Store
  Store
  Store
  Store
  Store
  Store

தலை நரைப்பதாக கனவு வந்தால் !
சுவாமிஜி அவர்களுக்கு, வணக்கம். இந்த வாரத்தில் முதல் நாள் எனக்கொரு கனவு வந்தது. அந்த கனவை கண்ட தினத்திலிருந்து மனதில் பயமும், பதற்றமும், தடுமாற்றமும் ஏற்படுகிறது. என்ன கனவு என்று கேட்டால் இதெற்கெல்லாமா கவலைப்படுவது என்று மற்றவர்கள் என்னை ஏளனம் செய்வார்கள். ஆனால், நீங்கள் அப்படி செய்ய மாட்டீர்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்து, இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன். அந்த கனவில் என் தலைமுடி எல்லாம் நரைத்து, வயதானவள் போல ஆகிவிட்டேன். இருபத்து மூன்று வயது பெண் தலை நரைத்தவளாக இருந்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும்? என் வாழ்க்கை எத்தகைய சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்பதை நினைக்க, நினைக்க கனவு பலித்துவிடுமோ என்ற அச்சம் என்னை சாகடிக்கிறது. தயவு செய்து இந்த கனவிற்கு பலன் சொல்லுங்கள். நரைத்தே தான் தீரும் என்றாலும் வெளிப்படையாக கூறுங்கள் என் மனதை அதன் படி தேற்றிக் கொள்கிறேன். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
பத்மஜா,
நியூ டெல்லி.ண் பிள்ளைகளே தலைமுடியின் மீது தீராத காதல் வைத்திருக்கும் போது பெண் குழந்தைகளின் மனதை பற்றி சொல்லவே வேண்டாம். அறுபது வயதை கடந்தாலும் கூட, வெளுத்த முடியை மறைப்பதற்கு படாத பாடுபடுகிற சீமாட்டிகள் பல பேரை தினசரி பார்க்கிறோம். இதில் மிக இளம் வயது பெண் எப்படியெல்லாம் மனதளவில் சங்கடப்படுவாள் என்பதை நினைத்து பார்த்தாலே வருத்தமாக இருக்கிறது.


ஆனால், இதில் வருத்தப்பட ஒன்றுமே இல்லை. அதற்கு முதல் காரணம் தலையில் நரைப்பதாக கனவு வந்திருக்கிறதே தவிர அதற்கான வேறு எந்த அறிகுறியும் இல்லை. கனவுகள் எல்லாம் நடந்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இந்த பெண் தனது கூந்தலை அளவுக்கு அதிகமாக நேசிப்பதனால் இந்த மனக்குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்று ஒரு பெண்ணின் அழகு என்பது அவள் தலைமுடியில் இல்லை. அவளது அறிவிலும், தெளிவிலும், பண்பிலும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் பெண்ணடிமைத்தனம் மறையும் என்பது என் எண்ணம்.

என் உபதேசம் ஒருபுறம் இருக்கட்டும். கண்ட கனவுக்கான பலனை கூறுவது தான் என் முக்கிய வேலை என்று  நினைக்கிறேன். தலைமுடி நரைப்பது போல கனவு வந்தால், குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் வரப்போகிறார் என்பது அர்த்தமாகும். அதாவது இந்த பெண்ணின் சகோதரிக்கோ, சகோதரனுக்கோ குழந்தை பிறக்கப் போவதாக கூறலாம். இது ஆறு மாதத்தில் நடக்கும்.
Contact Form

Name

Email *

Message *