Store
  Store
  Store
  Store
  Store
  Store

இயேசு ஒரு இந்து  

 


குருஜியின் பைபிள் பயணம் - 11


( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )


பிரகதீஸ்வரன்:- இயேசு பிறந்ததில் சந்தேகம் அவர் இறப்பில் சந்தேகம் உயிர்தெழுதலில் சந்தேகம் அவர் அற்புதங்களில் சந்தேகம் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய உபதேசங்களிலேயே சந்தேகம் என்று இப்படி ஆயிரம் குளறுபடிகள் இருந்தும் கிறிஸ்துவ மதத்தை நோக்கியே பல இந்துக்கள் மதம் மாறி இன்று செல்வதற்கு என்ன காரணம்? ஒன்றுமே இல்லாததை நோக்கி யாராவது இப்படி ஆர்வத்தோடு செல்வார்களா? 


குருஜி:- நமது இந்தியாவை பொறுத்தவரையில் மதம் மாறுவது என்பது அறியாமையாலும் ஆசையாலும் திருமண காரணங்களுக்காகவும் தற்காலத்தில் நடைபெறுகிறது. மலைவாழ் மக்கள் பழங்குடியினர் சமூதாயத்தில் கீழ்தட்டில் இருப்பவர்கள் இவர்களுடைய அன்றாட வாழ்வியல் சிக்கல்களுக்கு சிலை வழிபாடுகள் தான் மூல காரணம் என்றும் அவைகளை விட்டுவிட்டு இயேசுவை ஏற்றுகொண்டால் வறுமை ஒழியும் வாழ்க்கையில் சுபிச்சம் ஏற்படும் என்று பல ஆசை வார்த்தைகள் காட்டபடுகிறது. பேய் பிசாசு தொல்லை நோய் நொடி பிரச்சனை இவைகளை எல்லாம் தீர்க்க இயேசு வால் மட்டுமே முடியும் என்ற மாயஜால வார்த்தைகள் காட்டபடுகிறது. இவற்றை எல்லாம் விட மிக கொடியது திருமண ஆசை ஞானஸ்தானம் எடுத்து கொண்டால் வசதியான பெண்ணோ பையனோ அமையும் நல்ல வரதட்சனை கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாங்கி தரப்படும் என்றெல்லாம் வலைவிரித்து மதம் மாற்றம் நடைபெற்று வருகிறது. 


இந்த கீழ்த்தரமான செயலுக்கு கிறிஸ்தவர்கள் வைத்திருக்கும் அழகன பெயர் ஆத்மாக்களை அறுவடை செய்தல் என்பதாகும். இப்படி இந்தியா முழுவதும் உள்ள ஆத்மாக்களை அறுவடை செய்து ஒட்டுமொத்த இந்தியாவையே இயேசு வுக்கு கொடுத்துவிட வேண்டும் அதாவது நாடு முழுமையும் கிறிஸ்துவமயமாக்க படவேண்டும் என்பது தான் அவர்களது உண்மையான வேலை திட்டம். இதை அவர்கள் தங்குதடை இல்லமல் செய்து வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 


கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்வதில் வேறோருவித நன்மையையும் இருக்கிறது. மாதம் முழுவதும் உடலை வருத்தி வேலை செய்தாலும் கிடைக்காத வருமானம் கிறிஸ்தவ ஊழியம் செய்வதனால் கிடைக்கிறது. எப்படி என்றால் ஒரு வீட்டிற்கு சென்று அவர்கள் பிரச்னைக்காக ஜெபம் செய்தால் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை காணிக்கையாக கிடைக்கிறது. ஒருநாளைக்கு ஐந்து வீடு என்றாலும் மாதத்தில் இருபது நாட்கள் ஊழியம் செய்தால் ஏறக்குறைய ஐம்பதாயிரம் ரூபாய் வருமானம் வந்துவிடுகிறது. இப்படி வருமானம் வருகிற தொழிலாகவும் கிறிஸ்தவ ஊழியம் இருப்பதனால் மதமாற்ற வேலை என்பது மிக வேகமாகவே நடைபெறுகிறது. 


