அக்னி தேவன்
அவன் பெயரை உச்சரித்தாலே உதடுகள் சுடும், எழுதி பார்த்தால் கண்கள் கொதிக்கும்.
அவன் அடர்ந்த வனங்களை நிமிடத்தில் பொசுக்குவான். அண்ட சராசரங்களையும்,
கண் இமைக்கு நேரத்தில் சாம்பலாக்குவான்.
அவன் சமாதானமாக இருந்தாலே சமுத்திரத்தில் அனல் பிறக்கும், இப்போது அவன் கோபத்தில் இருந்தான் கோபம் என்றால் சாதாரண கோபமில்லை படைத்த பிரம்ம தேவன் எதிரே வந்தால் கூட நடுநடுங்க செய்யும் ஊழிகால அசுர கோபம்.
அவன் ஆத்திரத்திற்கு காரணம் என்ன?
உட்கார்ந்த ஆசனத்தில் ஓங்கி குத்தினான்! தோல்வி, தோல்வி, எத்தனை முறை தான் தோற்பது தேவாதி தேவர்கள் என்ற பட்டமும், நினைத்த நேரத்தில் நினைத்ததை முடிக்கும் ஆற்றல் இருப்பதாக அறிவுப்பு வேறு இருக்கிறது. ஆனால் என்ன பயன்
அடைந்ததும் அனுபவிப்பதும் அனைத்தும் தோல்வி இந்த தோல்விக்கு முடிவே இல்லையா? என்று ஓங்கிய குரலில் கத்தினான்.
அவனது குரல் தேவேந்திரனின் ஆலோசனை மண்டபத்தை அதிர வைத்தது. நாலாபுறமும் மோதி மீண்டும் மீண்டும் எதிரொலித்தது! அந்த எதிரொலிப்பு அருகிலிருந்த வாயு தேவனை கொதிப்படைய வைத்தது.
வாயு என்ற காற்றின் அதிபதி
அவன் சாதாரணமாகவே மூச்சு விட்டால் மலைகள் அனைத்தும் பறந்து சென்று ஓன்றை ஒன்று மோதி தூள் தூளாக சிதரும் ஆத்திரம் வந்துவிட்டாலோ அண்டங்கள் குலுங்கும் திசைகள் தடுமாறும் இப்போது அவன் சீற்றத்தோடு இருந்தான் ஆனாலும் சிந்தை தடுமாறாமல் பேசினான்
அக்னி தேவன் சொல்லுவது ஒன்றும் தவறல்ல ''தினம் தினம் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கும் நாம், தேவர்கள் என்று அழைத்து கொள்வதற்கு அருகதை இல்லாதவர்களாக இருக்கிறோம். யுத்த களத்தில் தோற்று வரும் நம்மை தேவ லோக மாதர்கள் நகைப்போடு மட்டுமல்ல பயத்தோடும் பார்க்கிறார்கள் . இந்த தோல்விக்கு முடிவு இல்லையா?
அக்னி தேவன் மீண்டும் கர்ஜித்தான் மானிடனாக இருந்தாலே, ஆணாக பிறந்துவிட்டால் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பது பொதுவான விதி. தனது குல பெண்களை அபாயத்தில் விட்டு விட்டு எந்த மனிதனும் சுகமாக இருந்ததாக சரித்திரம் இல்லை. மனிதருக்கே இந்த விதி என்றால் தேவர்களுக்கு... ? என்று கேள்வி குறியோடு தேவேந்திரனை நோக்கினான்.
பதில் சொல்லுங்கள் தேவர்களின் தலைவா? எப்போதுமே இல்லாத தோல்வி இப்போது நமது குலத்திற்கு வந்திருக்கிறது. தேவர் குலத்தில் பிறந்த இளைஞர்களை துடிக்க, துடிக்க யுத்த களத்திலேயே பலியாக்கி கொண்டு இருக்கிறோம். நமது மாதர்கள் மாங்கல்யம் இல்லாமல் மருண்ட கண்களோடு பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். இழந்தது மாங்கல்யம் மட்டும் தானா? அல்லது தனது மானத்தையும் சேர்த்து இழக்க போகிறோமா? என்று துடியாக துடித்து தினம் தினம் செத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் கூறப்போகும் பதில் என்ன?
தேவந்திரனின் அழகான முகம் தண்ணீர் இல்லாத தாமரை மலரை போல வாடி கிடந்தது. அக்னி தேவனும் வாய்வு தேவனும் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகள் இந்திரனின் மனதில் எதிரொலித்து பேரிரைச்சல் செய்தன.
இந்திரன் என்பவன் இந்திரியங்களின் அதிபதி இன்பங்களின் மொத்த முதலாளி ஆனந்தம் என்ற உணர்வு கூட அவன் கை தொடமாட்டாதா என்று தவம் கிடக்கும் பொய்கையில் பூத்த புது மலர்கள் அவனது படுக்கை அறையை அலங்கரிக்க வரம் கேட்கும் அத்தகைய இந்திரன் இப்போது சத்து இல்லாமல் கிடந்தான் சக்தி இல்லாமல் பேசி என்
உங்களது கோபமும் வேகமும் நியாயமானது அதை நான் புரிந்து கொள்கிறேன். தினம் தினம் நமது இளைஞர்களை பிணமாக பார்க்கும் போது நான் ஏன் இந்த பதவியில் இன்னும் ஒட்டி கொண்டிருக்கிறேன் என்று எனக்கே வெக்கமாக இருக்கிறது. நமது வீரர்கள் வீரத்தில் சோர்ந்தவர்கள் அல்ல. அசுர வீரர்களுக்கு எந்த வகையுல்ம் குறைந்தவர்களும் அல்ல .
யுத்தம் ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி வெற்றி கனியை நகர்த்தி கொண்டு தான் இருக்கிறது ஆனால் ஒவ்வொரு நாள் யுத்த முடிவிலும் மாண்ட நமது வீரர்கள் மாண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அசுர வீரர்கள் மீண்டும் உயிர் பெற்று பூரிப்போடு எழுந்து விடுகிறார்கள். இதன் ரகசியம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. வீணையிலிருந்து முகாரி ராகம் மெல்லியதாக ஒலிப்பது போல் இந்திரனின் குரல் இருந்தது.
இந்திரன் என்றால் தேவர்களின் தலைவன் வெற்றி ஒன்றையே இதுவரை சுவைத்து பார்த்தவன் தனக்கு எதிராக எவரும் இருப்பதை அனுமதிக்காதவன் பெண்மை விரும்பும் ஆண்மையின் மகாமேரு அவன். அப்படி பட்ட இந்திரனே இப்போது நாடி நரம்புகள் தளர்ந்து ஒரு கிழவனை போல தனது வைர சிம்மாசனத்தின் மூலையில் ஒண்டி கிடந்தான்.
ஆத்திரத்தின் உச்சத்திலிருந்த அக்னி தேவனுக்கு நிலைமை புரிந்தது. இந்திரனும் பாவம் என்ன செய்வான். எத்தனையோ யுத்த தந்திரங்களை வகுத்து கொடுக்கிறான் புதிது புதிதாக ஆயுதங்களை உருவாக்கி தருகிறான் ஆனாலும் எந்த பலனும் இல்லை.
