Store
  Store
  Store
  Store
  Store
  Store

மதம் மாற்ற இந்தியா வந்த துரோகி !


குருஜியின் பைபிள் பயணம் - 6


( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )


பிரகதீஸ்வரன்:- கிறிஸ்தவ மதத்தை விமர்சிக்கிற நீங்கள் கூட இயேசுவை ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் அவரை கடவுளாக அல்ல மஹானாக அல்ல மனிதனாக கூட ஏற்க முடியாத மனிதர்கள் இருப்பது விந்தையிலும் விந்தை உண்மையில் இயேசு உலகில் வாழ்ந்தாரா? இல்லையா?


குருஜி:- வினை விதைப்பவன் வினை அறுப்பான் தினை விதைப்பவன் தினை அறுப்பான் என்பது நம் நாட்டு பழமொழி அதாவது எதிரியை அடிக்க வேண்டும் என்று நினைத்தால் நம்மை எவனாது ஒருவன் அடிப்பான் எனவே தீமையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதே என்று நமது பெரியவர்கள் நமக்கு புத்தி சொல்லி வளர்த்து இருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கு புத்தி சொல்லுவதற்கோ இது தான் தர்மம் என்று எடுத்து கூறுவதற்கு இன்றுவரை யாரும் இல்லை. அதனால் அவர்கள் யார் எக்கேடு கெட்டாலும் தனக்கு நன்மை வந்தால் போதும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வாழ்ந்து வருகிறார்கள். 


முன்னோர்களின் வாழ்க்கை சரித்திரம் என்பது நமக்கு தெரியும் ஆனால் அந்த சரித்திரம் என்ற ஒன்றை வைத்து கொண்டு ஐரோப்பியர்கள் உலகில் ஆடிய ஆட்டம் இருக்கிறதே அதை வார்த்தைகளால் அவ்வளவு விரைவில் கூற இயலாது. 


ஐரோப்பாவிலும் அரபு நாடுகளிலும் அடிமைமுறை என்பது பரவலாக இருந்தது என்று உனக்கு தெரியும். அதிலும் குறிப்பாக ஐரோப்பியர்கள் மனிதர்களை அடிமைகளாக விற்று சம்பாதித்த பணம் மலையளவு இருக்கும். அப்பாவிகளான ஆப்பிரிக்க நீக்ரோக்களை ஆயுத முனையில் கடத்தி வந்து அடிமை சந்தையில் விற்று கொழுத்தார்கள் வெள்ளை ஐரோப்பியர்கள். வெள்ளைக்காரன் மூளை சுயநலத்தால் முத்தி போன மூளையாகும் தனது அடிமை வணிகம் எப்போதும் நிலைத்திட தனது புத்தியை பயன்படுத்தி ஒரு யுத்தியை கண்டுபிடித்தான்.


பைபிளில் நோவா என்பவன் ஒரு கப்பலை கட்டி உயிர்களை காப்பாற்றிய கதை நீ அறிந்திருப்பாய். அந்த கதையில் ஒரு கிளைக்கதையை உருவாக்கினான் ஐரோப்பியன் மழை வெள்ளத்தில் கப்பல் மிதந்து கொண்டு இருந்த போது ஒருநாள் நோவா குளித்து விட்டு வந்தானாம் அப்போது அவன் நிர்வாணமாக இருந்தானாம் அதை அவனது மூத்த மகன் கண்டுவிட்டானாம் உடனே ஆத்திரம் அடைந்த நோவா நீ அடிமையாக போவாய் உனது வாரிசுகளும் அடிமைகளாக இருப்பார்கள் அப்படி அவர்கள் அடிமைகளாகவே இருந்தால் தான் பரலோக ராஜ்ஜியம் அவர்களுக்கு கிடைக்கும் என்று சாபம் கொடுத்தானாம் 


