Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாம் தமிழர் இல்லை


 


நாம் தமிழர் இல்லை
ஏனுங்க எனக்கொரு சந்தேகம்
என்னென்னு கேட்டுத்தொலை அரிசியில் கிடக்கும் கல்லை பொருக்குவதுக்குள் கண்ணு தெறிச்சிடும் போலிருக்கு இதிலே ஒன்னோட தொணதொணப்பு வேற
கோவிச்சிக்காதீங்க வந்த சந்தேகத்தை கேட்டுத்தானுங்க ஆகணும்? அது கிடக்கட்டும் அந்த கோழிக்கு ஒரு கை அரிசி போடுங்க அரசாங்கம் இலவசமா தரும் அரிசியை அதுவும் தான் தின்னு பாக்கட்டுமே
.சரி சரி கேளு
மாடுபிடிக்கிறதை தடை செஞ்சப்போ மாட்டு இனமே அழிஞ்சி போயிடும் தமிழ்நாட்டை இனிமே காப்பாத்தவே முடியாதுன்னு அப்படி இப்படி கூவுனாங்களே இப்போ வேற மாதிரியில்லே கூவுறாங்களேன் அது ஏன்?
எப்படி கூவுறாங்க?
மாடு வெட்டக் கூடாது மாட்டுக்கறி தின்னக் கூடாதுன்னு அரசாங்கம் போட்ட சட்டத்தால மாட்டு வியாபாரம் கெட்டு போயிடும் மாடு கன்னுங்களை வளக்கவே முடியாது விவசாயி அம்புட்டுத்தான்னு பேசுறாங்க
இதிலே உனக்கென்ன சந்தேகம் ?
அடிமாடாய் போகாம காப்பாத்த ஜல்லிகட்டு நடத்துங்க என்றாங்க அடிமாட்டை வெட்ட தடை போட்டா அதுக்கும் குதிக்கிறாங்க இதுஎன்ன முறை?
அடியேய் பேசாம வாயை மூடிகிட்டு வேலையை பாரு இதுவெல்லாம் பெரிய மனுஷனுங்க சங்கதி ஏடாகூடமா கேள்வி கேட்டா உன்னையும் என்னையும் தமிழர்களே இல்லைன்னு சொல்லிடுவாங்க

குருஜி

Contact Form

Name

Email *

Message *