் பூசிஉள்ளனர். இதனை முட்டாள்கள் பலர் நம்பி ஆதரிகின்றனர்

14:23

நீங்க சொல்றத பாத்த நம்ம நாட்ல யவனும் engineerer and டாக்டர ஆயிருக்கவே முடியாது .
உங்கள காப்பதேற்கான பழமை வாதம்.

Suitable and befitting reply. Hats off.

Excellent answer. everyone wants the benefit based on their caste. No one asking why we keeping caste everywhere. Actually castes exist until world end. We need more castes and More gods.

Excellent answer. everyone wants the benefit based on their caste. No one asking why we keeping caste everywhere. Actually casted exist until world end. We need more castes and More gods.

தங்களது பதில் சரி என்றால், தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் எதற்கு? அந்த பிராமணர்களை தமிழில் ஓதி பூஜை செய்ய சொல்லுங்களேன். தமிழ் நாட்டில் சமஸ்கிருதம் எங்கிருந்து வந்தது? தமிழர்கள் வழிபடும் கோவில்களில் பூஜை செய்யும்போது அந்த மந்திரங்கள் தமிழர்களுக்கு புரிய வேண்டும். தமிழை பிராமணர்கள் ஏற்றுக்கொண்டால், தமிழை கருவறையில் ஓத ஒப்புக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும். தமிழ்க் கடவுள் என்று முருகனை சொல்லிக்கொண்டே அவன் இருக்கும் கருவறையில் சமஸ்கிருத மந்திரம் ஓதுவது தமிழர்களுக்கே வெட்கக்கேடல்லவா?

Super Guruji

Guruvae Saranam!

Vetham clearly tells qualified persons to perform homas and yakjam are only by Viswa Brahmins in nagara kaandam of rik vetham

Excellent ,a very meaningful reply!

மடத்தனமான சமசுக்கிருத எதிர்ப்பு செய்துள்ளார் ஒருவர்.
இந்து மதத்தின் பொதுமொழி அதுதான்...
காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை எவரும் எந்த கோவிலுக்கும் சென்று வழிபட பொதுமொழி தேவை.
மற்றபடி தேவாரமும், திருவாசகமும் தமிழின் சொத்து.
அரபி மொழி, ஆங்கில மொழி வழிபாடு தவறில்லை. சமசுக்கிருதம் மட்டுமே தவறு என்றால் உங்கள் நோக்கம் வேறு ஏதோ...

கோவில்களிலே தமிழிலும் சமசுக்கிருதத்திலும் தேவார வேதபாராயணங்கள் ஏற்றத்தாழ்வின்றி ஓதப்படுகின்றன. வழிபாடுகள் பற்றியும் சிலரின் குறுகிய மனப்பாங்கு பற்றியும் நல்ல கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள். நன்றி ஐயா.

Anonymous
12:38

Dear sir...

I house many speed telugu kannada and hindi urudu... They are now called as tamils... Brahmins learned from the original... If you want.. ask me i will share a link.. where brahmin says in tamil... If you can understand that tamil... I will accept.. let the ones who said tamil... I request them to right tamil thai valthu and show... None of them who are in road kNow that..

Anonymous
13:24

Very silly answer if r an excellent question. I was expecting an unbiased answer. You are saying there's reservation in almost every job and so that implies that caste system is prevalent n the society. Reservation was not meant to aggravate the cancer called Caste. It is rather a medicine. Even if one goes by your logic, there should be reservation in temples as well. And the comparison of a barber is utmost stupidity and by saying this you are supporting the caste based jobs openly. If you learn that job in six months you may not gain the nuanced the job but if you keep doing it with dedication you will excel in that job. If we go by your suggestions then all the IAS, Doctors,IPS should pass on their jobs to their children. Very immature reply.
And for those who simply say "aha oho"... what to say "chaign chap".

Tamil Devaram, Thiruvasagam, Kandaranubuti, Azwar paasuram etc are recited in various temples apart from Sanskirt mantras. Therefore no need to go behind this issue. Sanskirt slokas now not many know as well except few big temples like Chidambaram, Thiruvannamalai, etc.

Anonymous
13:30

Why should I care about what others are doing in other religions. We simply can't use Sanskrit for our religious purposes. That's all I want to immerse while worshipping my God which is possible only through Tamil. The sound of Sanskrit is not just satisfying for many Hindus. Sanskrit is used so that few people can control the masses. 21st century educated Hindus can't tolerate this.
Dot.