அந்த சாபம் பெற்ற நோவாவின் மூத்த மகனின் வாரிசுகள் தான் ஆப்பிரிக்க கருப்பார்களாம். அவர்கள் உலகம் உள்ளளவும் அடிமைகளாக வாழ வேண்டுமாம் அப்படி வாழ அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கர்த்தரால் நிரந்தரமான நரகத்தில் தள்ளப்படுவார்களாம். என்ற கதையை ஆப்ரிக்க மக்களின் அடிமை தனத்தை நியாயபடுத்த உருவாக்கினார்கள். அந்த கதைக்கும் சற்று குறைவு இல்லாத ஒரு புதிய வரலாற்று கதையை நமது இந்தியாவில் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் உருவாக்கி இன்றுவரையிலும் கூட அதை பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 


பிரகதீஸ்வரன்:- ஜெர்மனிய சர்வதிகாரி ஹிட்லர் அந்த நாட்டு மக்கள் செயற்கையான உயர்வு மனப்பான்மைக்கு தள்ளப்பட வேண்டுமென்று போலியான ஆரிய மேன்மை என்ற கருத்தை உருவாக்கியதை நான் அறிவேன். அதைவிட கொடுமையானதாக இருக்கிறது ஐரோப்பியர்கள் உருவாக்கிய புதிய பைபிள் கதை மதத்தின் பெயரால் மக்களினுடைய அறியாமையை வளர்த்து ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தி கொள்ளலாம் என்று அதிகார வர்க்கத்தின் போடுகின்ற கணக்கு மனசாட்சியே இல்லாத கொடூரமான கணக்கு என்பது புரிகிறது. இதனால் தான் காரல்மார்க்ஸ் மதத்தை போதை தருகிற அபின் என்று சொன்னாரோ? 


குருஜி:- கண்டிப்பாக இருக்கலாம் இந்தியாவை ஆட்சி செய்ய நினைத்த ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் நமது நாட்டின் பழமை சிறப்பை சீர்குலைக்க நினைத்தார்கள் இதனால் இந்தியர் பெற்ற அறிவு திறமைகள் அனைத்தும் அவர்கள் சொந்தமானது அல்ல வெள்ளைக்காரர்கள் கொடுத்தது என்று காட்ட முனைந்தார்கள். அதற்கு கிறிஸ்தவ மதத்தை சரியான உபாயமாக கையாண்டார்கள். உதாரணமாக ஒன்றை கூறுகிறேன் கவனமாக கேள். 


திருவள்ளுவர் எப்போது வாழ்ந்தார் என்று நமக்கு தெரியும் வள்ளுவத்தை ஆராய்ந்த அறிஞர்களும் வேறு பல சரித்திர ஆய்வாளர்களும் வள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும். என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் வள்ளுவரின் காலம் அதற்கும் முந்தியதாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் எல்லோரும் ஒட்டுமொத்தமாக வள்ளுவரை விட கிறிஸ்தவர் ஒரு நூற்றாண்டு காலமாவது இளையவர் தான் என்ற முடிவிற்கு வந்துவிட்டார்கள். 


ஆனால் இதை கிறிஸ்தவர்கள் ஏற்கவில்லை அதற்கு அவர்கள் வேறொரு கதையை உருவாக்கி இது தான் சரித்திரம் என்று நம்மிடம் பேச துவங்கி இருக்கிறார்கள். அதாவது யேசுவினுடைய சீடர்களில் ஒருவரான புனித தோமா என்பவர் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும் இங்கே வந்தவுடன் வள்ளுவரோடு அவருக்கு நட்பு ஏற்பட்டதாகவும் வள்ளுவரிடத்தில் இயேசுவின் உபதேசங்களை தோமர் சொன்னதாகவும் அதை கேட்டதனால் மனத்தெளிவு அடைந்து வள்ளுவர் தமது திருக்குறளை எழுதியதாகவும் அதனால் குறள் முழுமைக்கும் கிறிஸ்தவத்திற்கே சொந்தமானது என்றும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் இந்த கருத்தை தமிழ்நாட்டுல் உள்ள சில தலைவர்களை ஆதரிக்கிறார்கள்.


