Store
  Store
  Store
  Store
  Store
  Store

முஸ்லிகளுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்ட் !     லகம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை மனித குலத்தின் மேன்மைக்காக பலவிதமான சித்தாந்தங்கள் உருவானது உண்டு அவற்றில் பல கால சூழலில் காணாமல் போய்விடும் சில மட்டுமே நிலைத்து நிற்கும் அப்படி நிலைத்து நிற்கின்ற சித்தாந்தங்களை சிறப்பு வாய்ந்தது என்று கருதுவது எந்த வகையிலும் தவறு கிடையாது கம்யூனிசம் என்பதும் அந்த சிறப்பான வரிசையில் ஒன்றாகும். அந்த தத்துவத்தை மாமேதை கேஹல் அவர்களிடமிருந்து மூல கூறுகளை பெற்று சிறப்பானதாக உருவாக்கியவர் காரல்மார்ஸ் ஆவார். 


காரல்மார்க்ஸ் தனது சொந்த வாழ்க்கையில் அளவிடமுடியாத கஷ்டங்களை அனுபவித்து தனது சுற்றுப்புறத்தில் உள்ள சக தோழர்களின் துயரங்களை உணர்ந்து இந்த சித்தாந்தத்தை உருவாக்கினார். அதனுடைய மொத்த வடிவத்தை மூலதனம் என்ற நூலில் நாம் தெளிவுற காணலாம் 


சிந்தனைவாதிகளின் உலகில் உட்டோபியம் என்ற ஒரு கருதுகோள் உண்டு உட்டோபியம் என்றால் கற்பனையான இன்ப உலகமென்று நாம் பொருள்கொள்ளலாம். கம்பன் தன் ராமாயணத்தில் அயோத்தியையும் தசரதனின் ஆட்சி சிறப்பையும் அபரிதமான முறையில் வர்ணனை செய்வான். அயோத்தியில் எந்த வீட்டிலும் கதவு கிடையாது. காரணம் அங்கே திருட்டு கிடையாது அங்கே அன்ன சத்திரம் எதுவும் இல்லை. காரணம் அங்கே பசியால் யாரும் வருந்துவது இல்லை என்ற மாதிரி அந்த வர்ணனை விரிந்து செல்லும். அதன் பெயர் தான் உட்டோபியம் 


ஏறக்குறைய கம்யூனிசம் என்பதும் அந்த வகையை சார்ந்த சிந்தனை என்று தான் நமக்கு தோன்றுகிறது. காரணம் காரல்மார்க்ஸ் கற்பனை செய்த பொதுவுடைமை சமூதாயம் என்பது வேறு அவனது வழி தோன்றல்கள் உருவாக்கிய சமூதாயம் என்பது வேறு ரஷ்யாவிலும் மற்றும் பல பொதுவுடைமை நாடுகளிலும் இதுவரை நடைமுறையில் இருந்த கம்யூனிச அரசியல் வரலாற்றை பார்க்கிற போது யாருக்காக இருந்தாலும் அப்படி தான் தோன்றும். காரல்மார்க்ஸ் தனது அரசியல் தத்துவம் விஞ்ஞான ரீதியாக அரசு நிர்வாகமாக மாறி இல்லாமை இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று கருதினாரே தவிர ஒருபோதும் யாரையும் கட்டுப்படுத்த வேண்டும் தனிமனித சிந்தனையை மழுங்கடிக்க வேண்டும் என்று நினைத்தது கிடையாது. மூலதன புத்தகத்தை படித்தபோது எனக்கு அப்படி தான் தோன்றியது. 


தற்போதைய சீன அரசாங்கம் தன்னை பெருமையோடு கம்யூனிச சாம்ராஜ்யம் என்று அழைத்து கொள்கிறது. தனது பார்வை எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் சிவப்பு சித்தாந்தம் மலர வேண்டுமென்று விரும்புகிறது. ஆனால் சீன அரசாங்கத்தின் செயல்பாடுகள் காரல்மார்க்சின் எண்ணத்திற்கு முற்றிலும் விரோதமாகவே இருக்கிறது என்று தான் தெரிகிறது. 


