இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..
ஜிகாத் என்பது மாற்று மதத்தினரை கொல்லுகிற செயலா?
என்ற கேள்விக்கு நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தந்தவர் திரு பன்னலால் ஜெயின் அவரை குருஜியின் சார்பில் பாராட்டுகிறோம் அவருக்கான பரிசினை நேரில்வந்து குருஜியின் கைகளால் பெற்றுகொள்ளலாம் அல்லது அவரது வங்கி முகவையை அனுப்பினாலும் நாங்கள் அதில் செலுத்தி விடுகிறோம்.
பன்னலால் ஜெயினின் பதில் இதோ
பன்னலால் ஜெயினின் பதில் இதோ
திருக்குரான் அன்றும் இன்றும் மனிதர்களால் தவறான பார்வையில் பார்க்கப்படும் நூலாக இருப்பது அதன் துரதிஸ்டமே ஆகும். முதலில் குரான் அரசியல் நூல் அல்ல அறம் காட்டும் நூலும் அல்ல அது ஆத்மாவை பந்தங்களிலிருந்து விடுவிக்கும் ஆன்மீக நூல். இறைவனால் அருளப்பட்ட அதன் வாசகங்களை இறை கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டுமே தவிர நமது சொந்த கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது. அப்படி செய்தால் நமது உள்ளங்கையால் காற்றை அளந்தது போல ஆகிவிடும். அந்த வகையில் நான் ஜிகாத்தை பார்க்க வேண்டும். ஜிகாத் என்பதற்கு குரானிலேயே நல்ல விளக்கம் இருக்கிறது. கடவுளை நம்புகிரவனுக்கும் நம்பாதவனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் என்பதே ஜிகாத் என்ற வார்த்தையின் பொருளாகும். நம்பிக்கையும் அவ நம்பிக்கையும் நமக்குள்ளேயே இருக்கிறது ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஜிகாத் நடத்தி நம்பிக்கையை வெற்றி பெற செய்ய வேண்டும். அதுவே வாழ்வு என்ற புனித போரை நடத்துவதற்கு இலக்கணமாகும். இது நபிமொழி அல்ல இறை மொழி என்ற நோக்கில் பார்த்தால் இப்போது கூறப்பட்ட இந்த பொருள் தான் தெளிவாக தெரியும்.
பன்னலால் ஜெயின்
கோவை
|