Store
  Store
  Store
  Store
  Store
  Store

கணவனை கட்டிவைத்து அடியுங்கள் !குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். கடந்த சில மாதங்களாக எனது கணவர், வேறொரு பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி வருகிறார். அவருடைய போக்கு எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. அவரை அந்த நினைப்பிலிருந்து விடுவிப்பதற்கு என்ன செய்வது என்றே எனக்கு விளங்கவில்லை. தயவு செய்து இந்த அபலை பெண்ணுக்கு நல்ல வழிகாட்டி வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்குமாறு பணிவோடு வேண்டுகிறேன்.


இப்படிக்கு,
பெயர் சொல்ல விரும்பாத
உஜிலாதேவி வாசகி,
கனடா.னிதர்களாகிய நாம் அனைவருமே ஆறறிவு படைத்தவர்கள். இறைவனின் படைப்பிலேயே மிக உயர்ந்த படைப்பு என்று பெருமைப்பட்டு கொள்கிறோம். காரணம் மற்ற மிருகங்களைப் போல சிந்திக்காமல், பேசாமல் திட்டமிட்டு செயல்படாமல் நாம் இருப்பதில்லை. அவைகளிலிருந்து மாறுபட்ட உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்று நமக்கு நாமே பட்டயம் கொடுத்துக் கொண்டு அலைகிறோம். இப்படி பட்டயம் கொடுத்தது சரிதான் என்று மனிதர்களாகிய நாம் ஒத்து கொள்கிறோமே தவிர ஒரு நாய், கழுதை கூட உங்கள் கணக்கு சரிதான் என்று சொன்னதில்லை.

உண்மையில் மனிதர்களுடைய நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தோம் என்றால் பலருடைய செயல்களில் மனித தன்மை என்பதே இல்லாமல் விலங்குகளின் இயல்பு மலிந்து கிடப்பதை காணலாம். எவ்வளவு தான் ஒருவனுக்கு சுதந்திரம் கொடுத்து பாருங்கள் அவன் அதை உணரமாட்டான். செக்கு மாடு போல சுற்றிய இடத்திலேயே சுற்றி வருவான். சுயமாக யாரையும் நம்பாமல் சொந்த காலில் நில் என்று சொன்னாலும், ஆடுகளை போல அண்டி பிழைப்பதையே தொழிலாக கொண்ட மனிதர்களும் நம்மில் ஏராளம் இருப்பதை அறிய முடியும். ஆடு, மாடு, கழுதை மற்றும் நாய்களை போலவே வண்டு இனத்தை சேர்ந்த மனிதர்களும் உலகத்தில் உண்டு. காரணம் வண்டு மட்டுமே ஒரு மலரில் தேனை அருந்தி விட்டு இன்னொரு மலருக்கு ஈரம் காய்வதற்கு முன்பு பறந்து போகும். அதே போலவே தான் சில மனிதர்கள். மலருக்கு மலர் தாவும் வண்டாக இருந்து கொண்ட மனைவியை விட்டு விட்டு கண்ட பெண்களோடு சுற்றி அலைகிறார்கள். இவர்களை கட்டி வைத்து அடித்தாலும் பாதகம் இல்லை என்பது என் கருத்து.

ஒரு ஜாதகத்தில் ஏழு அல்லது எட்டு வீட்டிற்கு உடைய கிரகம் பாவ கிரகமாக இருந்தாலும் அல்லது பாவ கிரகங்களின் பார்வை பட்டாலும் அவர் இருதார தோஷம் உடையவராக இருப்பார். அல்லது பனிரெண்டாம் வீட்டில் குருவோடு, செவ்வாய் சேர்ந்தாலும் இந்த தோஷம் ஏற்படும். அதே போல ஏழாவது வீட்டுக்குரிய கிரகம் பாவ கிரகத்தோடு கூடி, இரண்டாம் வீட்டில் இருந்தாலும் இத்தகைய வில்லங்கங்கள் உருவாகலாம். உங்கள் கணவர் ஜாதகத்தில் இத்தகைய தோஷங்கள் சில இருக்கின்றன. ஆனாலும், உங்கள் ஜாதகப்படி உங்கள் கணவருக்கு இரண்டாம் தாரம் அமைவது மிகவும் கடினம். எனவே நீங்கள் இருக்கின்ற ஊரில் பாலதண்டாயுதபாணி ஆலயம் இருந்தால், மூன்று பெளர்ணமி நாட்கள் தொடர்ந்து வழிபாடு நடத்துங்கள். கண்டிப்பாக அவரது மனநிலை மாறும். உடனடியாக நிவாரணம் வேண்டுமென்றால் பார்வதி பரமேஸ்வர பூஜை செய்யலாம். கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.

Contact Form

Name

Email *

Message *