சொல்லுகொவதை கேள்...
கொண்டையை கொண்டையை சிலுப்பிகிட்டு
குப்பை மேட்டை கிளரி விட்டு
சண்டைக்கு போகமல்லுக்கு நிக்கும்
பெட்டை கோழி எல்லாவற்றையும்
கொத்தி விரட்டுறே - அந்த
முட்ட தெரியா ஆட்டு குட்டியை
முறைத்து பார்க்குறே
கிட்ட வந்த சின்ன குழந்தையை
துரத்தி ஓடுறே _ உன்னை
வெட்ட வந்த கத்தியை கூட
வெறித்து விரட்டுறே
நீண்ட காலில் கத்திக் கட்டி
நெருப்பு போல மோதுரே- உன்னோடு
சண்டை போட்ட சேவலைத்தான்
சல்லடை கண்ணா துழைக்கிரே
துண்டை கட்டிய துடுக்கு மனுஷன்
சொன்னதை தான் கேக்குரே- முடிவில்
மண்டை உடைந்து தோத்துப் போனா
வாழை இலையில் கிடக்குரே
புத்தி கெட்ட மனுஷனோட
சொல்லை கேட்காதே - கோழி
சொல்லை கேட்காதே - அவன்
கத்துத் தரும் வித்தையைத்தான்
கருத்தில் கொள்ளாதே - கோழி
கருத்தில் கொள்ளாதே
சக்தி எல்லாம் எடுத்து விட்டு
சக்கை ஆக்குவான் - உன்னை
சக்கை ஆக்குவான்
கொத்தி விட்டு ஓடி விடு
மனிதன் வேண்டாமே - உனக்கு
மனிதன் வேண்டாமே reactions:






