காணாமல் போனேன்
வீணையை இசைத்தான் பாரதி
என் கால்சதங்கை ஜதி சொல்ல துவங்கின
என் மேனி அசைவுகள் ஒவ்வொன்றும்
என் இதழ்களிலிருந்து உதிரும் வார்த்தைகள்
கவிதைகளாயின....
கண்ணன் வந்தான்
மோகன புன்னைக தந்தான்
பன்னீர் துளிகளில் விழுந்து முளைத்த
புதிய ரோஜா மலர்கள்
மழையென பொழிய ...
வேய் குழல் எடுத்தான்
கானம் இசைத்தான்
என் ஆத்ம பறவை
அடங்கி ஒடுங்கி
அவன் காலடியில் காணாமல் போனேன்
குருஜி






