Store
  Store
  Store
  Store
  Store
  Store

சீனாவிற்கு கொள்ளி வைப்போம்
   கொரனா என்ற நுண்ணுயிர் தினசரி ஆயிரக்கணக்கான இந்திய மக்களை கொன்று குவிக்கிறது வேலையின்மை பசி பட்டினி என்பவைகள் இன்னொருபுறம் இந்தியர்களை வதைக்கிறது. நாளைய பொழுது எப்படி விடியுமோ என்று ஓவ்வொரு குடிமகனும் துடியாய் துடித்து கொண்டு இருக்கிறான் இந்த நிலையில் சீனா என்ற அதிபயங்கர நாடு நம் மீது ஆதிக்கம் செலுத்த முனைகிறது

உலக வரலாற்றில் இதுவரையில் ஒருபோதும் உலக முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே காரணத்திற்காக இப்படி முடங்கி போனது எப்போதுமே நடந்து இல்லை இத்தகைய அதிபயங்கர கொடூர அனுபவத்தை உலக மக்களுக்கு வாரி வழங்கி ஈவு இரக்கமின்றி சிரித்து மகிழ்கிறது சிவப்பு சீனா

அன்று கடல்வழியே கப்பல் ஒட்டி கண்ணில் கண்ட நாடுகளை எல்லாம் கபளீகரம் செய்தது கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் கொள்ளைக்கார கும்பல்

இன்று நவீன கிழக்கிந்திய கம்பெனியாக உருவெடுத்து இருக்கிறது கம்யூனிச சீனா அது ஒரு காலத்தில் உலக நாடுகளோடு பட்டு வணிகம் செய்ய ஒரு பாதையை வகுத்திருந்தது அந்த பட்டு சாலையை இன்று புணரமைப்பு செய்து ஏழை எளிய ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு திருப்பி கொடுக்க முடியாத அளவிற்கு கடன்களை கொடுத்து அவர்களை தங்களது வட்டி அடிமைகளாக ஆக்கி வைத்திருக்கிறது.

அப்படிப்பட்ட அடிமைகளாக பாகிஸ்தானும் ஸ்ரீலங்காவும் நேபாளமும் ஆகிவிட்டார்கள் என்பது தனியாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆனால் இதை விட அபாயகரமானது உலக சுகாதார மையத்திற்கு எத்தியோப்பியா நாட்டின் தீவிரவாத கும்பலின் தலைமை வழிகாட்டியாக இருந்தவரை தலைவராக்கி தனது ஆளுகைக்கும் ஆசைக்கும் ஓத்து வராத இதர உலக நாடுகளின் மீது பயோவார் என்ற நுண்ணுயிர் ஆயுதத்தை ப்ரோயோகம் செய்ய தீர்மானித்து இருந்தது

இந்த நேரத்தில் தான் தன் வினை தன்னை சுடும் என்பது போல ஊகான் மாகாணத்தில் கொரனn வைரஸ் கசிந்து பரவியது. உலக மக்கள் அனைவருமே இன்று சோற்றுக்கு அல்லாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் சீனாவின் மீது பாய்ந்த போது சீனா உள் பிரதேசங்களில் மக்களும் சிவப்பு அரசாங்கத்தின் மீது கொதிப்படைய துவங்கின. ஹாங்காங்கில் ஜனநாயக புரட்சி தைவானில் சுகந்திர பிரகடனம் என்று ஒன்றன்பின் ஒன்றாக சீனாவின் தண்டு வடத்தில் பேரிடியாக இறங்கின.

இந்த நிலையில் தான் சீன மக்களின் மனம்போக்கை வேறு வகையில் மாற்ற இந்தியாவின் மீது நேரடியான ராணுவ தாக்குதலை துவங்கி இருக்கிறார்கள்.

உலகம் அறுபதுகளில் இருந்தது போல இப்போது இல்லை எவ்வளவோ மாறி விட்டது முன்னேறி விட்டது சுண்டைக்காய் தேசமான பாகிஸ்தானில் கூட நூற்றி அறுபது அனு ஆயுதங்கள் இருக்கின்றன. அன்றைய நாளை போல் இந்தியாவில் நேருவை போல கிருஷ்ண மேனனை போல எல்லாவற்றையும் வெள்ளையாகவே நம்பிவிடும் அப்பாவி தலைவர்கள் இன்று யாருமே இல்லை.

நாடு கண்ணுக்கு தெரியாத நோய் கிருமிகளோடு போராடி கொண்டிருக்கிறது இந்திய மக்களுக்கு வறுமை புத்தியதல்ல என்றாலும் கூட இன்று மிகவும் வேதனையை அனுபவிக்கிறார்கள் அதற்காக எதிரி வந்து தாக்கும் போது ஒட்டுமொத்தமாக மண்டியிட்டு தலைகவிழ்ந்து நிற்கும் கோழைகள் அல்ல இந்திய மக்கள் ஒருபிடி சோறு இல்லை என்றாலும் ஒரு அடி நிலத்தை கூட மாற்றானுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற போராட்ட குணம் கொண்ட சத்திரியர்கள் நாங்கள் பல்போன கிழவி கூட பகைவரை கண்டால் பாயும் புலியாக மாறுகிற தேசம் இந்த இந்திய தேசம்

நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம் ஜாதியாலும் மதத்தாலும் இனதாலும் மொழியாலும் நாம் பிரிந்து கிடக்கலாம் ஆனால் நாம் தேசத்தால் இந்தியர்கள் உலகத்திற்கே தலைமை ஏற்கும் தகுதி படைத்த பாரத புத்திரர்கள். உடைமைகள் அனைத்தையும் இழந்தாலும் உரிமைக்காகவும் மானத்திற்காகவும் எதிரிகளை ஓட ஓட விரட்டும் வல்லமை படைத்தவர்கள் நாம்

நமது வீர மறவர்கள் நமக்காக இரத்தம் சிந்தி இருக்கிறார்கள் தங்களது இன்னுயிரை தாய் நாட்டிற்காக தியாகம் செய்திருக்கிறார்கள் அவர்களின் குருதியின் மீது சத்தியம் செய்வோம் சீன பொருட்களை கைகளாலும் தீண்ட மாட்டோம் சீன ஊடகங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டோம் தவளைகளையும் கரப்பான் பூச்சிகளையும் உண்டு வாழ்கிற ஈனபிறவிகளின் பேராசைக்கு கொள்ளி வைப்போம்....

குருஜி

Contact Form

Name

Email *

Message *