Anonymous
13:33

Sariyaa sonninga. Bill gates avaroda pasanga mattumthaan computer use panna muraiyum. Naama thoda kooda arugadhi illa

Fine reply swamiji.
First the foreign languages such as german french Russian should be stopped in schools.
Have they got guts to stop it?
The german people know sanskrit very well and simply mock at us for not learning sanskrit

நாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும் கருத்தில் கொண்டு பாா்த்தால் பிறாமணா்களை விட பிற சாதி மக்களே அதிக எண்ணிக்கையில் புசாாிகளாக பணியாற்றி வருகின்றாா்கள். விசயம் பணம் படைத்த அதிக வருவாய் உள்ள தட்டில் அதிக காணிக்கை விழும் சில கோவில்களை கைப்பற்றுவது என்ற கருத்துதான- பேராசைதான் அனைத்திற்கும் காரணம். கிராமத்து கோவில்களில் தொண்டு செய்யும் பிறாமணா் அல்லாத மக்களுக்கு என்ன உபகாரத்தை இவரகள் செய்து விட்டாா்கள்.பிறாமண சாதியைத்தவிர பிற சாதி மக்கள் யாரும் தங்களது பிள்ளைகள் ஒரு கோவில் புசாாியாவதை விரும்ப மாட்டாா்கள். சும்மா எதையாவது கத்தி வறுத்துக் கொண்டு அலைய வேண்டும் என்று அலையும் சில சிறுக்கா்கள் இப்படி எதையாவது செய்து தொலைக்கின்றாா்கள். பல வருடங்களாக தலைமுறையாக கட்டு குத்தகை செய்த விவசாயியை நிலததை விட்டு வெளியேற்ற நிலத்தின் உாிமையாளருக்கு உாிமை அதிகாரம் இல்லையாம். பாரம்பாியமாக புசை தொழில் செய்தவனை மட்டும் கோவிலை விட்டு விரடட நினைப்பது என்ன நியாயம் ? பிறாமண ஒழிப்பு என்பது வேண்டாத வேலை. நாட்டிற்கு அதிக அளவில் சீா்திருத்த வாதிகளை உருவாக்கித்தந்தது பிறாமண குலம் தான். நாட்டிற்கு தேவை அனைவருக்கும் நியாயமான சமய கல்வியும் அனுஷ்டான முறைகளும். ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் நடத்தும் அந்தா் யோகம் மூலம் சாதி ஒருங்கிணைப்பு சாத்தியம்.

அருமையான விளக்கமான கட்டுரை வரைந்துள்ளார் குருஜி அவர்கள். காலத்துக்கு ஏற்ப வெளியிடப்பட்ட நல்ல பதிவு. அனைவரும் சிந்தித்துச் செயற்படவேண்டும்.சிலர் தமது சுயநலத்துக்காக தேவையற்ற செயற்பாடுகளை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் முதலில் நமது சமய வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வாழ்வார்களாயின் அனேகமான பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.ஓம் நமசிவய அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்.

Anonymous
11:13

ஆரிய பார்பனம் என்பது ஒழிக்க பட வேண்டிய விச பாம்மை போன்றது . தமிழ் மக்கள் இடையே பிறப்பு, தொழிலை வைத்து நால் வர்ணமாக பிரித்து தாங்கள் உண்டு கொழுக்கும், இந்த பார்னிய யூத கூட்டம் சீர்திருத்தை பற்றி பேசுகிறது. எந்த பார்பனியனாது பதில் சொல்லவும் பிறப்பால் எப்படி நீங்கள் உயர்ந்தவர்கள்? கடவுள் உங்களிடம் சொன்னாறா சமஸ்கிருத மொழியில் அர்சனை செய்ய சொல்லி? கடவுள் எப்படி உருவானர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் மூடர் கூட்டமே. காஞ்சிபுரத்தில் ஒரு பார்பான் கடவுள் கருவறையில் காமத்தில் ஈடுபட்டபோது ஆகர்ம விதி என்ன ஆனது? இனியும் நீங்கள் ஊரை ஏய்த்து பிழைக்க முடியாது. உங்களது தாய் தேசம் எது?


Next Post Next Post Home
 
Back to Top