பிரகதீஸ்வரன்:- நீங்கள் கூறுவதை பார்த்தால் பழைய திரைப்படம் ஒன்றில் பிஎஸ்.வீரப்பா ஒருவசனம் பேசுவார் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்பதே அந்த வசனமாகும். அதை இப்போது சொல்ல தோன்றுகிறது. 


குருஜி:- நீ சாபம் கொடுப்பது பிறகு இருக்கட்டும் இப்போது வேறொரு கதையை கூறுகிறேன் கவனமாக கேள் அதன் பிறகு இந்த சாபம் போதுமா அல்லது இதைவிட அதிகமாக தேவைப்படுகிறதா? என்று பாப்போம். நமது இறைவன் முருகன் என்று தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் தெரியும். முருகனை தெரியாதவன் தமிழனாக இருக்கமுடியாது. அப்படிப்பட்ட முருகன் யார்? என்று உன்னிடம் கேட்டால் நீ அவர் பார்வதிக்கும் பரமசிவனுக்கும் பிறந்தவர் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர். அன்னை பராசக்தியிடம் ஞானவேல் வாங்கியவர் சூரபத்மனை கூறுபட கிழித்தவர் ஆறுபாடை வீடுகளில் அமர்ந்து அருள் செய்பவர் என்று தானே கூறுவாய் ஆனால் இவை அத்தனையும் இல்லை முருகன் என்றாலே அது இயேசு கிறிஸ்து தான் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள். 


இதை கேட்டவுடன் உடம்பில் எங்கோ ஒருபகுதியில் நெருப்பு பிடித்தது போல சுடுகிறதா? கேள் இன்னும் சூடு அதிகரிக்கும் முருகன் இறைவனின் குமாரன் என்பதாலும் ஏசுவும் தேவனின் குமாரர் என்பதனாலும் இருவரும் ஒன்று தான் ஏசு மலையிலிருந்து தான் உபதேசம் செய்தார் முருகனும் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று கூறப்படுகிறது மலையோடும் இருவருக்கும் தொடர்பு இருப்பதனால் முருகனும் ஏசுவும் ஒன்றே இதுமட்டுமல்ல கல்வாரி மலையில் இயேசு சிலுவையில் சுமந்து நடந்து சென்றார் அதன் அடையாளமாகவே காவடிகளை சுமந்து மலைமீது நடந்து சென்று வாழிபாடுகள் செய்கிறார்கள். எனவே இயேசு வழிபாடாக ஆதியில் இருந்ததை தான் பிராமணர்கள் சதி செய்து முருகவழிபாடாக மாற்றிவிட்டார்கள் என்றும் பெரிய வரலாற்று ஆய்வுகள் இந்த நாட்டில் வெட்கமே இல்லாமல் நடக்கிறது. 


இத்தோடு அநியாயம் நின்றுவிட்டது என்று நினைக்காதே தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்விய பிரபந்தம் எல்லாமே கிறிஸ்தவத்தை விளக்குகின்ற நூல்கள் தானாம் அழகான ஆண்டாள் திருமொழி கூட இயேசுவை நோக்கி பாடப்பட்ட பக்தி பாடல்கள் தானாம். இப்போது சொல் கிறிஸ்தவம் நமக்கு செய்திருக்கின்ற உதவிகள் சாதாரணமானதா? 


பிரகதீஸ்வரன்:- என் பெண்டாட்டி எனக்கு மட்டும் பெண்டாட்டி அல்ல ஊருக்கெல்லாம் பெண்டாட்டி என்று கூறுவது போல் மிக அசிங்கமான கீழ்த்தரமான வார்த்தைகளால் அவர்களை விமர்சிக்க தோன்றுகிறது. ஆனால் நமது வள்ளுவர் நல்ல சொற்களை விட்டுவிட்டு அல்லாத சொற்களை பயன்படுத்துவது முறையற்றது என்று கூறுவதானால் போனால் போகட்டும் என்று நாம் மன்னித்து விடலாம். ஆனால் இறைவனும் தர்மமும் ஒருநாளும் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். 