நான் அவர்கள் கொரானா வைரஸை உருவாக்கி உலக முழுக்க பரவவிட்டதையோ நமது லடாக் எல்லையில் வீணான ஆக்கிரமிப்பை செய்ததையோ தைவான் மற்றும் ஹாங்ஹாங்கில் அவர்கள் நடந்து கொள்ளும் முறையை பற்றியோ சொல்ல வரவில்லை தனது சொந்த நாட்டில் தனது சொந்த மக்கள் மீது அவர்கள் பிரோயோக படுத்துகிற அடக்குமுறை பற்றியும் வன்முறையை பற்றியும் தான் பேச வருகிறேன். 


நாற்பத்தி ஒன்பதாவது வருடத்திற்கு முன்பு கிழக்கு துர்கிஸ்தான் என்ற ஒருநாடு சீனாவுக்கு பக்கத்தில் இருந்தது அது மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டது அங்கே நூற்றுக்கு தொண்ணுறு சதவிகித மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தார்கள் அவர்கள் தங்களை தைமூர் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று அழைத்து கொண்டாலும் அவர்களை உலக மக்கள் வீஹர் இன முஸ்லிம் என்றே அழைத்தார்கள். அடிப்படையில் அந்த மக்கள் மிக அதிகமான இறை பற்றும் யாருடைய வம்பு தும்பிற்கு போகாத அமைதியான குணமும் கொண்டவர்கள் அவர்களிடத்தில் சிவப்பு சீன அதிகாரிகள் நீங்கள் உங்கள் பகுதியின் உள்விவகாரங்களை கவனித்து கொள்ளுங்கள் உங்களுக்கான இராணுவ பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளை நாங்கள் கவனித்து கொள்கிறோம் என்று நயம்பட பேசி அந்த பகுதியை சீனாவோடு இணைத்து கொண்டார்கள். 


சீனாவோடு அந்த பகுதி இணைக்கப்பட்ட சில காலத்திலேயே கிழக்கு துர்கிஸ்தான் என்ற அதன் பெயர் மாற்றப்பட்டு ஷின்ஜியாங் என்ற சீன பெயர் சூட்டப்பட்டது. அந்த மக்கள் அப்போது அதை பற்றி பெரியதாக கண்டுகொள்ள வில்லை. காரணம் இது இயற்கையாக நடப்பது ஒரு பெயரை மாற்றுவதனால் என்ன நடந்துவிட போகிறது என்று தங்களது வழக்கமான தொழில்களிலும் தொழுகையிலும் கவனம் செலுத்தி வந்தார்கள் 


அடுத்தகட்டமாக சீனா ஒரு வேலையை செய்தது அந்த மக்கள் பாரம்பரியமாக பேசி இருந்த மொழியை பின்னுக்கு தள்ளவிட்டு பள்ளிக்கூடம் அனைத்திலும் சீன மொழியை கட்டாய பாடமாக கொண்டுவந்தார்கள். இப்போது அங்கு சில கசமுசா ஏற்பட்டது சீனா நமது பண்பாட்டை சிதைப்பதற்கு முற்படுகிறது என்று கருதிய சில உள்ளூர் இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள். 


இந்த நேரத்தில் தான் வளைகுடா நாடுகளிலுள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க துணிந்த அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது சுயலாபத்திற்காக இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்தார்கள். முஸ்லிம் என்றாலே அவன் தீவிரவாதி என்ற பிம்பத்தை உலக அளவில் உலவ விட்டார்கள். 