பிரகதீஸ்வரன்:- இந்துக்கள் பலவீனமான முறையில் மதம் மாறுவதனால் தானே அவர்கள் மதம் மாற்றுகிறார்கள் இதற்கு கிறிஸ்தவர்களை மட்டும் குறை கூறினால் என்ன நியாயம்? 


குருஜி:- நீ சொல்லுவது நியாயம் தான் ஊசி இடம் கொடுத்தால் தானே நூல் நுழையும் நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை மதம் மாறாமல் இருக்கின்ற ஜாதிகள் நாட்டுகோட்டை செட்டியார்களும் முத்தறையர்களும் தான். மற்ற எல்லா ஜாதியினரும் மதம் மாறி இருக்கிறார்கள். பிராமணர்கள் உட்பட மிக குறிப்பாக சொல்லுவது என்றால் தமிழ்நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள நாடார் இன மக்கள் மிக அதிகமாக மதம் மாறி இருக்கிறார்கள். நன்றாக கவனித்து பாருங்கள் கிறிஸ்தவ மதமாற்ற வியாபாரத்தில் கோடி கோடியாக சம்பாதித்து மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களாக இருப்பவர்கள் நாடர்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். பால் தினகரன் முதற்கொண்டு மோகன் சி லாசரஸ் வரையிலும் அனைவருமே நாடர்கள். இன்னொரு விஷயம் இந்த பிரசங்க துறையில் நாடார்களே தவிர வேறு யாரையும் வளர்ந்து விடாமல் இவர்கள் பார்த்து கொள்ளுவார்கள் ஏனென்றால் தொழில் பற்று அப்படி. 


நாடர்கள் மட்டும் மதம் மாறுவதிலும் மாற்றுவதிலும் முன்னணியில் இருப்பதற்கு காரணம் என்னவென்று சிந்திக்க வேண்டும். ஒரு வன்னிய படையாட்சி மதம் மாறுகிறான் என்றால் அவன் குடும்பத்தோடு கொள்வினை கொடுப்பினை மற்ற எந்த படையாட்சியும் வைத்து கொள்ள மாட்டான். நாயக்கர்களும் அப்படி தான் ரெட்டியார்களும் அப்படி தான். இதனால் அவர்கள் மதம் மாறுவதற்கு தயங்குகிறார்கள் அப்படியே மாறினாலும் அதை மறைத்து வைத்து கொள்கிறார்கள். ஆனால் நாடர்கள் அப்படி அல்ல திருமண பந்தத்திற்கு மதத்தை ஒரு பொருட்டாக கருதுவது இல்லை. மாமன் இந்துவாக இருப்பான் மச்சினன் கிறிஸ்தவனாக இருப்பான் அவர்கள் உறவில் எந்த சிக்கலும் ஏற்படுவது கிடையாது. இதனால் அவர்கள் மதம் மாறுவதை கேவலமாக நினைப்பது கிடையாது. 


இந்த நிலையை மாற்றுவதற்கு ஜாதி சங்கங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும். ஒருவன் இந்து மதத்தில் இருந்து வேற்று மதத்திற்கு போகிறான் என்றால் அவனை ஜாதியை விட்டு விலக்கி வைக்க வேண்டும் அவனிடத்தில் கொள்வினை கொடுப்பினை வைத்து கொள்ள கூடாது. இப்படி நான் கூறுவது சற்று கடினமாக தெரியும் ஆனால் நமது இந்து தர்மத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் இப்படி சில கடினமான நடவடிக்கையை எடுத்து தான் ஆகவேண்டும். 


பிரகதீஸ்வரன்:- இந்து மதத்தில் ஜாதி கொடுமையும் தீண்டாமையும் இருப்பதனால் தானே நிறையப்பேர் மதம் மாறுகிறார்கள்? 