குருஜி:- இஸ்லாமிய மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து இங்கிருக்கிற கோவில்களை கொள்ளையடித்தார்கள் வழிபாட்டு ஸ்தலங்களை நாசப்படுத்தினார்கள் வன்முறையின் மூலமாக அப்பாவி மக்களை மதம் மாற்றினார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் இந்தியாவில் அறிவு செல்வத்தில் கைவைத்து இல்லை. காரணம் அதைப்பற்றிய ஞானம் அவர்களுக்கு கிடையாது ஆனால் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் ஹிட்லர் இடத்தில கோயபல்ஸ் என்ற மந்திரி இருந்தான் அல்லவா அவனைவிட தந்திர சாலிகள் நமது சகுனிக்கே பாடம் எடுப்பவர்கள். இந்தியாவை எதை தொட்டால் முழுமையாக அடிமைப்படுத்தலாம் என்று திட்டம் தீட்டினார்கள் அதற்கான சில நரித்தந்திரிகளை உருவாக்கினார்கள் அவர்களால் ஏற்பட்ட அபாயம் இஸ்லாமிய கத்திகளால் ஏற்பட்ட காயத்தை விட மிக அதிகம். நமது பாரத நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதினார்கள். நமது நாட்டில் மாண்புகளை குழிதோண்டி புதைத்து அந்நிய படையெடுப்பாளர்களில் வீரத்தை நம்மை விட்டே புகழவைத்தார்கள். 


ஐரோப்பிய தந்திர சாலிகளின் மிக முக்கியமான கால்டுவெல் போப் என்பவர். இவர்தான் நான் மேலே சொன்ன அத்தனை விஷயங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர். தன்னை தமிழ்மாணவன் என்று கூறிக்கொண்டு பச்சை துரோகம் செய்தவன். அவருடைய சித்து விளையாட்டுகளில் பல இன்றும் உயிரோடு இருந்து நம்மை வாட்டி வதைக்கிறது. அவற்றில் முக்கியமானது ஆரியம் திராவிடன் என்ற பேதங்கள் 


கால்டுவெல் போப் எத்தனை கேடுகட்ட புத்திகொண்டவர் என்பதை விளக்க ஒரு சம்பவத்தை கூறுகிறேன் கேள். நமது தமிழ்நாட்டில் ஆதிநாட்களில் மதம் மாறுவது என்பது மிக கேவலமான காரியமாக கருதப்பட்டது. மதம் மாறியவனின் பிணத்தை தூக்க கூட யாரும் வரமாட்டார்கள். அப்படிப்பட்ட காலத்தில் கால்டுவெல் மதம் மாற்றவேண்டும் என்றே ஒரே நோக்கத்திற்காக தமிழ்நாட்டிக்குள் வருகிறார். தமிழர்களை போல் வேட்டி அணிகிறார் பூணுல் போட்டு கொள்கிறார் இத்தோடு மட்டுமல்ல தெற்குப்பகுதியில் செல்வாக்கோடு இருக்கும் வியாபார சமூகமான நாடார்களை மதம் மாறச்சொல்லி வற்புறுத்துகிறார் அவர்கள் மறுக்கிறார்கள் இதனால் கால்டுவெல் நாடார்கள் வரலாறு என்ற ஒரு புத்தகம் எழுதுகிறார் அந்த புத்தகத்தில் நாடார்கள் தமிழர்களே அல்ல தமிழ்நாட்டின் சொந்தமக்களும் அல்ல அவர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவில் குடியேறிய வந்தேறிகள் இவர்கள் உண்மையான தமிழர்களின் பொருளாதாரத்தை சுரண்டி பிழைக்கிறார்கள் இது சரித்திர உண்மை என்று பல போலியான சான்றுகளை உருவாக்கி மிக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். 