சீனாகாரனுக்கு மூக்கில் வேர்த்து விட்டது ஷிங்ஜியாங் பகுதியிலும் இஸ்லாமிய அடிப்படைவாதம் புகுந்துவிட்டால் சிவப்பு சீனா பச்சையாக மாற துவங்கிவிடுமென்று அஞ்சி தனது நாசகார வேலையை வீகர் இன முஸ்லிம்கள் மீது ஏவி விட ஆரம்பித்தார்கள். இலங்கையில் தமிழ் மக்களை இன அடிப்படையில் வேரறுப்பதற்காக என்ன நடவடிக்கையை செயல்படுத்தியது அதே வேலையை சீனா செய்தது. 


அதாவது வீகர் இனத்து ஆண்மக்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக கைது செய்து ஆடுமாடுகளை கொட்டகையில் அடைப்பது போல ஒரு முகாமிற்குள் அடைத்தார்கள். அப்படி அடைக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தையும் தாண்டுமென்று ஒரு ஆய்வு சொல்கிறது. அடைக்கப்பட்ட அவர்களிடத்தில் உள்ள இஸ்லாமிய அடையாளங்கள் அனைத்தும் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது அதாவது தாடி வைக்க கூடாது தொப்பி அணியக்கூடாது புனித குரானை ஓத கூடாது தொழுகை நடத்த கூடாது பிரார்த்தனையில் கூட ஈடுபட கூடாது. என்று கடுமையான சட்டங்களை போட்டார்கள் 


வீகர் இனத்து பெண்கள் தங்கள் சுய ஜாதி ஆண்களை திருமணம் செய்ய கூடாது மற்ற சீன இளைஞர்களை தான் கட்டாயமாக மணமுடிக்க வேண்டும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது இரண்டாவதாக குழந்தை தப்பி தவறி பிறந்து விட்டால் மிக கொடுமையான தண்டனை கிடைக்கும். என்றெல்லாம் சட்டங்களை வகுத்து இன்று வரையிலும் செயல்படுத்தி வருகிறார்கள். 


மருத்துவத்தில் மனித உறுப்புகளில் சில கெட்டுப்போய் விட்டால் அவற்றை அகற்றிவிட்டு வேறு உறுப்புகளை தானமாக பெற்று அமைத்து கொள்வது நவீன மருத்துவத்தின் சிறப்பான சாதனையாகும். உதாரணமாக கண்கள், சிறுநீரகம், இதயம் உட்பட இன்னும் சில உடல் பாகங்களை சொல்லலாம். இந்த உடல் உறுப்புகள் இறந்து போனவர்களின் உடம்பிலிருந்து எடுக்கப்படுவது வாடிக்கை இந்த உறுப்பு வியாபாரம் என்பது உள்நாட்டிற்குள் மட்டுமல்ல வெளிநாட்டிற்கும் அனுப்பபடுகிறது. இதை ஒரு கருணை வியாபாரம் என்று சொல்லலாம். சமீப காலமாக சீனாவிலிருந்து மிக அதிமாக மனித உறுப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டன இந்த உறுப்புகள் சீனாவுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என்ற கேள்வி எழுந்த போது சீனா சொன்ன பதில் எங்கள் நாட்டில் மரணதண்டனை பெறுகின்ற கைதிகளின் உடல் உறுப்புகளை அனுப்புகிறோம் என்கிறார்கள் இதில் மிக முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும் உலகத்திலேயே மிக அதிகமான மரண தண்டனை சீனாவில் தான் நிறைவேற்றப்படுகிறது. 


வீகர் முஸ்லிம்களை நவீனமயமாக மாற்றுவதாக கூறி கொட்டகைகளில் அடைத்து வைத்திருக்கிறார்களே அங்கே இருக்கும் மனிதர்களில் யாரேனும் ஒருவர் சிறிய தவறை செய்தால் கூட அவருக்கு மரண தண்டனை தான் உடனடியாக கொடுக்கப்படுகிறது. ஒருமனிதனை உயிரோடு வைத்து கொண்டே துடிக்க துடிக்க அவன் கண்களை பிடுங்குவது, மார்பை கிழித்து இதயத்தை உருவி எடுப்பது சிறுநீரகத்தை அறுப்பது போன்ற கொடிய செயல்களை ஹிட்லர் கூட செய்தது இல்லை ஆனால் அந்த கொடூரத்தை இந்த நவீன இருபத்தியோராம் நூற்றாண்டில் சீனா நடத்துகிறது. உலகத்தின் கண்முன்னே தன்னை பிடிக்காத தன்னிடம் எதிர்கேள்வி கேட்கின்ற சராசரி பிரஜையை கொல்ல வேண்டும் என்று எந்த மூலதன புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.


