Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுளாக போன மனிதன்

 


கதை

காகோஜியை உங்களுக்கு தெரியுமா?
பத்து பதினைந்து பேருந்துகள் மிக முக்கியமான மூன்று நகரங்களில் மிக பிரமாண்டமான நகை கடைகள் ஜவுளி கடல்கள் நிலவணிகம் பல நூறு வேலி நிலத்தில் வருடம் முழுவதும் வாரிக் கொடுக்கும் விவசாய பண்ணனகள் என்று விரிந்து கொண்டே செல்லும் வியாபார சாம்ராஜ்யத்தின் சட்டப்படியான தலைவர் கா கோஜி.


ஆனால் இந்த விபரமெல்லாம் காகோஜிக்கு தெரியாது முழங்கால் வரை நேர்த்தியாக மடித்து கட்டப்பட்ட தோத்தி கண்ணை பறிக்கும் வெண்மையான ஜிப்பாய் தலையிலே காந்தி குல்லா கைகளில் என்றோ அறுந்து பழசாகி போன ஜெபமாலை இன்றோ நாளையோ குப்பைக்கு போக தயாராக இருக்கும் பழைய தோல் செருப்பு என்று இப்படி தான் அவர் எப்போதுமே காட்சி தருவார்.


காகோஜிக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு அவர்களுக்கு தான் திருமணமாகி குழந்தை குட்டிகள் இருந்தன காகோஜிக்கு கல்யாணமே ஆகவில்லை அவருக்கு பிறவியிலேயே மூளை வளர்ச்சி சிறிது பாதிப்பு அடைந்து விட்டதனால் எல்லோரும் அவரை குழந்தையாக பார்தார்களே தவிர குமரபருவம் எய்திய இளைஞராக பார்க்க வில்லை. யாருக்கும் அப்படி தோன்றாமல் இருந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை எந்த பைத்தியம் தான் தன்னை பைத்தியம் என்று ஒத்து இருக்கிறது? எனவே குழந்தைத்தனமாக இருந்த காகோ ஜியை பைத்தியம் என்ற து 


தன் சகோதரர்களின் பேரக்குழந்தைகளோடு சரிசமமாக அடித்து பிடித்த விளையாடுவார் விளையாட்டில் தோற்று போனால் குழந்தை மாதிரியே கால்களை உதைத்து கொண்டு அழுவார். தான் விரும்பியதை வாங்கி தரவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவார். யாரோடும் பேசாமல் முகத்தை தூக்கி வைத்து கொண்டு வீட்டு மூலையில் உட்கார்ந்து விடுவார்.


காகோஜி சராசரி மனிதராக இல்லாவிட்டாலும் கூட ஊர் மக்கள் அனைவருமே அவரை சராசரிக்கும் மேலாகவே பார்த்தார்கள். நான் பெரிய கோடீஸ்வரன் என்பது கூட தெரியாமல் டீ கடையில் டம்ளர் கழுவுகின்ற பையனிடம் கூட எனக்கு பத்து காசு தருவியா என்று கேட்டுக்கொண்டு நிற்பார் பத்து காசுக்கு பதிலாக பத்தாயிரம் ரூபாய் எடுத்து கொடுத்தால் கூட எனக்கு அது வேண்டாம் பத்து காசு கொடு என்று அடம்பிடிப்பார். அவரிடம் பத்துக் காசுக்கு அவ்வளவு மரியாதை


பத்து காசுக்காக அடம்பிடிக்கும் காகோஜியை பார்த்து யாரும் முகம்சுழிக்க மாட்டார்கள் அவர் தன்னிடம் வந்து காசு கேட்க மாட்டாரா என்று தவம் கிடப்பவர் தான் அதிகம்பேர் அவர் கடைவீதியில் நடமாடுவது அபூர்வமான நேரமாக தான் இருக்கும். அப்படி கடைவீதிக்கு வந்துவிட்டால் யார் கடையில் உள்ளேயாவது நுழைந்து கல்லாப்பெட்டி அருகில் போய் உட்கார்ந்து விடுவார் அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது தான் எழுந்து போவார் அதுவரை கடைக்காரர் கையை கட்டிக்கொண்டு பக்கத்தில் நிற்க வேண்டியது தான்.


