Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழனின் தற்கால ஒப்பாரி

 



தமிழனின் தற்கால ஒப்பாரி
சிங்கம் கொலுவிருந்த
சிம்மாசனமதில்
சின்ன நரிகளும் சிற்றெறும்பு கூட்டமும்
கொலுவிருக்க வந்ததைய்யா
கொட்டம் அடிக்குதைய்யா
கண்ணுக்குள்ள விதை விதைச்சி
கண்ணீரால் பசியாற்றி
நெஞ்சுக்குள்ள பொத்தி வைச்சி
நெருப்பாலே காத்தீரே
காத்தீரே... காத்தீரே
கதிர் போல காத்தீரே... - நீங்க
காத்து வைச்ச செல்வமெல்லாம்
காணாமல் போச்சுதைய்யா
சேர்த்து வைச்ச தானியமும்
தெருவிலே விழுந்ததைய்யா
ஆற்றுக்கு குறுக்கால அணைகளை கட்டி வைச்சி
ஆற்றை கடப்பதற்கு பாலத்தை போட்டு வைச்சி
நாற்று வளர்வதற்கு வாய்க்கால வெட்டி வைச்சி
சோற்றுக்கு அலையாம தொழில்களை கூட்டி வைச்சி
நேற்றைக்கும் நாளைக்கும் நெடுங்காலம் ஒவ்வொன்றும்
காத்தீரே... காத்தீரே
கதிர் போல காத்தீரே
ஆடு மாடு மேய்த்து ஆண்டைக்கு கால் பிடித்து
காடு மேடு திரிந்து கால் கடுக்க விறகு வெட்டி
வீடும் இல்லாம விளைநிலம் இல்லாம
பாடுபடும் மக்களுக்கு பள்ளிக்கூடம் தந்தீரே
கேடுகெட்ட மக்கள் கூட்டம் கூத்தாடி பேச்சைக் கேட்டு
கூடு இல்லாத பறவைகளாய் கூறு இல்லாத பிள்ளைகளாய்
போனதய்யா... போனதய்யா...
புத்தி கெட்டு போனதய்யா
விருதுபட்டி சீமையிலே உன்னை வீழ்த்தினோம்
எறுது ஓட்டா நிலமாக எங்களை தாழ்த்தினோம்
பருப்புக்கும் அரிசிக்கும் பல்லிளிச்சி நிக்கிறோம்
உருப்படிக்கு ஆகாத உதவாக்கரை ஆகினோம்
தெருவுக்கு தெரு பிராந்தியை பெருக வைச்சி
பருவத்துக்கு வராத பாலகரை குடிக்க வைச்சி
செருப்புக்கும் ஆகாத சில்லறையாய் ஆக்கினோம்
தங்கத் தாம்பாளத்தில் தவிட்டை கொட்டியது போல்
சிங்கத்தை கூட்டி வந்து சிறு கூட்டில் அடைத்தது போல்
பொங்கல் பானையை குப்பையில் கவிழ்த்ததைப் போல்
மங்காத சூரியனை மாராப்பில் மறைத்தது போல்
எங்கள் தமிழகத்தை எருமைக் காலில் கட்டி விட்டோம்
இது குன்னக்குடி இசையல்ல குறைகளை தீர்ப்பதற்கு
இது வேளுக்குடி கதையல்ல இறையனாரை காண்பதற்கு
இது பரமக்குடி வீடல்ல பத்திரமாய் வாழ்வதற்கு
இது மன்னார்குடி கூட்டமய்யா மாபாதக கும்பலைய்யா
சதுரங்கம் விளையாடி சதிசெய்யும் சகுனி போல்
சூதுவாது செய்ய சூழ்ந்து வந்ததைய்யா.
பிறப்பூரு வந்தவங்க இறப்பூரு போவாங்க
இறப்பூருக்கு போனவங்க பிறப்பூரு வருவாங்க
தாத்தா பாட்டி சரித்திரமாய் சொல்லுவாங்க
சொன்ன கதை நிஜமாக சொர்க்கத்தை விட்டிறங்கி
வாருமைய்யா ... வாருமைய்யா
வந்து எம்மை காருமைய்யா ...
ஐயா காமராசாவே சீக்கிரமாய் வாருமைய்யா

குருஜி

Contact Form

Name

Email *

Message *