பிரச்சாரத்தோடு மட்டும் நிற்கவில்லை நாடார்களுக்கு எதிராக பிள்ளைமார்களையும் நாயக்கர்களையும் மறவர்களையும் ஏவி விடுகிறார். மேலும் அரசாங்கத்தின் துணைகொண்டு நாடார்களின் வியாபாரத்திற்கு பல இடையூறுகளை உருவாக்குகிறார். இதனால் மனமுடைந்த பல நாடார்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறுகிறார்கள். மேலும் பல ஏழை நாடார்களுக்கு அரசு உத்தியோகம் கல்வி போன்றவைகள் லஞ்சமாக வழங்கப்படுகிறது. இது தான் தமிழ்நாட்டின் தெற்குபகுதியில் கிறிஸ்தவம் வளர்ந்த கதை. 


இன்னும் வேடிக்கையான அதே நேரம் வேதனையான கதையும் உண்டு நாடார்களின் வரலாறை கூறுகிற போது அந்த காலத்தில் நாடார் இனப்பெண்களுக்கு மாராப்பு சேலை போடுவதற்கு அனுமதி இல்லை திருவாங்கூர் அரசாங்கம் நாடார்களை அந்த நிலையிலேயே வைத்திருந்தது என்று நாம் படிக்கிறறோம். 


கன்னியாகுமாரி நாடார்கள் இந்த நிலையில் இருந்தது உண்மைதான் ஆனால் நாடார் ஜாதிக்கு மட்டும் இந்த கொடுமை அங்கே நடத்தபடவில்லை நாயர்கள் ஈழவர்கள் பணிக்கர்கள் உட்பட பதினெட்டு ஜாதியினருக்கும் இந்த கொடுமையான சட்டம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடைமுறையில் இருந்தது. நாராயண குரு , ஐயா வைகுண்டர் போன்றோர்கள் இந்த கொடுமையை எதிர்த்து ஆன்மீக வழியில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்கள் என்பதையும் நாம் அறிவோம். 


திருவாங்கூரில் மட்டும் இந்த கொடுமை இருந்ததற்கு யார் காரணம்? உயர்ந்த ஜாதி நம்பூதிரிகளா? ஆதிகாலம் தொட்டே இந்த பழக்கம் நடைமுறையில் இருந்ததா? என்று ஆராய்ந்தால் ஒரு உண்மை தெளிவாக தெரிகிறது. திருவாங்கூரின் மீது படையெடுத்த டச்சுக்காரர்களை விரட்டி அடிக்க கிழக்கிந்திய கும்பெனியர் உதவியதால் அவர்களுக்கு கிறிஸ்தவமத பிரச்சாரம் செய்ய சமஸ்தான அரசு ஒப்புதல் கொடுத்தது. அப்போது பிரச்சாரத்திற்கு மேற்குறிப்பிட்ட பணிக்கர் நாடார்கள் உட்பட பதினெட்டு ஜாதிக்காரர்கள் இடைஞ்சல் செய்ததனால் அவர்களை வழிக்கு கொண்டுவர மாராப்பு பற்றிய வன்கொடுமை சட்டத்தை அமுல்படுத்த சொல்லி கிறிஸ்தவர்கள் வற்புறுத்தினார்கள். அதே நேரம் கிறிஸ்தவத்திற்கு மாறிய நாடார்களுக்கு விடுதலை கொடுத்தார்கள். இப்படித்தான் நாஞ்சில் நாட்டில் கிறிஸ்தவம் வளர்ந்தது. நாஞ்சில் நாட்டு மீனவர்கள் கிறிஸ்தவத்திற்கு வந்தது ஒருதனி பரிதாப கதை அதை சொல்ல போனால் நேரம் போதாது. 


பிரகதீஸ்வரன்:- யேசுநாதர் பிறக்கவே இல்லை அவர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று சிலர் கூறுவதாக கூறினீர்களே அதை இன்னும் நீங்கள் கூறவில்லை எப்போது கூறுவீர்கள்? 



தொடரும்.... 


Contact Form

Name

Email *

Message *