Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆடும் அமுதே...!





 ஆடும் அமுதே...!

உடுக்கை ஓசை கேட்கும் போது
உதிரக் குதிரை திமிர்கிறது - நீ
எடுத்து வைக்கும் பாத அசைவில்
எலும்புகள் நூறும் சிலிர்கிறது
சுற்றி சுற்றி ஆடும் கால்கள்
சூழ்ந்த விதியை முடிக்கிறது - என்
கற்ற அறிவும் ஞான செருக்கும்
சலங்கை ஓசையில் மடிகிறது
கங்கைச் சடைகள் வானில் விரிந்து
கர்ம மலையை சிதைக்கிறது - உன்
சங்க நாதம் கேட்கும் போது
சாப விஷங்கள் முறிகிறது
ஆடும் அருளே ஆடாத பொருளே
அமுத விஷமே ஆலமர் திருவே - என்
பாடும் நாவில் தங்கி விடு
பாவ இருளை ஒளிர விடு
-குருஐி

Contact Form

Name

Email *

Message *