என்ன சுவை என்ன சுவை
ராமா உன் நாமம்
என்ன சுகம் என்ன சுகம்
ராமா உன் பாதம்
கடல் கடக்க வாயுை மைந்தன்
சொன்னது உன் நாமம்
உடல் கடந்த ஞான தேவர்
சேர்வது உன் பாதம்
கடித்த கனி சுவைத்திட வே
காட்டினிடை சென்றாய்
துடித்த மனம் குளிர்ந்திடவே
சேது பந்தம் அமைத்தாய்
படித்த ஞான அகங்கார
பாவ இருள் துடைத்தாய்
வடித்த கண்ணீர் காய்ந்திடவே
வாழ்வில் இதம் கொடுத்தாய்
குருஜி





