நானே கடவுள்
நான்
எப்படி இருப்பேன்
என்று அறிந்து கொள்ள
நீ
எப்படி இருப்பாயோ
அப்படித்தான் நானும் இருப்பேன்
நீ நாய் என்றால்
நானும் நாய்தான்
நீ நரி என்றால்
நானும் நரிதான்
சிங்கம் புலி நீ என்றாலும்
நானும் அதுவாகவே இருப்பேன்
மலரும் மணமும் நீ என்றால்
மறுக்காமல் நானும் அது தான்
மதுவும் போதையும் நீ என்றால்
மறுபடி சொல்கிறேன்
நானும் அது தான்
மனமும் எண்ணமும் நீ என்றால்
ஆமாம் ஆமாம்
அது தான் நானும்
இசையும் சுருதியும் நீயானால்
இசைந்தே நானும் அதுவாவேன்
மருந்தாய் விருந்தாய்
நீ இருந்தால்
மகிழ்ந்தே அதுவாய் நானிருப்பேன்
கடவுள் என்று நீ இருந்தால்
நானே கடவுள்
என்று சொல்வேன்
குருஜி