உனக்கும் எனக்கும்
முகத்தில் இறைவன் எழுதும்
தெய்வீக வரிகள்
கணக்கு பார்த்தால் முடிவில் கிடைக்கும்
கழித்தல் குறிகள்
கடந்த காலத்தை நினைக்க வைக்கும்
காலத்தழும்புகள்
சுவற்றில் போடும் பால் கணக்கு கீறல்களை
முகத்தில் போடும் கரிக்கோடுகள்
ஆண்டிக்கும் அரசனுக்கும்
பேதம் இல்லாது கிடைக்கும்
சாட்டை அடிகள்.
குருஜி