Store
  Store
  Store
  Store
  Store
  Store

கழுத்து மாலை போடு கண்ணழகா

 



கழுத்து மாலை போடு கண்ணழகா
வெள்ளை மாடு இரண்டு பூட்டி
வீச்சுக் கோலை கையில் எடுத்து
பள்ளம் மேட்டு பாதையிலே
பாய்ந்து போகும் கண்ணழகா
கழுத்து மணி ஓசையிலே
கால் கொழம்பு சத்தத்திலே
வெழுத்து கட்டிய வேட்டியிலே
வெள்ளரிப்பூ பூக்குதையா கண்ணழகா
வண்டி வரும் ஓசையிலே
மனசு பூரா இனிக்குதைய்யா
கண்டிராத கனவெல்லாம் கண்ணழகா
கால் மொழைச்சி நடக்குதைய்யா பொன்னழகா.
-
சந்தைக்கு போயி வந்தே
சாமந்திப்பூ வாங்கி வந்தே
மொந்தையிலே கள்ளைப் போல கண்ணழகா
முகத்து மேலே முத்தம்தா கண்ணழகா
கழுத்தில மாலை இல்லை
கால்களிலே மிஞ்சி இல்லை
பழுக்காத பழத்தை தின்ன கண்ணழகா
பாதையை மறிக்கலாமா சொல்லழகn
அறுவடைக்கு காலம் வரும்
அப்பன் கையில் காசு வரும்
பொருத்திரு நாவல்பழக் கண்ணழகா
போய் வருவோம் சொர்க்கலோகம் கண்ணழகா

குருஜி

Contact Form

Name

Email *

Message *