இது சீனாவின் உள்நாட்டு பிரச்சனை என்று உலகம் ஒதுங்கி நடந்தால் இந்த உலகத்திற்கு மனசாட்சி கிடையாது. ஈவு இரக்கம் கிடையாது. மனித தன்மையே கிடையாது என்பது தான் நிஜமாக இருக்கும். அமெரிக்க நாட்டில் ஒரு கறுப்பின மனிதர் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட போது உலகமே கொதித்தெழுந்து தனது கண்டனத்தை உரக்க சொன்னதே இன்று அந்த உலகம் சீனாவை பார்த்து மெளனமாக கைகட்டி நிற்பது எதற்க்காக? 


மனிதாபிமானம் மனித உரிமை என்றெல்லாம் கரிசனத்ததோடு பேசுகிற உலக கம்யூனிஸ்ட்களும் மனித உரிமை அமைப்புகளும் இடது சாரி தோழர்களும் எங்கே போனார்கள். சீனாவின் பிரஜைகள் அந்த அரசால் சாகடிக்க பட்டால் அவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு உயிர் இல்லையா? உணர்வு இல்லையா? 


எங்கோவொரு இஸ்லாமியர் சிறிதளவு பாதிக்கப்பட்டாலும் கொதித்து போகும் அரபு உலகமும் முஸ்லீம் அமைப்புகளும் சீனாவில் நடக்கும் கொடுமைகளை கண்டு கண்மூடி கிடப்பது எதற்க்காக? ஒருவேளை இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் தான் இவர்களால் குரல் கொடுக்க முடியுமா? சீனாவில் முஸ்லிம்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்தாலும் அதை பற்றிய அக்கறையும் கவலையும் எங்களுக்கு இல்லை என்கிறீர்களா? அல்லது சீனாவில் கொல்லப்படுவது முஸ்லிம்களே கிடையாது என்கிறார்களா? இதை அவர்கள் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும். 


இன்னொரு வேதனையும் சீனாவில் நடக்கிறது அங்குள்ள கிருஸ்தவ தேவலாயங்களில் மிக கண்டிப்பாக மாசேதுங் புகைப்படமும் தற்போதைய அதிபரின் படமும் கண்டிப்பாக சுவர்களில் மாட்ட வேண்டும் அத்தோடு அல்லாமல் பைபிள் மற்றும் குரானின் வாசகங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக திருத்தி எழுதப்பட்டிருக்கிறதாம். வருங்காலத்தில் புத்தரை கூட அவர்கள் கம்யூனிஸ்ட் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 


கொல்லப்படுவது கொடுமைப்படுத்தபடுவது எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எந்த இனத்தவர்களாக இருந்தாலும் அவர்களை மனிதர்கள் என்ற அடிப்படை கண்ணோட்டத்திலாவது கவனிக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் கொடிபிடித்து கோஷம் போடும் நமது காம்ரேட்கள் இதற்காகவும் ஒரு போராட்டத்தை நடத்தி அதன் பிறகு இந்திய அரசியலை விமர்சனம் செய்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன். ஒருவேளை நமது தோழர்கள் சீனாவை பற்றி நினைக்கும் போது மட்டும் சிந்தனை அற்றவர்களாக மாறிவிடுகிறார்களோ என்னவோ? அல்லது யார் கண்ணிலும் படாமல் மறைந்து கொள்கிறார்களோ? என்று தோன்றுகிறது. 

குருஜி


Contact Form

Name

Email *

Message *