Store
  Store
  Store
  Store
  Store
  Store

பேய் மழை வந்தால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்...?


இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..


ஐநா ஆய்வு சொல்வது போல் இன்னொரு பேய் மழை வந்தால் மக்களை காப்பாற்ற அரசாங்கம் செய்ய வேண்டிய செயல்கள் என்ன...?

     என்ற கேள்விக்கு நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தந்தவர் திரு முருகவேல்.  அவரை குருஜியின் சார்பில் பாராட்டுகிறோம் அவருக்கான பரிசினை நேரில்வந்து குருஜியின் கைகளால் பெற்றுகொள்ளலாம் அல்லது அவரது வங்கி முகவையை அனுப்பினாலும் நாங்கள் அதில் செலுத்தி விடுகிறோம்.

முருகவேலின் பதில் இதோ 

   

    திகளை தேசியமமாக்குதல் என்பது நல்ல திட்டம் என்றாலும் கூட மாநில அரசியல் குளறுபடிகளால் அது உடனடியாக சாத்தியம் இல்லாத வாய்ப்பாக இருக்கிறது எனவே திராட்சை பழுக்கும் வரை காத்திருக்காமல் வெள்ளரி பலத்தை தேடுகிற நரிக்கூட்டம் போல நாம் ஊள்ளூர் ஆறுகளை இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நூறு வருடத்திற்கு முன்பு என்ற நிலைகூட வேண்டாம் இருபது வருடத்திற்கு முன்பு என்னனென நீர் நிலைகள் எங்கெங்கே இருந்ததோ அங்கெல்லாம் புதியதாக முளைத்திருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதில் குடுசை கோபுரம் என்ற பாகுபாடு பார்க்கவே கூடாது. நீர் வரத்து பாதை கழிவு நீர் செல்லுகிற பாதை நீர் வடிகிற பாதை அனைத்தும் ஆகாய தாமரை உள்ளிட்ட இயற்கை ஆக்கிரமிப்புகாலிருந்தும் குப்பை கூளங்கள் என்ற செயற்கை ஆக்கிரமிபுகளிருந்தும் காப்பாற்ற பட்டு சுத்தபடுத்த வேண்டும். நகரத்தை தரை மார்க்கமாக விரிவாக்கம் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு மேல்நோக்கி மும்பையை போல் விரிவாக்கம் செய்ய வேண்டும். அனைத்திற்கும் மேலாக கீழ்த்தரமான அரசியலை விட்டுவிட்டு மக்கள் நலனிலும் நகரத்து நலனிலும் விஞ்ஞான பார்வையோடும் மனித நேய அணுகுமுறையோடும் உண்மையாக செயல்பட்டால் இந்த மழை என்ன இதைவிட பெரிய மழை வந்தாலும் கூட சென்னையை தாங்கும் சக்தியாக மாற்றலாம். அதை விட்டு விட்டு வீண் விவாதங்களை தொடர்ந்து கொண்டிருந்தாள் சென்னை எப்போதுமே தாக்கப்படும் சக்தியாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


முருகவேல். 
துபாய் 






Contact Form

Name

Email *

Message *