மலையின் மேலே சிறு கல் மோதி உடைந்து சிதறி விடுவது போல இந்திரனின் படை அசுரர்கள் மீது மோதி மாண்டு போனது தான் இதுவரை கண்ட நிஜம். தேவர்களின் உடல் பலம் குறையவில்லை. ஆயுதங்களை கையாளும் லாவகம் மறைந்து போய்விட வில்லை உயிரை அவர்கள் துச்சமாக மதித்து தான் யுத்த களத்தில் நிற்கிறார்கள். ஆனாலும் தேவ வீரர்கள் செத்தவர்கள் செத்தவர்கலாகவே இருக்கிறார்கள் அசுரர்கள் மாண்டாலும் மரணத்திலிருந்து மீண்டு விடுகிறார்கள். இது எப்படி சாத்தியம் செத்தவர்கள் பிழைக்கும் விதியை மீறும் விதியை உருவாக்கி நடத்துபவர்கள் யார்? என்று அக்னி தேவனுக்கும் புரியவில்லை. அதனால் குழப்பத்தோடு இந்திரனின் முகத்தை பார்த்தான்.
வாயு தேவனின் சுவாசம் இப்போது சற்று நிதானபட்டு இருந்தது. இந்திரனே இறந்து போன அசுரர்கள் மீண்டும் உயிர் பெற்று எழுவதற்கு என்ன காரணமாக இருக்கும் மஹா தேவரான சிவபெருமான் புதிய வரங்கள் எதையாவது அவர்களுக்கு கொடுத்திருக்கிறாரா? என்று வினவினான். இல்லை என்பது போல தேவேந்திரன் தலை அசைத்தான்
வரமும் கொடுக்கவில்லை புதிய விதியும் வகுக்கவில்லை பிறகு எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது? உண்மையிலேயே அசுரர்கள் தேவர்களை விட அதி மேதாவிகளா? நம்மிடத்தில் இல்லாத எதோ ஒரு அபூர்வ சக்தி அவர்களிடம் இருக்கிறாதா? என்று இன்னொரு சந்தேகத்தை அங்கே கிளப்பினான் அக்னி
அசுரர்களின் பட்டினங்களை பாக்கும் போது எனக்கு வியப்பாக இருக்கிறது. கற்களை கொண்டே எத்தனை அழகிய மாட மாளிகைகளை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் நமது மயன் அல்லும் பகலும் சிந்தித்து உருவாக்கிய தேவலோகத்து வீதிகள் கூட அத்தனை நேர்த்தியாக இல்லை அசுரர்களின் வீதிகள் எறும்புகள் அணிவகுத்து போவது போல வரிசையாக இருப்பதே தனி அழகு.
அவர்களின் அந்தப்புரங்களில் உள்ள தடாகங்கள் கூட சித்திரங்கள் போல மின்னுகின்றன வண்ண வண்ண மீன்களை அதில் அவர்கள் நீந்த விட்டிருக்கும் அழகே அழகு அரண்மனையில் மின்னும் ஒளிவிழக்குகள் அவர்கள் அணியும் பட்டாடைகள் எல்லாமே நேர்த்தி தான் நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று அவர் களிம் விஞ்சி இருப்பது உண்மை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் வஞ்சகம் இல்லாத வாயுதேவன் வெள்ளை மனதை திறந்து வைத்தான்
போதும் நிறுத்துங்கள் எதிரியை புகழ்வது என்பது ஒரு வகை தோல்விை வைரம் போன்ற நம் உள்ளத்தை அது ஊனப்படுத்தி விடும் நம்மை விட ஆயிரம் சிறப்புக்கள் அவர்களிபம் கொட்டிக் கிடந்தாலும் அவர்கள் நம்மால் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் செங்குருதி மட்டுமே நமது வண்ணக் கலவை துண்டிக்கப்படும் உறுப்புக்கள் மட்டுமே நாம் ரசிக்கும் கலைச் சிற்பங்கள்
இடிக்க வேண்டிய நேரத்தில் இந்திரன் இடித்து தன்னை தலைவன் என்று நிலை நிறுத்தினான் காற்றுக்கு அதிபதியும் நெருப்புக்குத் தலைவனும் தனது தவறுகளை ஒத்துக் கொண்டவர்களாய் மெளனம் காத்தார்கள் அவர்களின் இந்த மொனம் வேரொறு பூசும்பத்திற்கு விதையாய் விழுந்தது
.