ஆனால் காகோஜி எந்த கடைக்குள் புகுந்து அமர்ந்து கொள்கிறாரோ அந்த கடைக்காரர் சில வருடங்களிலேயே செல்வ செழிப்பில் உச்சத்திற்கே போய்விடுவார். 


காகோஜியிடம் இன்னோரு விளங்காத புதிரான சக்தியும் உண்டு ஊரில் ஏதாவது வயசான கேசுகள் உயிரை விட முடியாமல் தத்தளித்து கொண்டு படுக்கையில் கிடந்தால் அங்கே காகோஜி போவார் யாருக்குமே புரியாத ஏன் சொற்களாக கூட இல்லாத ஏதோ வார்த்தைகளை சொல்வார். இழுத்து பறிக்கும் உயிர் ஓரிரு நாளில் நிம்மதியாக கண்ணை மூடிவிடும்.


காகோஜிக்கு என்பது வயதை கடந்து விட்டாலும் கூட பத்து வயது குழந்தைகளோடு தான் சகவாசம் ஜாஸ்தியா இருக்கும் திடிரென்று தன் வீட்டில் உள்ள பணத்த திருடி கொண்டு எங்கோ காணாமல் போய்விடுவார். ஐயோ அவருக்கு சாப்பிடு கூட சரிவர வாங்கி உண்ண தெரியாதே என்று குடும்பத்தார்கள் பதைப்பதைப்போடு தேடினால் எங்கையாவது கூரை இல்லாத பள்ளிக்கூட குழந்தைகளுக்கு ஜவ்வு மிட்டாய் வாங்கி கொடுத்து தானும் தன் கைகளில் மிட்டாயை சுற்றி கொண்டு தன்னை மறந்து அதை நக்கி நக்கி ரசித்து உண்பதை பார்க்க கண் கோடி வேண்டும் தேடிச் சென்றவருக்கு அழுகையும் சிரிப்பும் ஒன்றாக வரும் இதில் ஒரு ஆட்சரியம் அவர் இதுவரை வீட்டில் ஐந்து ரூபாய்க்கு மேல் திருடியது இல்லை.


காகோஜிக்கு மாம்பழம் என்றால் கொள்ளைப்பிரியம் மாம்பழகடையை பார்த்து விட்டால் கூடை நிறைய பழத்தை பத்து பைசாவுக்கு கொடு என்று காலை உதைத்து அழுவார். பலரும் அவர் கேட்டதை கொடுத்து விட்டு அவர் தம்பி பிள்ளைகளிடம் சென்று பணம் வாங்கி கொள்வார்கள்.


காகோஜி எப்போது சிரிப்பார் எப்போது அழுவார் என்று யாருக்கும் தெரியாது குழந்தை இறந்த வீட்டில் நின்றுகொண்டு கைத்தட்டி சிரிப்பார். கல்யாண வீட்டில் மாரடித்தி அழுவார். அந்த நேரங்களில் தான் அவரை பற்றிய சங்கடம் மற்றவர்களுக்கு தெரியும்.


இப்படிப்பட்ட காகோஜி ஒருநாள் அதிகாலையில் படுக்கையில் இருந்து ஏழாமலேயே இறந்து போய்விட்டார் செய்தி காட்டு தீ போல நாலாபுறமும் பரவியது. ஏராளமான ஜனக்கூட்டம் அவர் உடல் மைதானத்திற்கு எடுத்து செல்ல துவங்கவும் கூச்சலும் குழப்பமும் அழுகை ஒலம் சற்று அதிகரித்தது அதில் ஐயோ கடவுளாக நடமாடிய கடைசி மனிதனும் போய்விட்டானே என்று சத்தமாக புலம்பினார்கள் அந்த புலம்பல் சத்தம் அங்கிருந்த அனைவரையுமே மெளனத்தோடு சம்மதிக்க சொன்னது .


காகோஜி பெட்டி நிறைய பணத்தை வைத்திருந்தாலும் பத்து பைசாவைத் தானே மதித்தார் கடவுளும் அப்படித்தானே வைரம் வைடூர்யம் என்று கொட்டி கொடுத்தாலும் கையளவு மனசைத்தான் கேட்கிறான்

குருஜி

Contact Form

Name

Email *

Message *