Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்து மத நூல் விற்பனைக்கு     ந்து மதம் என்பது கடலைப் போன்று விரிந்தது. அதில் மூழ்கி முத்தெடுக்கலாமே தவிர, கடலில் முழுமையாக அளந்து விட முடியாது. அளந்தவர்களும் குறைவு. ஆனாலும், எல்லோருக்கும் இந்து மதத்தை முழுமையாக தெரிந்து கொள்ள ஆசை உண்டு. அந்த ஆசையை குருஜியின் “இது தான் இந்து மதம்” என்ற நூல் அழகாக தீர்த்து வைக்கிறது.

வேத கால சிந்தனையில் துவங்கி, நரிக்குறவர்கள் வழிபாடுகள் வரையில் இந்து மதம் எப்படியெல்லாம் அழகுற காட்சி அளிக்கிறது. அறிவுச் செல்வத்தை அள்ளித் தருகிறது என்பதை கொட்டுகின்ற அருவி, நீரோடையாக குதித்துச் செல்வது போல, தனது எழுச்சி மிகு எழுத்து நடையால் வாசகர்களுக்கு விளங்க வைக்கிறார்.

பொதுவாக மதங்களைப் பற்றிய புத்தகங்கள் என்றாலே சலிப்பு ஏற்படும், சோர்வும் ஏற்படும். ஆனால், இந்த நூல் குருஜியின் சுவாரஸ்யமான எழுத்தாற்றலாலும், ஆழமான சிந்தனையாலும், கையில் எடுத்ததை கீழே வைக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பாக செல்கிறது. சுருக்கமாக சொன்னால் இலக்கியத் தரம் வாய்ந்த எளிமையான நாவல் ஒன்றை படிப்பது போல் இருக்கிறது.

ஒருமுறை நீங்கள் படித்துப் பாருங்கள் நமது மதத்தின் அத்தனை பரிணாமத்தையும் ஒரே புத்தகத்தில் தெரிந்து கொண்ட திருப்தி கண்டிப்பாக உங்களுக்கு ஏற்படும். ஆத்மார்த்தமாக படித்த எவரும் தானொரு இந்து என்ற எண்ணத்தில் பெருமிதம் கொள்வார்கள். யாரையும் தாக்காமல், யாரைப் பற்றியும் அதிகம் விமர்சனம் இல்லாமல் இந்து மதத்தின் சிறப்புகளை பற்றி மட்டுமே பேசுகிற இந்த நூல் உங்கள் வீட்டில் இருந்தாலே ஒட்டு மொத்த இந்து தர்மமும் உங்களிடம் இருப்பதாக பெருமையுடன் உணர்வீர்கள்.

“இது தான் இந்து மதம்” 

என்ற நூலை நமது ஆசிரமத்திற்கு நேரில் வருகை தந்து குருஜியின் கரங்களாலும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Contact Form

Name

Email *

Message *