Store
  Store
  Store
  Store
  Store
  Store

மாற்றம் என்பது எப்படி வரும்?


ட்டையை மாற்றினால்,சாப்பாட்டை மாற்றினால், பழகும் நண்பர்களை மாற்றினால் மாற்றம் வந்து விடுமா?.

செக்குமாடு மாதிரி சுற்றிக் கொண்டே இருக்கிறேன், பார்த்த முகத்தையே பார்க்க வேண்டி இருக்கிறது, பழகிய மனிதரிடமே பழக வேண்டி இருக்கிறது, நாளும் பொழுதும் ஒரே மாதிரி நகர்கிறதே தவிர வித்தியாசம் என்பதை காணமுடியவில்லை என்று தவிப்பவர் நம்மில் எத்தனை பேர்?

தொங்கிய முகம், சோர்ந்து போன கண்கள், உற்சாகத்தை பறிகொடுத்து விட்ட சொற்கள், நடையில் தளர்ச்சி,வயதுக்கு மீறிய முதுமை இதெல்லாம் ஏன்?

வாழ்கையை பற்றிய தவறான கணிப்புக்கள் நம்மிடம் இருக்கிறது, வெளியில் இருந்து மாற்றம் தேடி வரும் என்று கணக்கு போடுகிறோம்.கண்ணுக்கு நேராக தெரியும் பெளதீக பொருளால்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்புகிறோம்.

உண்மையில் மாற்றம் வெளியில் இல்லை வெளியில் இருந்து வரவும் முடியாது.வருவதால் மாற்றத்தை தரவும் முடியாது. சிப்பிக்குள்ளே முத்து இருப்பது போல மாறுதல் என்பது நமக்குள்ளே இருக்கிறது. நம் மனதுக்குள்ளே மறைந்து கிடக்கிறது. ஆணி அடித்து பூட்டப்பட்டிருக்கும் நம் நம்பிக்கை என்னும் கதவை ஓங்கி தட்ட வேண்டும் தட்டினால்தான் மணிக் கதவு தாழ் திறக்கும்.

இறைவன் நாம் ஒடி விளையாட உலகம் என்னும் வண்ணப் பூஞ்சோலையை சமைத்துள்ளான். இங்கே இருப்பது ஒவ்வொன்றும் புத்துணர்ச்சி என்ற ஆடுகளமே! காலத்தை நீ பந்தாக கருதினால் காலத்தோடு சதுரங்கம் ஆடலாம், நீ உன்னை பந்தாக ஆக்கிக் கொண்டால் மைதானத்தில் உதைபடும் பொருளாவாய்.

உதைபட போகிறாயா? விளையாட போகிறாயா? என்பதை நீ தான் முடிவெடுக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறான். அவன் தனக்கு நிகராக மனிதனாகிய நம்மை படைத்திருக்கிறான்.

இறைவன் மனதிற்குள் மாய திரை போட்டு மறைந்திருப்பது போல, மாற்றத்தை ஏற்படுத்தும் மந்திரக்கோலும் நமக்குள்ளே தான் மறைந்து கிடக்கிறது பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் வண்ணப் பசுஞ்சோலையை பரிசாக பெறலாம்.

Contact Form

Name

Email *

Message *