டெல்லி கவர்மெண்ட்டு
புதுசா அச்சடித்த
சிவப்பு காகிதத்தை
ஆர்.கே.நகரில் தானே
முதல் முதலாய் பார்த்தேன்
மருமகளுக்கு புதுச்சேலை
பேரப் பசங்களுக்கு
போட்டுக்க நல்லத் துணி
இன்னும் என்னன்னவோ
வாங்கலாம் என்றிருந்தேன்
யாரோ தேர்தல் கமிஷனாம்
தேர்தலே வேண்டாம் என்றானாம்
இப்போ நான் என்ன செய்யுறது?
கொடுத்த காசை திருப்பிக் கொடுன்னு
கட்சிக்கார அண்ணாச்சி
கண்டிசனாய் கேட்டா
நான் எங்கே போகுறது?
டீயும் பன்னும் தான்
நிறந்தர ஆகாரமா?
கறியும் சோறும் தின்னா
கடவுளுக்கு ஆதாதா?
குருஜி