குருஜி:- இப்படி வேடிக்கையாக பேசுவதெல்லாம் மலையேறி போயாச்சி தம்பி கள்ளகுறிச்சி மாவட்டம் எறையூர் கிராமத்தில் வன்னிய கிறிஸ்தவர்களும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் சுடுகாட்டில் பிணத்தை புதைப்பது சம்மந்தமாக நடந்த சண்டையில் மத்தியஸ்தம் செய்துவைத்தவர்களில் நானும் ஒருவன் இது எனது நேரடி அனுபவம் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கின்ற சாதிபாகுபாடு கொஞ்ச நெஞ்சமல்ல உலகளவில் உள்ள கிறிஸ்தவத்தில் கூட இன ஒதுக்கல் கொள்கையும் பெண்ணடிமை தனமும் கொடிகட்டி பறக்கிறது. இதுவரை ஒரு பெண்ணோ அல்லது நீக்ரோ இனத்தை சேர்ந்தவரோ போப் பதவிக்கு வந்தது உண்டா? ஏன் அவர்கள் அந்த பதவியை ஏற்றால் இயேசு சிலுவையிலிருந்து இறங்கி ஓடி விடுவாரா? ஊருக்கு உபதேசம் பேசுவது தான் கிறிஸ்தவர்களின் வேலை. அவர்கள் முதுகில் அடையடையாக அழுக்கு தேங்கி நிற்கிறது. அதை கழுவ மாட்டார்கள். மற்றவர்களை குறை கூறுவார்கள். 


பிரகதீஸ்வரன்:- சரி எல்லாம் இருக்கட்டும் உங்கள் கருத்துப்படி இயேசு என்பவர் நிஜமாகவே உலகத்தில் இருந்தாரா? அல்லது அவர் வெறும் கற்பனையா? தயங்காமல் ஒளிவு மறைவு இல்லமல் நேரடியாக விஷயத்தை சொல்லுங்கள். 


குருஜி:- நாம் ஒரு வரலாற்று ஆர்வலர் என்ற முறையில் விருப்பு வெறுப்பற்று இயேசு வின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் அதில் ஒரு சதவிகிதம் மட்டுமே உண்மை இருக்கிறது. மற்றபடி அனைத்தும் ஆதாரமற்ற கற்பனையாகவே தெரிகிறது. ஆனால் இயேசு வை வெறும் வரலாற்று கதாபாத்திரமாக மட்டும் பார்க்க கூடாது. அவர் ஒரு ஆன்மீக புருஷர். எனவே அவரது சரித்திரத்தை ஆன்மீக கண்கொண்டும் பார்க்க வேண்டும். 


வட இந்தியாவில் நவநாத சித்தர்கள் என்று ஒன்பது விதமான ஆன்மீக சாதகர்களை பற்றி பேசுவார்கள். நமது தென்னாட்டிலும் பதினெட்டு சித்தர்கள் என்று கூறுவோம் இந்த சித்தர்களில் வாழ்க்கை முறை எப்படியோ அப்படி தான் இயேசு என்ற மனிதரின் வாழ்க்கை முறையும். அதாவது என்னுடைய நோக்கத்தில் இயேசு என்பவர் ஒரு சித்தரே தவிர கடவுள் அல்ல. அவரை அப்படி நினைப்பது தவறு அவர் கூட தன்னை எந்த இடத்திலும் கடவுள் என்று கூறியது கிடையாது. 


யூத நாட்டில் இயேசு பிறந்த காலத்தில் அது அடிமைப்பட்டு கிடந்தது. கிரேக்க ஆதிக்கம் யூத மக்களை அனாதைகளாக உலகில் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் துரத்தி கொண்டிருந்தது. அதை பார்த்த இயேசு தன் மக்களுக்கு நிலையான ஒரு நாடு வேண்டும் தன் மக்கள் சுகந்திரம் உடையவர்களாக வாழ வேண்டும் என்று விரும்பினர். ஆனால் அந்த யூதர்கள் மத குருமார்கள் என்கிற புரோகிதர்கள் காட்டிய மூட நம்பிக்கையில் கிடந்தது உழண்டார்கள்.


