அன்புள்ள உஜிலாதேவி வாசகர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் இறைவனின் பேரருள் பெருங்கருணை பெருக்கெடுத்து ஓடி பல நன்மைகளை ஒவ்வொருநாளும் செய்யட்டும்.
நாம் வெளிச்சத்தைக் கொடுப்போம் என்ற தலைப்பில் பார்வை இல்லாத சக்திவேல் என்பவருக்கு வாழுவதற்கு வீடு கட்டி கொடுப்பதற்கு நிதி உதவி கேட்டு பதிவு எழுதி இருந்தோம் அதை படித்து விட்டு அன்பர்கள் பலர் தங்களால் முடிந்த உதவியை ஆர்வத்தோடு செய்து வருகிறார்கள்.
மிக குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மாதம் ரூபாய் இரண்டாயிரம் கூட வருவாய் இல்லாத திருவாரூரை சேர்ந்த சரவணன் என்ற அன்பர் நூறு ரூபாய் நன்கொடை அனுப்பி இருந்தார் அவர் கொடுத்த தொகை சிறியது என்றாலும் அவரது மனம் மிகவும் விசாலமானது கருணை மயமானது என்பதை புரிந்த போது கண்களின் ஓரத்தில் கசிந்த ஈரத்தை சொல்லாமல் இருக்க முடியாது. அவர் இந்த அறப்பணிக்கு கொடுத்த செல்வத்தை பல லட்சமடங்காக இறைவன் அவருக்கு திருப்பி கொடுப்பான் என்று நமது குருஜி அவர்கள் அவரை ஆசீர்வாதம் செய்தார்.
இதுவரை இந்த பணிக்காக ஜெர்மனை சேர்ந்த திருமதி சிவம் அம்மையார் கொடுத்த ரூபாய் பத்தாயிரம் உட்பட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செல்வநாயகம் கலாநிதி ரூபாய் பத்தாயிரம் கோவை இராமநாராயணன் ரூபாய் பத்தாயிரம் அபுதாபியிலிருந்து எ.கே.ராஜு அவர் நண்பர் நஷீர் அஹகமது இருவரும் சேர்ந்து ரூபாய் இருபதாயிரம் பெங்களூர் விஜயராகவன் ரூபாய் ஐயாயிரம் சென்னை ஸ்ரீதரன் ரூபாய் ஐநூறு ஊர் பெயர் குறிப்பிடாத திருமாறன் ரூபாய் ஆயிரம் மற்றும் கார்த்திக் குமார் ரூபாய் ஐநூறு திருவாரூர் சரவணன் ரூபாய் நூறு என்று ஆக மொத்தமாக ரூ 57,100/- மட்டுமே நிதியாக வந்துள்ளது
ஒரு இணையதளத்தில் எழுதி இந்த அளவு நிதி சேர்ந்திருக்கிறது என்றால் நிச்சயம் இதுவொரு சாதனை சிறப்பான பங்குபணி என்று சொல்ல வேண்டும். ஆனாலும் இன்றைய சூழலில் சிமென்ட், கம்பி, ஆற்று மணல், ஆள் கூலி ஆகியவைகள் சாதாரண மனிதர்களால் எட்டிபிடிக்க முடியாத ஆகாயத்தில் இருக்கிறது. எனவே திரு சக்திவேலுக்கு ஓரளவு சுமாரான வீட்டையாவது அமைத்து கொடுக்க வேண்டுமானால் இன்னும் குறைந்தது நாற்பதாயிரம் ரூபாயாவது தேவைப்படும் இவ்வளவு தூரம் உதவி செய்த நல்ல இதயங்கள் இருக்கும் போது இன்னும் சிறிது தூரத்திற்கான உதவிகளை செய்வதற்கு மனங்கள் இல்லாமல் போகாது.
எனவே ஒரு மனிதனை அதுவும் முடியாத மனிதனை மழை, வெயில், பனி இவற்றிடமிருந்து பாதுகாக்கும் ஒரு வீட்டில் குடியமர்த்த அவன் வாழ்வில் ஒரு நம்பிக்கை விளக்கை ஏற்றி வைக்க இன்னும் சிறிது உதவி செய்யுங்கள் நீங்கள் செய்கின்ற இந்த உதவிக்கு இறைவன் உங்களுக்கு பல மடங்கு கொடுப்பான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் வெற்றியும் நிறைந்திருக்க எப்போதும் துணை செய்வான் நீங்கள் உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கியில் சக்திவேல் காத்திருக்கிறார் நாங்களும் அவரோடு சேர்ந்து காத்திருக்கிறோம்
திரு சக்திவேலுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கவும்
Sri Gurumisson Trust
A/c No; 0106301000037820
IFSC Code; LAVB0000106
The Lakshmi Vilas Bank LTD
Arakandanallur
A/c No; 0106301000037820
IFSC Code; LAVB0000106
The Lakshmi Vilas Bank LTD
Arakandanallur
மேலும் விபரங்களை அறிய Click Here
இப்படிக்கு
வி.வி.சந்தானம்
காரியதர்சி ஸ்ரீ குரு மிசன் அறக்கட்டளை
காடகனூர்