Store
  Store
  Store
  Store
  Store
  Store

நானே உலக அழகி!



நானே உலக அழகி!
என்னை விட அழகி
இங்கே யாரப்பா?
இருந்தாக்கா எதிரே வந்து நில்லப்பா ?
மண்ணுக்குள்ளே விளைஞ்ச
வள்ளிக் கிழங்கை போல
மரிக்கொளுந்து
வீசுகின்ற வாசம் போல
நெஞ்சுக்குள்ளே பூ பூத்து
சிரிப்பதற்கு
தெரிந்த யாரும் உண்டா
உங்க ஊருக்குள்ளே ?
மைதீட்டி அலங்கரிக்கும்
கண்கள் உண்டு
பொய் பேசா கண்களே
எனக்கு உண்டு
உதட்டுக்கு அழகான வர்ணமுண்டு
உதவாத சொற்களே அதிலே உண்டு
முகத்திற்கு பகட்டான பூச்சு உண்டு
முள்போட்டு மறைத்து வைக்கும்
முகங்கள் உண்டு
கள்ளமில்லை கபடமில்லை
களங்கமில்லை
களவு செய்யும் வழியேதும்
தெரிவதில்லை
பள்ள மேட்டில் விழுந்தாலும் கவலையில்லை
பாதியிலே செத்தாலும் பாரமில்லை
துள்ளி விழும் அருவியிலே
குதிப்பதுண்டு
துயருறுத்தும் வேளையிலும்
சிரிப்பதுண்டு
உள்ளமெல்லாம் பொங்கி வரும்
உவகையிலே
உலகத்தையே பொம்மையாக
நினைப்பதுண்டு
ஆலயங்கள் யாத்திரைகள்
போனதில்லை
ஆண்டவனை தொந்தரவு
செய்ததில்லை
கனவுகளை கற்பனையை
வளர்த்ததில்லை
கலைந்தாலும் குலைந்தாலும்
அழுவதில்லை
என் அழகுக்கு ரகசியங்கள் இதுதானடா
அத்தனையும் அசலான உண்மையடா
அதனால்தான் சவாலை வைக்கின்றேன்
என் அழகுக்கு நிகர் இங்கு யவருமுண்டா?

குருஜி

Contact Form

Name

Email *

Message *