அணிலே பாடம் நடத்து
வாலில் என்ன பூச்செண்டா?
வண்ண உடம்பு வெல்வெட்டா?
காலில் என்ன சக்கரமா?
கணமும் ஓய்வு கொள்ளாதா?
ராமர் பாலம் கட்டவே
நல்ல கல்லை சுமந்தாயா?
விரலால் உன்னை தொட்டாரா?
விரும்பி கோடு போட்டாரா?
சாமி கும்பிடும் தோரணையில்
சாய்ந்தே காலை தூக்குகிறாய்
மாமி வீட்டு ஜன்னலிலும்
மாடி படியிலும் குதிக்கின்றாய்
உன்னால் மட்டும் எப்படி
ஓயாது ஓட முடிகிறது?
என்மேல் அன்பு வைத்து
எனக்கும் கற்று தாராயா ?
குருஜி