ஒரு நாள் ஒட வேண்டும் !
பறக்குதுப்பார் ஏரோப்பிளான்
ஆகாசத்து மேலே - நம்ம
ஏறும் கலப்பையும் போனது பார்
பிளேன் இறங்கும் பாதை எல்லாம்
வெளிச்சம் போடுரான் - நம்ம
பிள்ளைக நடக்கும் பாதையத்தான்
இருட்டா போடுறான்
நெல்லு போட்டான் கரும்பு போட்டான்
ஒன்னும் விளையலை - அவன்
பாதி நாளை தொலைத்து விட்டான்
நிமிர முடியலை
பிளாட்டு போட்ட முதலாளிக்கு
பறக்குது பார் காரு - அதில்
பாடுபட்ட விவசாயிக்கு
பச்சை மூங்கில் தேரு
இலவசங்கள் சலுகைகள்
கண்ணை பறிக்குது - நம்பி
ஒட்டு போட்டு பதவி தந்தால்
வாழ்கை பறக்குது
விஸ்கி பாட்டில் கடையை வச்சி
விளக்கு போடுறான் - நம்ம
வீட்டுக்குள்ள எரியும் அடுப்பை
அணைச்சி போடுறான்
தண்ணி இல்லை ரோடு இல்லை
வண்டி இல்லையே - உடம்பை
அண்டி வந்த நோவை ஓட்ட
மருந்து இல்லையே
பெண்டு பிள்ளை ஒதுங்கி கொள்ள
மறைவு இல்லையே - பெற்ற
பிள்ளை குட்டி படிக்க போனால்
கூரை இல்லையே
டிவி தந்து கிரைண்டர் தந்து
பகட்டு காட்டுறாய் -படித்த
பையன் வந்து வேலை கேட்டால்
பழிச்சி காட்டுறாய்
நீ கொடுக்க வாங்கித் தின்னும்
நாங்கள் நாய்களா? - எங்கள்
கரம் இணைந்தால் ஓட வேண்டும்
ஊழல் பேய்களா
குருஐி