இயேசு அவர்களை விழிப்படைய செய்ய விரும்பினார். இதற்காக கிழக்கு நாட்டிற்கு அதாவது இந்தியாவிற்கு வந்து சித்துக்களையும் தத்துவங்களையும் கற்று யூத மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தார். இதை பொறுக்காத அரசும் மத குருமார்களும் அவரை கொலை செய்ய முனைந்தார்கள். சிலுவையிலும் அறைந்தார்கள். ஆனால் நமது சித்தர்களின் கணக்குப்படி இயேசு சிலுவையில் இருந்து உயிரோடு காப்பாற்றபட்டு அவர் முன்பு வாழ்ந்த காஷ்மீரில் லடாக் பிரதேசத்தில் வெகுநாட்கள் வாழ்ந்து முக்தியும் அடைந்தார். அவருடைய சமாதி இன்றும் லடாக்கில் உள்ள புத்த மடாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது தான் உண்மை ஆனால் இதை கிறிஸ்தவர்கள் எவரும் ஏற்றுகொள்ள மாட்டார்கள். ஏற்றுகொண்டால் அவர்கள் வயிறு வளர்க்க இயலாது. 


பிரகதீஸ்வரன்:- இயேசு ஒரு சித்தர் என்றால் அவர் அடிக்கடி வானத்தில் இருக்கின்ற பிதா என்று சொல்லுகிறாரே யார் அந்த பிதா? புத்தரா? கிருஷ்ணரா? 


குருஜி:- இயேசு பிதா என்று அழைப்பது புத்தரையோ கிருஷ்ணரையோ அல்ல அவருடைய பிதா ஆதி சிவன் ஆவர் இப்படி நான் கூறுவது சற்று வியப்பாக இருக்கும் ஆனால் அது தான் உண்மை. இயேசு காஷ்மீரில் வாழ்ந்த காலத்தில் காஷ்மீர சைவம் என்ற வீர சைவத்தையும் பதஞ்சலி யோக சூத்திரத்தையும் கற்று தேர்ந்தார் என்று நான் முன்பே சொன்னேன் அல்லவா அதன் அடிப்படையில் அவர் மிக சிறந்த சிவ பக்தராகவே இருந்தார். ஒருவகையில் இயேசு இந்தியாவிற்கு வந்ததே சிவனை தேடி தான். 


ஆதிகாலத்தில் இறைவழிபாடு என்றாலே அது சிவலிங்க வழிபடு தான் தென்னமெரிக்காவிலும் அமெரிக்காவிலும் எராளமான சிவலிங்கங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைந்தவண்ணம் இருக்கிறது ரஷ்யாவிலும் லண்டளிலும் கூட லிங்க வழிபாடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததற்கான ஆதாரம் இருக்கிறது. மெக்காவில் காபா என்ற அழைக்கபடுகிற சதுர கட்டிடம் கூட ஒருவகை லிங்கம் தான் இதனால் யூத நாட்டிலும் சிவ வழிபாடு இருந்திருக்க வேண்டும். அந்த வழிபாட்டின் மூலத்தை தேடி தான் இயேசு இந்தியா வந்திருக்க வேண்டும் 


மேலும் இயேசு பதஞ்சலி யோகத்தை கற்றவர் அந்த யோகத்தில் முடிவு நிலையில் ஆத்மாவிற்குள் இருக்கின்ற லிங்கத்தை தரிசனம் செய்வதே பேரின்ப நிலையாகும். அந்த ஆத்ம லிங்கமே தந்தை என்றும் பிதா என்றும் அழைக்கபடுகிறது. இயேசு பிதா என்று கருதுவது சாட்சாத் சிவபெருமனேயே ஆகும். இதை பற்றி விளக்கம் கூறுவது என்றால் இன்னும் நிறைய பேச வேண்டும். அதை வேறொரு இடத்தில விளக்கமாக கூறுகிறேன் இப்போது சுருக்கமாக ஒரே ஒரு உண்மையை கூறி முடிக்கிறேன்.


இயேசு என்பவர் ஒரு உண்மையான இந்து எனது தியான அனுபவத்தில் அவரை ஒரு இந்து துறவியாகவே அல்லது சித்தபுருஷராகவே நான் தரிசனம் செய்தேன் இது சத்தியமான உண்மை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்


மேலும் அவருக்கும் கிறிஸ்துவ மதத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது கிறிஸ்தவ மதத்தை உருவாக்கியாது இயேசு அல்ல பவுல் என்ற அரசியல் வாதியாகும். 


முற்றும் Contact Form

Name

Email *

Message *